இவர் ஜோதிடரா?

இவர் ஜோதிடரா? இல்லை சித்தரா? நெல்லை வசந்தன் ஜோதிட வகுப்பில் மெய்சிலிர்த்த மாணவர்கள்!

ஜோதிட ஞானி நெல்லை வசந்தன் அவர்கள், அவருடைய நண்பர் ஒருவர், சென்னை நந்தனத்தில், 22 – 04 -2018 அன்று ஏற்பாடு செய்திருந்த, ஜோதிட பயிற்சி வகுப்பு வகுப்பு ஒன்றில் பங்கேற்று, ஒரே ஒரு ஜாதகத்தின் மூலம், வெவேறு முறைகளில் பலன் சொல்வது எப்படி? என்பது குறித்து மிகவும் துல்லியமாக விளக்கினார்.

வகுப்புக்கு வந்திருந்த ஒருவரின் ஜாதகத்தை, கரும் பலகையில் எழுதி, அதன் மூலம், அங்கு வந்திருந்த நாற்பதுக்கும் மேற்பட்டோருக்கும், பலன் கூறி, அனைவரையும் வியக்க வைத்துவிட்டார்.

ஒரு ஜாதகத்தில் உள்ள லக்னம், ராசி, நட்சத்திரம் அனைத்துக்கும் அப்பாற்பட்டு, ஒவ்வொரு கிரகமும் அமர்ந்துள்ள ராசி, கிரக சேர்க்கை, போன்றவற்றின் மூலம், ஜாதகரின் பெயர், அவரது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்கள், நண்பர்களின் பெயர்கள் ஆகியவற்றை கண்டுபிடிப்பது எப்படி? என்றும் மாணவர்களுக்கு சொல்லி கொடுத்தார்.

பரிகாரத்திற்கு உரிய கோவில், அது எந்த ஊரில் அமைந்துள்ளது போன்றவற்றை அறிவது குறித்தும் விளக்கினார்.

அத்துடன், ஜோதிட ஞானி நெல்லை வசந்தனால், கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட “ தன பிரசன்னம்” அதாவது, ஒருவருடைய கையில் இருக்கும் ரூபாய் நோட்டின் மூலம், அவருக்கு பலன் கூறுவது எப்படி? என்பதையும் மிக எளிமையாக விளக்கினார்.
அதே ரூபாய் நோட்டின் மூலம், அங்கு வந்திருந்த நாற்பது பேருக்கும் பலன் கூறி அசத்தினார். இது போன்ற ஒரு ஜோதிட முறையை இது வரை கண்டதில்லை என அனைவரும் வியந்து பாராட்டினர்.
என்.கே.வி சிஸ்டம் என்ற நெல்லை கே வசந்தன் ஜோதிட முறை என்றால் என்ன? என்பதை விளக்கும் வகையில், ஜாதகரின் பெயர், தாய் – தந்தையின் பெயர்கள் ஆகியவற்றின் அடிப்படையில், எந்த கிரகம் அந்த ஜாதகத்தை இயக்குகிறது.

ஒரு ஜாதகத்தில் உள்ள ஒன்பது கிரகங்களில், சொந்த வீட்டை பார்க்கும் கிரகங்கள் என்னென்ன?, ராகு – கேது அச்சுக்கு வெளியில் உள்ள கிரகங்கள் என்னென்ன? என்பதை எல்லாம் அடிப்படியாக வைத்து பலன் கூறினால், பலன்கள் எப்படி துல்லியமாக வரும் என்பதை, வகுப்புக்கு வந்திருந்தவர்களின் ஜாதகத்தை உதாரணமாக வைத்தே விளக்கினார்.

மேலும், திருமணம் நடந்த நாளன்று இருந்த கிரக நிலைகளை கொண்டு. இரு தரப்பினருக்கான பலன்கள், குறைகள், அதற்கான நிவர்த்திகள் பற்றியும் அவர் விளக்கினார்.

வகுப்பின் நிறைவாக, மாணவர்களின் கேள்விகள் அனைத்துக்கும், அவரவருக்கு புரியும் வகையில் விளக்கினார். அதேபோல், அவர்களுடைய எதிர்பார்ப்புகள் என்னென்ன? என்பதையும் கேட்டு அறிந்து கொண்டார்.

ஒரே ஜாதகத்தின் மூலம், எத்தனை கோணங்களில் பலன் சொல்லலாம் என்பதை, ஜோதிட ஞானி நெல்லை வசந்தனை தவிர, வேறு யாரால் சொல்ல முடியும்? என அனைவரும் மெய்சிலிர்த்து போயினர்.
அடுத்த வகுப்பு எப்போது? என்ற கேள்வியையே அனைவரும் எழுப்பினர்.

ஜோதிட ஞானி நெல்லை வசந்தனின், ஜோதிட ஞானம், அனைவருக்கும் சென்று சேர இறைவன் அருள் புரிய வேண்டும்!