குருப்பெயர்ச்சியாகிவிட்டது

“எனக்கு குருப்பெயர்ச்சியாகிவிட்டது”….

நேற்று ‘குமார் ‘ என்ற நபரின் (முன்பின் அறிமுகமில்லாதவர்) நட்பு கிடைத்தது …

நான் ரிசப லக்னம் ராசி.. 7ல் (விருச்சிகம் )குரு வருகிறார் …..

7ம்மிடம் என்பது நட்பை குறிக்கும் பாவம் ….

குருவுக்கு குமார் என்ற காரகப்பெயர் உண்டு…

உங்களுக்கும் குரு, குமார், பிரபு, செல்வம்,ராஜா, சுந்தரம்,இதுப்போன்ற குருவின் காரக பெயருள்ள நபர்கள் தொடர்பில் வரும் போது குருவின் பெயர்ச்சியின் பலன்கள் கிடைக்க கூடும் ….

குரு இப்போது விருச்சிகத்திற்க்கு வருகிறார் …..

விருச்சிகத்தில் யாருக்கெல்லாம் கிரகம் இருக்கிறதோ அந்த கிரகத்தோடு கோச்சார குரு சேரும் போது ஏற்படும் சேர்க்கையின் காரக பெயருள்ள நபர்கள் சந்திப்பு ஏற்ப்பட்டாலும் குருவின் பெயர்ச்சிக்கான பலன் கிடைக்கும்…..

உதாரணமாக ….

விருச்சிகத்தில் சூரியன்
குரு +சூரியன் – சிவக்குமார், குமரேசன், துரைராஜ்,

சந்திரன் +குரு
ராஜசேகரன், தனசேகரன், சந்திரசேகரன்,

செவ்வாய் +குரு
குமரன், செந்தில்குமார், செந்தில்ராஜா,

புதன் +குரு
ரமேஷ், ராஜேஷ், வேங்கடநாதன்,

சுக்கிரன் +குரு
சுகுமார், விஜயக்குமார்,

சனி+குரு
பெரியசாமி, பொன்னுசாமி,
வரதராஜன்,
பெரியபாண்டி, தங்கபாண்டியன் (செவ்வாய் வீடு என்பதால் ),

ராகு +குரு
நாகராஜ், சாய்குமார் (செவ்வாய் வீடு என்பதால்),

கேது+ குரு
செல்வகணபதி, லிங்கராஜா, கணேஷ்குமார்,

இதுப்போன்ற பெயருள்ள நபர்கள் தொடர்பில் வரும் போது குரு பெயர்ச்சி பலன் கிடைக்கும்…..
மேற்கூரிய யாவும் மேலோட்டமான பொதுவான காரகப்பெயர்கள் தான்… இதில் குரு மற்றும் விருச்சிகத்தில் உள்ள கிரகம் வாங்கிய சாரம், அந்த கிரகத்தின் பாவக காரகம் அடிப்படையிலும் பெயர்கள் உள்ள நபர்கள் வருவார்கள் …

இந்த முறையினை மற்ற ஜோதிடமுறையோடு சேர்த்து பலன் கூறும் போது சிறப்பான பலனாக இருக்கும் ….

அதாவது “அவையோடு இவை “யை சேர்த்து பலன் கூறுவது …..

இந்த பிரபஞ்சம் எனக்கு ஒரு நபரை அறிமுகம் செய்யும் போது அந்த நபரால் அடையபோவது என்ன என்பதனை அந்த நபரின் பெயரின் காரக கிரகத்தின் மூலம் அறிய பயிற்றுவித்த
மரியாதைக்குரிய “நெல்லை வசந்தன் “ஐயாவின் பாதம் பனிந்து நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்…..

இந்த பதிவினை ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எனது குருநாதர் அவர்களுக்கு சமர்பிக்கிறேன்…..

NKV SYSTEM…..

https://m.facebook.com/story.php?story_fbid=2031072866945060&id=100001270993224