ஜோதிடம் இன்னும் எளிமையாக வேண்டும்.

ஜோதிடம் இன்னும் எளிமையாக வேண்டும்.
—————————————————————–
ஜோதிடத்துறைக்குள் நுழைவதற்கு முன் வெளியே நின்று பார்த்தபோது எனக்குள் ஒரு பிரமிப்பு இருந்தது. ஜோதிடர்களிடம் ஏதோ மிகப்பெரிய திறமை இருப்பதாக கருதியதுண்டு. ஏதோ அவர்களில் சிலரிடம் ஒரு வித அமானுஷ்ய சக்தி இருப்பதாகக்கூட நினைத்ததுண்டு. நான் ஜோதிடத்திற்குள் நுழைந்து பலரை பக்கத்திலிருந்து கவனித்தபோது எனக்குள் இருந்த பிரமிப்பு படிப்படியாக குறைந்து விட்டது. இந்த துறைக்குள் இருக்கும் போட்டி, பொறாமை, பொச்சரிப்பு, சூது , வஞ்சகம், துரோகம் இவைகளை நேரில் கண்டபோது எனக்குள் ஒரு பெரிய ஆத்திரம் பொங்கி எழுந்தது. என்னுடைய வருத்தங்களை நெருக்கமாக இருந்த சிலரிடம் பகிர்ந்துகொண்டதுண்டு. அவர்களிடம் என் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட பின் அவர்களும் என்னை விட்டு விலகி சென்றார்கள். அவர்கள் எனக்கு எதிராக செயல் பட்டார்கள். நான் பெரும்பாலும் தனியாகவே செயல்பட்டேன். எத்தனை கேலி ,கிண்டல், அவமானம். அத்தனை சூழ்நிலைகளிலும் நான் தனித்தே நின்றேன். ஜோதிடத்துறையில் இருந்துகொண்டு அதற்கு களங்கம் கற்பித்துக்கொண்டிருந்தவர்களை இந்த துறையில் இருந்து ஒழித்துக்கட்டுவேன் என்று வெளிப்படையாக மிகவும் நெருக்கமானவர்களிடம் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு சொல்லியதுண்டு. நான் யார் யாரையெல்லாம் ஜோதிட துறையிலிருந்து தூக்கி எரிய வேண்டும் என்று நினைத்தேனோ? அவர்கள் எல்லோருமே காணாமல் போய்விட்டார்கள். இவர்களுக்கு எதிராக நான் நேரடியாக எந்த தீங்கும் செய்யவில்லை. என்னால் முடிந்தவரை பல ஜோதிட நூல்களை எழுதி ஜோதிடத்தை எளிமை படுத்தினேன். அவ்வளவுதான்.
எனக்கு எதிராக ஜோதிட மேடைகளில் பலர் என் முன்னாலேயே கர்ஜித்ததுண்டு. அவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஜோதிடத்தை என்னால் முடிந்தவரை எளிமை படுத்துவேன். புதியவர்களை உருவாக்குவேன். ஜோதிடத்துறைக்குள் இருக்கும் தனி மனித ஆதிக்கங்களை நிச்சயம் இல்லாமல் செய்வேன். இதற்கு ருத்திரன் எனக்கு துணையிருப்பான்.