அரசியலில் எந்த லக்னம் எப்படி வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.https://youtu.be/PN5fZP38lJA

https://youtu.be/PN5fZP38lJA
அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததி யில் ஒரு ஜாதகருக்கு லக்னம் எப்படி நகர்கிறது.
அரசியலில் எந்த லக்னம் எப்படி வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.அரசியலில் 10 பேர் நிற்கக்கூடிய ஜாதகத்தில் ஒருவருக்கு விரையமாகும் ஜாதகமும் இருக்கும்.அதாவது 10 பேரில் ஒருவர் தான் அந்த இடத்தில் வெற்றி பெற முடியும்.
10 பேர் இருக்காங்க நான் பத்து பேருக்கும் ஒவ்வொரு விதமான ஜாதகம் ,
உதாரணமாக ABC,
“A “என்பவரிடம் நீங்க ஜெயிச்சுடுவிங்க, உங்களுக்கு அட்சய லக்கனம், தசாபுத்தி, அட்சய ராசி, கோச்சாரம், எல்லாமே நல்லா இருக்கு அப்படின்னு நான் சொல்றேன்.அட்சய லக்னத்திற்கு 7ம் அதிபதி, 11ஆம் அதிபதி, 3ம் அதிபதி சம்பந்தப்பட்டால்வெற்றி வாய்ப்பு எளிமையாகிவிடும்.
3 சமூகம் சார்ந்த விஷயங்கள், 7 சமூகம் சார்ந்த தொடர்புகள், 11வெற்றி மகிழ்ச்சி லாபம்,மூன்று, ஏழு பதினொன்று, 8ம் இடத்தில் சம்பந்தப்பட்டால் திடீரென்று யோகம் ஏற்படும்.

“B” என்பவர் ஒரு வரிடம் ஜாதகம் பார்க்க செல்கிறார்,இன்னொரு ஜாதகர் உங்களுக்கு யோகமான நிலை தான் என்கிறார்.

“C “என்பவர் இன்னொருவரிடம் ஜாதகம் பார்க்க செல்கிறார் அவருக்கும் யோகமான நிலை என்று கூறுகிறார்.
ஆனால் இந்த மூன்று ஜாதகமும் தனிப்பட்ட அமைப்பை சார்ந்தது.

மூன்று பேருடைய ஜாதகத்தை வைத்துதான் ஜெயிப்பார்களா, தோர்ப்பார்களா ,வெற்றியா என்பதை தீர்மானிக்க முடியும்.மூன்று பேர் பார்த்த முறைகளும் சரிதான் .அது அவர்களுடைய கிரக அமைப்பைப் பொறுத்து கூறியது. இந்த மூன்று பேரில் ஒருவர் மட்டும்தான் ஜெயிக்க முடியும். நான் சொல்வது என்னுடைய நண்பர் ஜாதகம் பலமாக இருந்தால் அவர் தான் ஜெயிப்பார்.
பிரசன்னம் பார்கும் முறையிலும் இருவரில் யார் ஜெயிக்கலாம், யார் தோற்கலாம் என்பது கூற முடியும்.

உங்களுடைய கருத்துகளை பதிவு செய்யுங்கள். இது என்னுடைய தாழ்மையான கருத்து,தனிப்பட்ட கருத்து.
காலம் நல்லவர்களுக்கு வழிவிடும் என்பது தான் என் கருத்து.
மீண்டும் ஒரு நல்லதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.