ஜோதிடம் மக்களில் வாழ்க்கையில்

எனது ஜோதிட குருமார்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொண்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன்

ஜோதிடம் மக்களில் வாழ்க்கையில் அங்கமாக உள்ளது என்பதற்கு அவர்கள் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தைகளே
மிக பெரிய உதாரணம்
எனக்கு தெரிந்த வகையில் கீழே எழுதுகிறேன்

1.எனக்கு லக் இல்ல (லக்னம்)
2.அவனுக்கு கிரகம்(கிரகணம்)பிடுச்சுயிருக்கு
3.உங்கள் கை”ராசி”, முக ராசி நல்ல இருக்கு
4.என் கட்டம் சரியில்ல
5.அவனுக்கு சுக்கிர திசை
6.அவருக்கு குரு உச்சம்
7.ரோஹிணி நட்சத்திரம் மாமனுக்கு ஆகாது
8.மூலம் நட்சத்திரம் மாமனார் மாமியாருக்கு
ஆகாது
9.தள்ளி நில்லுடா அபிஷ்டு(அபிஜித் நட்சத்திரம்) கழிக்கப்பட்ட நட்சத்திரம்
10.அவனுக்கு கன்னி ராசிபா அது தான் அவனை சுற்றி பெண்கள் கூட்டம்
11.கரணம் தப்பின மரணம்
12.எல்லாம் அவனை பிடிச்ச (கிரகம்)
13.வக்கிர புத்தி காரன்
14.ரெண்டு பேருக்கும் 7ம் பொருத்தம் தான்
15.உன்னாலே ஒரே 7 அரை தான்
16.சனியானே என்று திட்டுவது
17.அவர் நாக்கில் சனி
18.எல்லாம் விதி(லக்னம்)
19.யோகம் வேண்டும்
20.யோகாரன்
21.விசாகம் நட்சத்திரம் மருமகளுக்கு ஆகாது
22.மகத்தில் பிறந்தால் ஜகாத்தை ஆழ்வார்
23.அவிட்டம் நட்சத்திரம் தவிட்டிலும் தங்கம்
24.பரணியில் பிறந்தால் தரணியை ஆழ்வார்
25.சாரம், அபாச்சாரம்
26.பாவம் ,அகம்பாவம்
27.நல்ல ராசி காரர்
28.சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான் !
29.விதி போகும் வழியே மதி போகும்
30.கேட்டை கோட்டை கட்டி ஆளும்

நன்றி
ஜோதிட ஆராய்ச்சியில்
துலாம் சதிஷ்குமார்
+919385763667