ஜோதிடரின் ஜாதக ஆய்வு

அனைவருக்கும் வணக்கம்,அட்சய லக்ன பத்ததியில் இன்றைக்கு இந்த ஜாதக ஆய்வை பார்ப்போம்.இது ஒரு ஜோதிடரின் ஜாதகம்.அட்சய லக்ன பத்ததி லக்கனம் கும்பலக்கனம். கும்ப லக்னத்திற்கு லக்னாதிபதி சனி பகவான் 9-ம் வீட்டில் உள்ளார்.இந்த ஜாதகருக்கு என்ன கேள்வினா?லக்னத்திற்கு அட்டமத்தில் புதன்,அஷ்டம அதிபதியாக இருப்பதால் ஜாதகருக்கு ஒருவிதமான பதட்டம் பயம்உருவாகும். பயம் ஏன்?கும்ப லக்கினத்தின் ஐந்தாம் அதிபதி புதன். அட்டமாதிபதி 5, 8 சம்பந்தப்படுவதால் மன சங்கடங்கள் உருவாகும்.லக்கின புள்ளி பூரட்டாதி நட்சத்திரம்.3 வருடம் 4 மாதம் 2021 பிப்ரவரியில் இதுமுடியும்.லக்னத்தை இயக்கக்கூடிய லக்ன புள்ளி , நட்சத்திர புள்ளி,அட்சய லக்கன புள்ளி குருவோட நட்சத்திரம் பூரட்டாதி நட்சத்திரம் அதனால் குரு ஆறில் நீச்சம் பெறுகிறது.இதனால் மன பயம் உண்டாகும்.கடன் கொடுக்கும் வழக்குகொடுக்கும், தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும்.அட்டமத்தில் புதன் இருப்பதால் ஜாதகருக்கு மனபயம் உருவாகும்.அட்டமத்தில் புதன் இருப்பதால் பிரச்சனைகள் இல்லை ஆறில் குரு பகவான் விஷயத்தில் பிரச்சனைகள் உருவாகும்.ஏன்னா இரண்டாம் அதிபதி கடன் ,குடும்பாதிபதி கடன் ,பதினோராம் அதிபதி கடன்அதனால் 3 வருடம் 4 மாத காலம் அனைத்தும் இருந்தும் எதையும் இயக்க முடியாது சூழ்நிலை உருவாகும்.இந்த ஜாதகருக்கு ஐந்தாம் அதிபதி அட்டமத்தில் செல்வதால் தான் பயம் உருவாகும்.மூன்று வருடம் நான்கு மாத கால நிலை முடிவடைந்தது ஏன்னா குருவோட நட்சத்திரத்துக்கு முன்னாடி ராகுவோடநட்சத்திரம் செவ்வாய் ராகு 11ல் இருந்திருக்கு.அடுத்தது லக்னத்திற்கு நட்சத்திர புள்ளி சதய நட்சத்திரம் ராகுபலமா இருந்திருக்கு அதனால் எந்த பயமும் இல்லை ஆனால் குருவோட நட்சத்திரம் வரும் பொழுது பயம் உருவாகி இருக்கும். உடலளவிலும் மனதளவிலும் இந்த ஜாதகருக் பயம் உண்டாகும். 2021 பிப்ரவரிக்கு அப்புறம் ஜாதகர் யோகமான நிலையை அடைவார்.அட்டமாதிபதி புதன் திசைஎன்பதால்ஜாதகர்அதிகமாக பயப்பட வேண்டிய நிலை உருவாகும். 5ம் அதிபதி அட்டமத்தில் அட்டமாதிபதிபுதன் சனியுடன் சம்பந்தப்படுவதால் ஜாதகர் அதிகமாக பயப்படக்கூடிய சூழ்நிலை இருக்கு.2020 நவம்பர் மாதத்துடன் இந்த புதன் திசைமுடிவடைகிறது.எல்லா கிரகங்களும் எல்லா சுப அசுப தன்மைகளைகொடுத்துக் கொண்டுதான் இருக்கும்.நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தாலும் அவர்களுடைய பங்களிப்பை இந்த கிரகங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கும்.ஒவ்வொரு காலகட்டங்களிலும் இந்த ஜாதகருக்கு எதிர்பாராதவிஷயங்கள் ஏன் வந்திருக்கு?அட்டமத்தில் உள்ள புதன் சித்திரை நட்சத்திரத்தில் இருக்கு,அதே புதன் அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்தால் இந்த ஜாதகருக்கு அதிகமான பிரச்சனை கொடுத்திருக்கும்.சித்திரை நட்சத்திரம்இந்த லக்னத்துக்கு11 ல்இருக்கக்கூடிய நட்சத்திர பாதம்.அதாவது 3 , 10க்கு உடையவர்சாரத்தை பெற்று, 11ல்இருக்கக்கூடிய செவ்வாய் சாரத்தை பெற்றதால்புதன், திசைபெற்றிருப்பதால் ஜாதகர் பயப்பட வேண்டிய நிலை இருக்கும்.2020நவம்பர் நல்ல நிலையை கொடுக்கும்.புதன்உத்திரத்தில் இருந்தால், 7ம் அதிபதியான சூரியன் அட்டமத்துல வருவதால் தேவையில்லாத சண்டைகள் ,கணவன்-மனைவி பிரச்சினைகளை உருவாக்கும்.புதன் செவ்வாயோட நட்சத்திரம் ,சித்திரை நட்சத்திரத்தில் மிகப்பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும்.நல்லதொரு வாய்ப்பே இந்த ஜாதகத்தில் அமைந்திருக்கும்.அடுத்தது பூரட்டாதி நட்சத்திரம் 2021பிப்ரவரி மாதம் முடிகிறது .லக்கனம் மீன லக்கனம்,மீன லக்கனத்திற்கு பத்து வருஷத்தை இயக்கக்கூடிய லக்னாதிபதி குரு பகவான்.லக்னத்திற்கு 5ல இருக்காரு. ஜாதகர் பலமா இருக்காரு.உத்திரட்டாதி நட்சத்திரம் 5 வரும்பொழுது ஜாதகருக்கு 4 வருடம் 5 மாதம் பிரச்சனையாக இருக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும்.ரேவதி நட்சத்திரம், புதன் 7-ல் உள்ளது. உத்திரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் கொஞ்சம் கவனமாக இருக்க கூடிய காலக்கட்டம் .மீண்டுமொரு இனிய நிகழ்வில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.