கிருத்திகை நட்சத்திரம்

ஓம் நமசிவாய …குரு வாழ்க… குருவே துணை..

….. கிருத்திகை நட்சத்திரம்….

…. வார்த்தைகள் உடையன ஆகும்…
… வழக்கு அறிந்து உரைக்க வல்லான்….
… கூத்து மனத்தன் ஆகும்…
… குணமுடைகிளையனாகும்…
… போர்த்தொழில் வல்லதாகும்.. புகழுடன்
பொருளும் தேடும்…
… கார்த்திகை நாளில் தோன்றும் கருத்துடை காளை தானே….

…..27.. நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் கிருத்திகை…

… இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல வாக்கு வன்மை உடையவர்கள்…

…. வழக்குகளை மிகவும் தெளிவாக பேசி தீர்த்து வைக்கும் ஆற்றல் படைத்தவர்கள்…

… நடனம் போன்ற கலைகளில் நாட்டம் உள்ளவர்கள்…

…. நல்ல குணம் உள்ளவர்கள்…

… உறவினரிடம் சுமூகமாக நடந்து கொள்ளக் கூடியவர்கள்…

… போர்த் தொழில் புரிவதில் வல்லவர்கள்…

… ராணுவம் …போலீஸ் …பணியில் இவர்கள் தொழில் அமைந்து இருக்கலாம்…

…. பொன் பொருள் இவற்றுடன் புகழையும் தேடி உயர்ந்து வாழ்வார்கள்…

…. தெளிந்த கருத்து சொல்லும் பண்புடையவர்கள்….

…. மேலே உள்ள செய்யுளுக்கு இதுதான் பொருள்….

… மரிச கோத்திரத்தைச் சேர்ந்த பெண் நட்சத்திரம் கிருத்திகை…

… ஆகாயத்தில் கத்தி அல்லது வாள் போன்ற உருவம் உடையது…

… விருட்சங்களில் இது அத்திமரம் ஆகவும்..

… மிருகங்களில் பெண் ஆடாகவும்…

…. திசைகளில் தெற்காகவும்… விளங்குகிறது…

.. மேஷ ராசி யையும் ரிஷப ராசியை யும் இணைக்கும் பாதையாக கிருத்திகை நட்சத்திரம் விளங்குகின்றது….

… மேஷ ராசியில் முதல் பாதமும்…

… ரிஷப ராசியில் மீதி 3 பாதங்களும் பரவி உள்ளது….

…. நட்சத்திர அதிபதி சூரிய பகவான்…

…. கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி பகவான்…

…. வழிபட வேண்டிய தெய்வம் சுப்பிரமணிய பெருமான்….

… கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம் ….

.,.நாகப்பட்டினம் நாகநாதர் கோவில்..

… கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த நாயன்மார்கள்…
…. இடங்கழியார்…
… கணம்புல்லார்…
…. புகழ்ச்சோழர் மூர்த்தியார்….

… கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆழ்வார்கள்….
… உய்யக்கொண்டார் நம்பிள்ளை…
…. திருமங்கையாழ்வார்…

…. கடன் தொல்லைகளில் இருந்து விடுபட நினைப்பவர்கள்…

…. தொடர்ந்து 6 மாத காலம் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் விரதமிருந்து…

… முருகப் பெருமானின் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் ..

…. கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்…

… ஆண்கள் வெள்ளிக்கிழமையும்,, கிருத்திகை நட்சத்திரமும் _ இணைந்து வரும் நாட்களில் விரதம் இருந்தால்…!!!

… கணவன் மனைவி உறவு பலப்படும்…

…. கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய விருட்சம் அத்திமரம்…

… அத்தி மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட திருக்கோவில்கள்….

… கடலூர் …காட்டுமன்னார்குடி..
… பதஞ்சலி ஈஸ்வரர்…

… தஞ்சாவூர் ..சேங்கனூர்…
…. சத்தியகிரீஸ்வரர்….

….. திண்டுக்கல்… கீரனூர்…
…… சிவலோகநாதர்….

….. தூத்துக்குடி… திருச்செந்தூர்…
….. முருகப்பெருமான்…

…காஞ்சிபுரம்… வரதராஜ பெருமாள் கோவில்…

…. சென்னை…. திருவொற்றியூர் …
….வன்மீக நாதர்…

…. நாகப்பட்டினம் …திருச்செங்காட்டாங்குடி..
……. ஆத்தி வனநாதர்..

… திருவாரூர் ….திருமீயச்சூர்…
…. சகலபுவனேஸ்வரர்…

…. வருடத்திற்கு ஒருமுறையாவது …

…இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு
… ஸ்தலத்திற்கு சென்று…

… கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய விருட்சமான அத்தி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வந்தால்…

…. நாம் ஊற்றும் தண்ணீர் வேருக்கு பட்டதும்….

….. நம்முடைய வாழ்க்கை தரம் துளிர்க்க ஆரம்பிக்கும்…..

….. தென்னாடுடைய சிவனே போற்றி…
.., என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி…

…( கீழே உள்ள படத்தில் அடியேன் உடன் இருப்பவர் என் வாழ்க்கை துணைவி..

.. 35 ஆண்டு திருமண வாழ்வில் ஒரு சிறு கீறல் கூட விழாமல் வாழ்க்கையைச் செவ்வனே நடத்திச் சென்று என்னை ஒரு குழந்தை போல பாதுகாத்து வரும் என் மனைவியாகிய தாய்…)

… ( தாய்க்குப்பின் தாரம் என்ற பழமொழிக்கு உதாரணமாக விளங்கியவர்..)..

…. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது..

… இந்தப் பிறவியில் எனக்கு வாழ்க்கை துணைவியாக அவரை அமைத்துக் கொடுத்த..

… எம்பெருமான் சிவபெருமான் அவர்களின் கருணையே கருணை…

… சிவனை நம்பியவர்கள் தோற்றதில்லை…

… திருவாசகத்தை படித்தவர்கள் கெட்டதில்லை…

.. குறைவிலா நிறைவே, கோதிலா அமுதே..
.. ஈறிலா கொழுஞ்சுடர் குன்றே…
.. மறையுமாய் மறையின் பொருளுமாய்
வந்தென்..
,.. மனத்திடை மன்னிய மன்னே…
.. சிறை பெறா நீர்போல் சிந்தை வாய்ப்
பாயுந் திருப்பெருந்துறை சிவனே..
.. இறைவனே நீயென் உடலிடங்
.. கொண்டாய்
. இனி உன்னை என்னிரக்கேனே..
..( திருவாசகம்..).. திருச்சிற்றம்பலம்..

.. ஜோதிடம் அடிப்படை …உயர்நிலைக் கல்வி கற்றுத்தரப்படும்…

..M.S. செல்வராஜ்…D A.B.A..Astro..
… நல்லூர்… திருப்பூர்….
… மொபைல் எண்…
..9965742366..
…9360354122…