ஓஷோவும்…ஜோசியரும்…

🌸 ஓஷோவும்…ஜோசியரும்…

ஓஷோவிடம் எல்லோரும் கேட்கும் கேள்வி

உங்களுக்கு ஜாதகத்திலும்… மதத்திலும்…

நம்பிக்கை உண்டா…??? என்பதுதான்

அதற்கு அவர் கூறும் பதில் –
” கிடையாது.”

ஆனால் …

அது என்னவென்று எனக்குத் தெரியும் என்பதுதான்…

ஓஷோ சிறுவனாக இருந்த போது

ஒரு ஜோசியர் அவரைப் பார்த்து

” நீ ஒரு புத்தனாக ஆவாய் என்றார்”

அதைச் சொன்ன ஜோசியரின் கண்களை ஆழ்ந்து பார்த்தார் ஓஷோ…

அப்போது அவரின் கண்கள் மூலமாக ஓஷோவுக்கு ஒரு விவரம் சொன்னது

பிறகு ஓஷோ அவரிடம் நீங்கள் என்னுடைய வருங்காலத்தைப் பற்றி சொல்ல வந்திருக்கிறீர்கள்…

அதற்கு முன்பாக நான் உங்கள் வருங்காலத்தைச் சொல்கிறேன் என்றார்

அதற்கு அவர்

” என்ன என் வருங்காலத்தைப் பற்றி நீ சொல்லப்
போகிறாயா….???

” ஆமாம் நீங்கள் விரைவில் ஒரு புத்த பிட்சுவாக மாறப் போகிறீர்கள் ”

அவர் சிரித்துக் கொண்டே

” அது நடக்காது

ஏனெனில் அந்த எண்ணம் சிறிது கூட என்னிடம் கிடையாது”

அதற்கு ஓஷோ நான் பந்தயம் கட்டுகிறேன்

அது நடக்கும்

அவர் சரி எவ்வளவு பணம் பந்தயம் கட்டப் போகிறாய்…???

அதற்கு ஓஷோ பந்தயம் முக்கியமல்ல

நான் ஜெயித்தால் பணம் உங்களிடமிருந்து எனக்கு வரப் போகிறது…

நான் தோற்றால் எதையும் நான் இழக்கப் போவதில்லை

ஏனெனில்

என்னிடம் எதுவும் கிடையாது…

பிறகு அந்த ஜோசியர்

சரி இந்த சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன்…

அப்படி நான் புத்த பிட்சுவாக மாறினால் …

இந்த வைரம் பதித்த தங்கத்தால் ஆன விலை உயர்ந்த கடிகாரத்தைப்பரிசாக அளிப்பேன்

ஓஷோவுக்கு ஜாதகத்தில் நம்பிக்கையே இல்லை…

அது 100 க்கு 99 சதவீதம் முட்டாள்தனமானது

ஒரு சதவீதம்தான் உண்மையானது

அந்த ஒரு சதவீதத்தை அறிய ஒருவர் ஆழ்ந்த… தீர்க்கமான…

நுண்ணறிவும்…
ஒரு ஞானியின் தன்மையும் வேண்டும்

ஏனெனில் ஒருவரது வருங்காலம்

அவரது மனத்தில் ஆழத்தில் பதிந்து இருக்கிறது

என்று பின் நாட்களில் கூறுகிறார் ஓஷோ

ஓஷோவுக்கு சுமார் பதினான்கு வயது இருக்கும்போது

அவர் தன் தாத்தாவோடு வாரணாசிக்கு சென்று கொண்டிருந்தார்

அப்பொழுது வாரணாசிக்கும் சாரநாத்துக்கும்

இடையில் ஒரு கோவிலின் வாசலில்

ஒரு வயோதிக புத்த பிட்சு பலரோடு சேர்ந்து உட்கார்ந்து இருந்ததை ஓஷோ பார்த்தார்

நேரே அவரிடம் சென்று

ஓஷோ பெரியவரே

என்னை அடையாளம் தெரிகிறதா..??? என்றார்

அதற்கு அவர் நான் உன்னைப் பார்த்ததே இல்லையே என்றார்

ஓஷோ அவரிடம்

ஆமாம், இப்பொழுது அது கஷ்டம்தான்

சரி எங்கே அந்தக் கடிகாரம் என்றார்..???

அவர் மிகவும் ஆனந்தப்பட்டு கண்ணீர் வழிய அதை தன்
அங்கியிலிருந்து எடுத்து

ஓஷோவிடம் கொடுத்து அவரை வணங்கினார்

உடனே ஓஷோ அவரிடம் நீங்கள் ஒரு சந்நியாசி

சிறுவனாகிய என்னை நீங்கள் எப்படி வணங்கலாம்

அதற்கு அந்த ஜோசியர் நீ என்னை விட

மனதளவில் பெரியவன்

நான் உன்னை வணங்கத்தான் வேண்டும்

அது சரி எனக்கு ஒன்றை மட்டும் சொல்

நான் எவ்வளவோ பேருக்கு ஜோசியம் சொல்லி இருக்கிறேன்

ஆனால் என்னையே என்னால் கணிக்க முடியவில்லை…!!!

நீ எப்படி அதைச் செய்தாய்…..???

அதை மட்டும் தயவு செய்து எனக்குச் சொல் என்றார்

ஓஷோ – அது உள் உணர்வு
( Intution) அதை விளக்க முடியாது என்றார் 🌸