இன்றைய இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட தயாரிப்பாளர்

இன்றைய இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் உயர்திரு ஏ.எம்.இரத்தினம் ஸ்ரீ சூர்யர் மூவிஸ் மற்றும் ஸ்ரீ சாய் கிரியேஷன் அவர்களை நீண்ட நேர சந்திப்பு மற்றும் அடுத்த படத்திற்கான கருத்துக்களை சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கலந்துரையாடிய தருணம் மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது.

ஜோதிடத்தின் மீது உள்ள நம்பிக்கைகள் அதன் கிரகங்களின் காரகத்துவங்கள் மற்றும் சில ஜோதிடத்தின் சூட்சமங்களை கூறும்போது ஜோதிடத்தில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார் மேலும் கிரகங்கள் படங்களின் ஏற்பட்டுள்ள தாக்கங்களும் தலைப்பு இயக்குனர் நடிகர் நடிகை இவ்வளவு முயற்சிகளிலும் ஒரு சினிமா வெளிவரும்போது அதன் கட்டமைப்பு ஜாதகத்தை எடுத்துக் கூறும் போதும் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஜாதக அமைப்பும் படங்களின் சூட்சமங்களும் எடுத்துக் கூறியபோது அதிலுள்ள சூட்சமங்களை கேட்டு தெரிந்து கொண்ட விதம் மகிழ்ச்சி அளித்தது.

நானும் என்னுடைய நண்பர் கோயம்புத்தூர் சஞ்சீவிகுமார் அவர்களும் நீண்ட நேர உரையாடல் வருங்காலத்தில் 2018, 2019 இல் படத்தின் பெயர்களும் படத்தின் இயக்குனர், படத்தின் கதாநாயகன்,கதாநாயகி தேர்வு செய்யும் பொது உள்ள காரகத்துவங்களை கிரகங்களை ராசிகள் அடிப்படை கொண்டு கூறிய விதம் அதை உள்வாங்கிக்கொண்டு அதனை விரைவில் அந்த சூழ்நிலையில் உங்களை சந்திக்கப் போகிறேன் என்று சென்றதும் மற்றும் கிரகங்களை எவ்வளவு உன்னிப்பாக நேசிக்கிறார் என்பதை நம்மளோட கலந்துரையாடியபோது தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்தியாவில் தமிழ்நாட்டில் மற்ற மொழிகளில் என்னென்ன படம் என்ன பெயர் எந்தெந்த நேரத்தில் யார் எடுத்தால் என்ன நிலை என்பதை நீண்ட நேரம் விளக்கியபோது ஒரு படத்தை உருவாகும் விதம் அதை விற்பனை செய்யும் போதும் ஏற்படக்கூடிய கால சூழ்நிலைகளை எவ்வளவு தெளிவாக அறிந்த போதும் அதன் தன்மையை கூறி அதன் விளக்கத்தையும் தன் மனதில் ஏற்படக்கூடிய எண்ணங்களையும் கூறிய விதம் அவர் ஜோதிடத்தின் மீது எவ்வளவு ஈர்ப்பு கொண்டு உள்ளார் என்பதை அறிய முடிந்தது.

பிரபஞ்ச தாய்க்கு நன்றி நன்றி நன்றி

#AMRathnam #Indian_film_producer

#Sri_Surya_Movies

#Shri_Sai_Raam_Creations