அட்சய லக்ன பத்ததி பாகம் 2

alp

அனைவருக்கும் வணக்கம் இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும் பெற வேண்டும்

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

கடந்த வருடம் அட்சய லக்ன பத்ததி பாகம்-1 நூல் வெளியீட்டு விழா பிள்ளையார்பட்டியில் ஸ்ரீ கற்பக விநாயகரின் பேரருள் பெருங்கருணையினால் சுற்றமும், நட்பும், ஜோதிட நண்பர்கள் சூழ மிகச் சிறப்பாக நடைபெற்றது

ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் , உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஒரு வருட காலமாக நான் எதிர்பார்த்த மிகப்பெரிய அட்சய லக்ன பத்ததி பாகம்2 ஆம் நூலை எழுதுவதற்கு காலம் எடுத்துக் கொண்டேன்

நீண்ட தூரப் பயணத்தில் என்னுடைய சிறு முயற்சி. நான் பெற்றதை, நான் அறிந்ததை, கடவுள் எனக்கு கொடுத்ததை என்னுடைய சமூகத்திற்கும், ஜோதிட சொந்தங்களுக்கும் இந்த நூலை சமர்ப்பிக்கிறேன்

அட்சய லக்ன பத்ததி பாகம் 1 வளரும் லக்கனம் அல்லது வயது லக்கனம் நடப்பு லக்னம் இது சார்ந்த விஷயங்களை நகரும் தன்மைகளை கணக்கீடு செய்யும் முறைகளைப் பார்த்தோம்.

அதேபோல் இரண்டாம் நூல் ராசிகள் நகரும் விதம் அதன் தன்மை மற்றும் அட்சய லக்னத்திற்கு, அட்சய ராசி அமையும் விதம் அதுசார்ந்த பலன்களை எடுத்துரைப்பது இந்த நூலாகும்.

அட்சய லக்ன பத்ததி பாகம்-2 நீண்ட காலமாக நான் எதிர்பார்த்த கருத்துக்களை கொடுக்க, இறைவன் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி கூறுகிறேன்.

நான் எழுதிய நூல் வளரும் ஜோதிடர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அட்சய லக்னம், அட்சய ராசி இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்த இந்நூல் ஒரு மாற்றத்தையும், துல்லியமான பலன்களையும் கொடுக்கும் என்றால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.

அட்சய லக்ன பத்ததி பாகம்2

சார்வரி வருடம் ஆனி மாதம் 6ம் தேதி 20/06/2020 சனிக்கிழமை காலை சிவகங்கை மாவட்டம், சொக்கநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா உக்கிர பிரத்யங்கிரா தேவி சர்வ சக்தி பீடத்தில் எளிய முறையில் இந்த நூலை வெளியீடு செய்கிறேன்.

இக்கட்டான சூழ்நிலையில் புத்தத வெளியிட்டிற்கு ஜோதிட நண்பர்களை அழைக்க முடியாதயதற்கு வருந்துகிறேன். ஆனாலும் எங்கு இருந்தாலும் ஜோதிட நண்பர்களின் ஆசியோடு இந்நூல் வெளிவருகிறது.

மீண்டும் இனியதொரு நன்னாளில் நண்பர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்போடு அட்சய லக்ன பத்ததி பாகம் 3 வெளியிடப்படும் என்பதை இந்த நேரத்தில் கூறிக்கொள்கிறேன்.

நன்றி