ஆருடம்

பிரபஞ்ச ஜோதிடம் பகுதி- 6

★★★★★★★★★★★★★★

இன்றைய பிரபஞ்ச ஜோதிடத்தில் வெற்றிலை ஆருடம் மூலம் பலன்

பார்ப்பது பற்றி பார்ப்போம்.

இன்று தாய் தந்தை மகனுடன்

ஜாதகம் பார்க்க வந்தார்கள்

பெயர் பொருத்தம் பார்க்க வேண்டும் பார்த்து கூறுங்கள் என கூறி கொண்டு தாம்பூல தட்சணையை மேசையின் மீது வைத்தார்கள். இருவருக்கும் ஜாதகம் இல்லையா என கேட்டேன்.ஆம் ஐயா

ஜாதகம் இல்லை அதனால் தான்

பெயர் பொருத்தம் பார்த்து திருமணம்

செய்யலாம் என கேட்க வந்தோம்

என கூறினார்கள்.

சரி என மேசையின் மேல் இருந்த இரு வெற்றிலையை எடுத்து பார்த்தேன்.

அதில் முதலில் இருந்த வெற்றிலையை

எடுத்தேன் ஆண் வெற்றிலையாக

இருந்தது. நீங்கள் உங்கள் பெண்ணிற்கு இந்த ஆணை திருமணம் முடிக்கலாமா?

என கேட்க வந்துள்ளீர்கள். நீங்கள்

பொண்ணுக்கு சொந்தமா என கேட்டேன்.

ஆமாம் ஐயா நாங்கள் பெண் வீட்டார்கள்

என கூறினார்கள்.

அடியில் இருந்த இரண்டாவது வெற்றிலையை எடுத்தேன். அதில் நுனி கிழிந்திருந்தது. இந்த பொண்ணுடைய

வீட்டில் தந்தை இல்லையா?வசதிகள் குறைந்த குடும்பமாக என கேட்க

ஆம் பெண்ணின் தந்தை இல்லை

வசதி வாய்ப்புகள் அவ்வளவாக

இல்லை என்றும் நாங்கள் பெண்ணின் பெரியம்மா பெரியப்பா என கூறினார்கள்.

முதல் வெற்றிலை பரந்து நல்ல பெரிய வெற்றிலையாக இருந்ததால் மாப்பிள்ளை வீட்டார் வீடு நிலம் வாகன

வசதிகளுடன் நல்ல நிலையில் உள்ளார்கள். கஷ்டபட்டு உழைத்து

முன்னுக்கு வந்த குடும்பம் நீங்கள் தாராளமாக உங்கள் பெண்ணிற்கு

இந்த பையனை மணம் முடிக்கலாம்

என கூறினேன்.

பெண்ணின் பெயர் கௌசல்யா நாம நட்சத்திரபடி பூசம்

ஆணின் பெயர் சுந்தர்ராஜன் நாம நட்சத்திரபடி அசுவினி

நாமநட்சத்திரபடி பெயர் பொருத்தமும்

8/11 இருந்தது.நல்ல பொருத்தம் சிறப்பான மணவாழ்வு அமையும் என கூறினேன்.மிக்க மகிழ்ச்சி சார்.

மாப்பிள்ளை வீட்டார் கடந்த சில தினங்களில் பெண் பார்த்து சென்று

விட்டார்கள் நாங்கள் நாளை மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல இருக்கிறோம்.

நல்ல நேரம் பார்த்து கூறுங்கள் என கேட்க நல்ல நேரம் பார்த்து கொடுத்தேன்

மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.

அடுத்து ஒரு இளைஞர் உள்ளே வந்தார்

சார் வெற்றிலை பாக்கு வாங்கிவர வேண்டுமா இருங்கள் வாங்கி வருகிறேன் என கூறிவிட்டு உடன் வாங்கி வந்து தட்சணை வைத்தார்.

முதல் வெற்றிலை சிறியதாகவும்

ஆண் வெற்றிலையாகவும்,இரண்டாவது வெற்றிலை பெரியதாகவும் பெண்

வெற்றிலையாகவும் இருந்தது.

உழைப்பிற்கு ஏற்ற சம்பளம் இல்லை

தொழிலில் குழப்பம்,வேலை விசயமாக

கேட்க வந்தீர்களா என கேட்டேன்.

ஆமாம் சார் என்று பதில் அளித்தார்.

அந்த இளைஞருக்கு 25 வயது தான்

இருக்கும். உங்களுக்கு முதலில் ஆண்

இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததா என கேட்டேன். எப்படி ஐயா

ஜாதகத்தை பார்க்காமலேயே கூறுகிறீர்கள் என கேட்டார் இது தான்

அற்புத மகிமை வாய்ந்த வெற்றிலை ஆருடம் என கூறினேன்.

நன்றி வணக்கம்

மீண்டும் மற்றொரு பிரபஞ்ச ஜோதிடத்தின் சூட்சுமங்களை அறிவோம்

அன்புடன்

மோகை.அஸ்ட்ரோ ஸ்ரீ ஜி சக்திகுரு

நாமக்கல்