அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆய்வு

alp

என்னை வியக்க வைத்த அக்சய லக்கின பத்ததி
என் பெயர் ஸ்ரீமதி வனிதா நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்து இந்த ஜோதிட துறையில் இருபது வருடங்களுக்கு முன் கால் பதித்தேன் . இறைவன் ஆசியுடன் நான் பார்த்து பலன் சொன்ன ஜாதகங்கள் பலித்ததால் எனது ஜோதிட ஆசான் எனக்கு வாக்கு வனிதா என பெயரிட்டு மகிழ்ந்தார், நான் மலேசியாவிலும் இந்தியாவிலும் முறையாக ஜோதிடம் பயின்றவள், ஆய கலைகள் அறுபத்தி நான்கு அவற்றில் எட்டாம் இடத்தை பிடித்தது இந்த ஜோதிடம் . நான் பிறந்த என்னும் 8 என்பதால் இந்த ஜோதிடத்தில் ஆர்வம் வந்ததோ என்னவோ? .
என் குடும்பத்தில் யாரும் ஜோதிடர் கிடையாது . இந்த துறையில் நான் தான் பிள்ளையார் சுழி போட்டு உள்ளேன். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் என் கணவர் நான் ஜோதிடம் படிக்க போகிறேன் என்று வகுப்புகளுக்கு சென்று வந்து கொண்டிருந்தார் . ஒரு நாள் என் கணவரின் மேஜையை சுத்தப்படுத்திக்கொண்டு இருந்த பொழுது என் கண்ணில் குடும்ப ஜோதிடம் என் கண்ணில் அகப்பட்டது. எனக்கு எப்போதுமே படிப்பதில் ஆர்வம் அதிகம் விடுவேனா ஆனால் என் கணவர் தனது புத்தகங்களை யாருக்கும் கொடுக்க மாட்டார் கொடுத்தால் திரும்ப வராது என்று உணர்ந்த அனுபவம் .
கேட்டால் கொடுக்க மாட்டார் என்பதால் கணவர் வேலைக்கு சென்றதும் அந்த புத்தகத்தை திருட்டுத்தனமாக படிக்க ஆரம்பித்தேன் அதனுள் இருந்த பல விஷயங்கள் எனது ராசி நட்சத்திரத்திற்கு பொருந்துவதை கண்டேன் . ஒரு நாள் என் கணவருடன் அவரது வகுப்பிற்கு சென்றேன் கலந்து கொண்டேன். அங்கு ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினேன். அங்கு இருந்த அனைவருமே புதிதாக ஜோதிடம் பயில வந்தவர்கள் என்பதால் அவர்கள் மத்தியில் நான் ஹீரோவாக திகழ்ந்தேன். அந்த ஆசிரியர் என்னை வகுப்பில் கலந்து கொள்ள சொன்னார் .அதற்கு என் ஆழ்மனம் இடம் தரவில்லை வேணாம் சார் நன்றி என்று கூறி மறுத்து விடடேன். இருப்பினும் எனது ஆழ்மனதில் ஏற்பட்ட தீ அடங்கவில்லை இதற்கு இடையில் மலேசியா தமிழ் நாளிதழில் நீங்களும் ஜோதிடம் பயிலலாம் என்ற விளம்பரம் வெளியாகி இருந்தது அதில் தொடர்புக்கு திரு MG சேகரன் மற்றும் இன்னொரு என்னும் இருந்தது விபரம் தெரிந்த நாளில் இருந்து நான் MGR ரின் தீவிர ரசிகை நான். உடனே என் கணவரிடம் அந்த விளம்பரத்தை காட்டி திரு MG சேகரன் சாரை தொடர்புகொண்டு பேசுங்கள் என்றேன் . என் கணவரும் நீ ஜோதிடம் படிக்க போகிறாயா என்று கேட்டார் நானும் உடனே சம்மதித்தேன்.
