கோர்ட் கேஸ் வழக்கு பற்றிய ஜாதக ஆய்வு

அனைவருக்கும் வணக்கம்,இந்த நாள் இனிய நாள். வாழ்வில் எல்லோரும் எல்லா வரமும் பெறவேண்டும்.
அட்சய லக்ன பத்ததியில்நிறைய ஜோதிடர்கள்,ஜோதிட ஆய்வாளர்கள் நம்முடன் பயணித்திருக்கிறார்கள். ஜாதகருடைய லக்கனம் துலாம் லக்கனம், ALPலக்கனம் அவிட்ட நட்சத்திரம் இரண்டாம் பாதம்.
ஒரு நல்ல நிலையில் உள்ள ஜாதக ஆய்வாளர் ஒருதேதியை கொடுத்து 4.5.2017ஜாதகர் ஜெயில்க்கு போயிருக்காரு. என்ன காரணம்னு கேட்டாரு.அவருடைய லக்கனம் துலாம் லக்கனம் ,ALP மகரம். மகரத்தில் திருவோணம் மூன்றாம் பாதம் 6ம் வீட்டை குறிக்கும்.திருவோணம் 1 திருவோணம் 2 திருவோணம் 3 மிதுனத்தை காட்டிக் கொடுக்கும். மகரம் 6ம்வீட்டைகாட்டிக்கொடுக்கும்.அதனால் ஜாதகருடையஅண்ணனுக்கும் அதேபிரச்சனை.மகரத்திற்கு மூத்த சகோதரன் விருச்சிகம்.விருச்சிகத்திற்கு மிதுனம் அட்டமாதிபதி வீடு.அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஜெயிலுக்கு போய் இருக்காங்க.அவர்கிட்ட சொன்னதும் ஆமா அப்டினு சொன்னார். மகரத்தின் 9ம் அதிபதி புதன்,புதனுடன் 6ம் வீடாய் மிதுனம் வருது.ஒன்பதாம் வீட்டுக்கு அது பத்தாம் வீடு,9 10 சம்பந்தப்படும்போது அவருடைய அப்பாவோட கர்மமும் அங்க இணையிது.அப்ப மூணுபேரும் ஜெயிலுக்கு போயிருக்காங்க.
உங்களுடைய ஜாதகத்தில் அவிட்டம் நட்சத்திரம் 3-வது பாதத்தில் உங்களுக்கு திருமணம் நடைபெறும். 11ம் அதிபதி 4ம் அதிபதி சம்பந்தப்படுவதால்அவிட்டம் நட்சத்திரம். 3, 10 சம்பந்தப் படும்போது எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் கொடுத்தே தீரும்.ஏன்னா கும்ப லக்னத்திற்கு 4ல இருந்து 7ம் வீட்டயும் 11-ம் வீட்டயும் பார்பாரு. 10ம் வீட்டையும் 11 ம் வீட்டையும் பார்பாரு. அதனால் திடீர்யோகத்தைக் கொடுக்கும், திருமணம் நடக்கும்.இந்த ஜாதகர் பாம்பாட்டி சித்தர் கோவிலில் சரணாகதி அடைந்தால்இந்த ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.அறம், பொருள், இன்பம்
இருக்கக்கூடிய சந்தோஷத்தையும் இருக்கக்கூடிய பொருட்களை வைத்துக்கொண்டு சந்தோஷமாக குடும்பத்தோடு வாழ்வது தான் மூன்று காலங்களும் நமக்கு உணர்த்தும் ,அதாவது அறம் ,பொருள் ,இன்பம்.பத்தாம் அதிபதி வலுவடைந்தால் 4-ம் அதிபதி வலுவிலக்கும்.ஒவ்வொரு ஜாதகமும் ஒவ்வொரு லக்கனமும் ஒன்றுக்கு மேற்பட்ட யோகத்தை கொடுக்குமானா? கொடுக்காது.அதுவே 3ம் வீடு வலுவா இல்லனா 9ம் வீடு பலமாக இருக்கும்.தன்னுடைய முயற்சி இருந்தால் 3ம்பாகம் வலுவாக இருக்கும் 9ம் பாகம் வலுவிலக்கும். 2ம் வீடு பலமாக இருந்துச்சுன்னா திடீர்னு 8ம் வீடு அதாவது வம்பு ,வழக்கு உடல் சார்ந்த பிரச்சனைகள் உருவாகும்.அதாவது ஒவ்வொரு பாகத்திற்கும் எதிர் பாவகம் வேலை செய்யும்.மீண்டும் ஓர் இனியதொரு நிகழ்வில் சந்திப்போம் நன்றி வணக்கம்.