ஒரு திங்கள் கிழமை அன்று என் கணவர் அந்த ஜோதிட வகுப்பிற்கு அழைத்து சென்றார். அங்கு சென்றபொழுது ஒரு 50 பேர்கள் புதிய மாணவர்களாக குழுமி இருந்தனர் அத்தனை பேரில் நான் ஒருவரே பெண்..ஒவ்வொருவராக எல்லோரும் தங்களை அறிமுக படுத்திகொண்டிருந்தனர். என் முறை வந்தது நானும் என்னை அறிமுக படுத்தி கொண்டேன், ஆசிரியர் என்னை நோக்கி இத்தனை பேர்களில் நீங்கள் மட்டுமே பெண் நீங்கள் என் பெண்கள் இருக்கும் துறையை தேர்ந்தெடுக்காமல் இத்துறையை தேர்ந்து எடுத்தீர்கள் என்று கேட்டார். உடனே சற்றும் தாமதிக்காமல் ஆண்களே கோடி கட்டி இருக்கும் இருந்தா துறையில் பெண்ணாகிய நானும் தடம் பதித்து கோடி நாட்ட விரும்புகிறேன் என்று கூறினேன் இப்படி தான் என் ஜோதிட பயணத்தில் அடி எடுத்து வைத்தேன்.
அன்று கூறியதை போல் இரவு பகல் பாராது கருத்தூன்றி மலேசியா மற்றும் இந்தியாவில் கற்று தேர்ந்து எனக்கு என்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி பெண்ணால் ஜோதிட துறையில் சாதிக்க முடியும் என்று நிரூபித்தேன். இடையில் என் மகள் வளர்ந்து பள்ளிக்கு சென்றால் முழுநேரமாக இருந்த எனது ஜோதிட தொழில் பகுதி நேரமானது .இருப்பினும் எனது ஜோதிடத்தை நான் விடவில்லை. நான் மக்களுக்கு கூறிய பலன்கள் பலித்தாலும் எனக்குள் ஒரு திருப்தி இல்லாமால் முழுமை அடையாமல் மனதை அரித்துக்கொண்டே இருந்தது .
கடந்த ஆண்டு ஜோதிடத்தில் என் நிலையை உயர்திக்கொள்ளனும் என்னை நம்பி வரும் மக்களுக்கு உண்மையான திருப்திகரமான பலனை கூற வேண்டும் என்று தினமும் இறைவனிடம் கூறுவேன் . அப்படி இருந்த சூழ்நிலையில் தான் நான் உயர்திரு பொன்னுடை மூர்த்தி சாரின் விடியோவை (YOUTUBE ) பார்த்தேன் பத்தோடு பதினொன்றா என்று நினைத்தேன் முதலில் . பிறகு மனுஷன் என்னதான் சொல்ல வாராருனு கேட்போம் என்று ஆரம்பித்த நான்தான் இன்று உங்களுக்கு முன் அமர்ந்து எனது கட்டுரையின் மூலம் பேசிக்கொண்டு இருக்கின்றேன்.
ஆம் மலேசியாவில் இருந்து கொண்டு அவர் பேச பேச அதுவும் அந்த லக்கினம் வளரும் என்று பேச பேச எதோ நாம் தேடி கொண்டு இருந்தது நம்மை தேடி வந்து விட்ட்து போல் ஒரு உணர்வு அவரது எல்லா வீடியோ வையும் பார்த்தேன், தொலைக்காட்சியில் இருந்த எங்களை தொர்புகொண்டேன் கிடைக்கவில்லை உடனே சென்னையில் இருக்கும் எனது நண்பரை தொடர்பு கொண்டு பேசினேன் எனக்கு எப்படியாவது அக்சய லக்கின பத்ததி புத்தகமும் அதன் மென்பொருளும் வேண்டும் என்றேன் அதற்கு அவரோ எனக்கு மூர்த்தி சாரை தெரியும் அதற்கு நான் ஆவண செய்கிறேன் என்று கூறி குறுகிய காலத்திலே மூர்த்தி சார் எனக்கு புத்தகமும் மென்பொருளும் மலேசியாவிற்கு எனக்கு அனுப்பி வைத்தார்
ஒரு விநியோகிப்பாளர் இந்த வேலை செயதால் பரவாயில்லை ஒரு கண்டுபிடிப்பாளரே காலத்தில் இறங்கி வேலை செய்வதை பார்க்கும் போது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. புத்தகத்தை படித்து மென்பொருளை வைத்து நீங்களே படித்து கொள்ளுங்கள் என்று சொல்லுவார் என்று சொல்லுவார் மற்றவர்களை போல என்று நினைத்தேன் ஆனால் அந்த மாமனிதரோ சற்றும் பந்தா எதுவும் இல்லாமல் அவரே எனக்கு அந்த மென்பொருளை இந்தியாவில் இருந்து மலேசியாவில் இருக்கும் என் மடிக்கணினியில் அந்த மென்பொருளை இயக்க வைத்து எனக்கு அவ்வப்பொழுது இந்த அக்சய லக்கினம் பார்க்கும் முறையை எனக்கு படிப்படியாக கற்று தந்தார்.
இப்படி நான் படித்துக்கொண்டிருக்கும் போது அக்சய லக்கின பத்ததி மிகவும் துல்லிதமாகவும் இலகுவாகவும் பலன் உரைப்பதை கண்டு நான் வியந்தும் நெகிழ்ந்தும் போனேன். மூர்த்தி சார் இதை உருவாக்க எவ்வளவு பாடு பட்டார் என்பதை அவருடன் பயணிக்கும் போது நீங்களே உணருவீர்கள். நிச்சயமாக ஒரு சாதாரண மனிதரால் இப்படி பட்ட ஒரு உன்னத படைப்பை தர முடியாது அவர் நினைத்திருந்தால் இந்த அவர் மட்டுமே பயன் படுத்தி தான் மட்டும் கோடி கோடியாக சம்பாதித்து இருக்க முடியும் அவ்வளவு ஏன்அவர் நினைத்திருந்தால் இந்த அறிய கண்டு பிடிப்பை வெள்ளையர்களிடம் கொடுத்திருந்தால் …….. அவர் அப்படி நினைக்க வில்லையே தனது மக்களும் நாடும் நலமாகவும் இருக்க அவர் தனது இந்த அறிய கண்டு பிடிப்பை பகிர்ந்து கொள்ள அவர் தயாராக இருக்கிறார். பெற்று கொள்ள நாம் தயாரா ? அது மட்டுமா இந்த லோக்டவுன் சமயத்தில் அவர் எங்களுக்கு எல்லாம் பாடம் நடத்தினார் மேலும் மென்பொருளிலேயே அதை பார்த்து பலன் சொல்வது எப்படி என்று உருவாக்கி உள்ளாரே அவருக்கு இந்த மனிதர்களே நன்றி கடன் பட்டுள்ளோம்
ஆம் இதுநாள் வரை நாம் அனைவரும் கிரகங்களின் பிடியில் அகப்பட்டு மீண்டு வருவது எப்படி என்ற சூட்சுமத்தை அறியாமல் இருந்தோம். ஆனால் மூர்த்தி சாரின் இந்த அறிய கண்டு பிடிப்பு நவகிரங்களையும் நாம் பணிந்து சூட்சுமமாக நாம் எப்படி அதன் பிடியிலிருந்து பிடியிலிருந்து நம்மை காத்து கொள்வது மேலும் தொழில் தவறான நேரத்தில் துவங்கி நஷ்டமாகாமல் தவிர்ப்பது எப்படி என்றும் சொல்லி இருக்கின்றார் மேலும் தவறான நேரத்தில் பங்கு சந்தையில் ஈடுபட்டு பணத்தை இழக்காமல் இருக்கலாம் என்று சூட்சுமமாக சொல்லி இருக்கின்றார். இப்படி நான் சொல்லிக்கொண்டே போனால் இதுவே ஒரு தனி புத்தகமாக மாறிவிடும் என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன் . என்னை வியக்க வைத்த அட்சய லக்கின பத்ததியை ஒரு உதாரண ஜாதகத்தோடு ஒரு ஆய்வு கட்டுரையில் விளக்குகிறேன் நீங்களும் என்னை போல் வியந்து போவீர்கள்.

வாழ்க மூர்த்தி சார் . வளர்க அவரது அறிய கண்டுபிடிப்பான அக்சய லக்கின பத்ததி. ஓங்குக அவரது புகழ் எட்டு திக்கிலும்.

நன்றி வணக்கம் .
மலேசிய ALP ஜோதிடர் ஸ்ரீமதி வாக்கு வனிதா.