ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி?

ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி?
————————————————————
1. ஜோதிட ஆலோசனை பெற விரும்புபவர்கள் ஜோதிடரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவதே சால சிறந்தது. உங்களுக்கு நேரமில்லை, நேரில் சந்திக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைக்கும்வரை உங்கள் வாழ்க்கையில் தடைகள் தொடரும்.
2. ஜோதிட ஆலோசனை பெறும்போது தன் சொந்த சோகக் கதைகளை மூச்சு விடாமல் சொல்லி ஜோதிடர் தன் பணியை செய்யவிடாமல் செய்து, ஜோதிடர் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது பெரும் தவறு. உங்களுக்கு உரிய ஆலோசனை அப்பொழுது கிடைக்காது. நவக்கிரகங்கள் உங்களுக்கு நல்வழி காட்ட மாட்டார்கள்.
3. ஜோதிடரை கீழே உட்கார வைத்து விட்டு , நீங்கள் உயரத்தில் உட்கார்ந்து கொண்டு , காலாட்டிக்கொண்டு அதிகார தோரணையில் பலன் கேட்டால் உங்களுக்கு நீங்களே குழி தோண்டிக்கொள்கிறீர்கள் என்று பொருள். இது நவ கிரகங்களையே அவமதிக்கும் செயல்.
4. ஜோதிட ஆலோசனையின் போது நக்கல், நையாண்டியாக பேசுவது அல்லது மிரட்டுவதுபோல் பேசுவது எல்லாம் ஜோதிடரின் மூலம் நவகிரக சாபத்தை பெறுவதற்கு வழி வகுக்கும். நல்ல மனமும் ,குணமும் உள்ள ஜோதிடர்களிம் இவ்வாறு நடந்துகொள்பவர்களுக்கு நிச்சயம் இது நடக்கும்.
5. ஜோதிட ஆலோசனை கேட்பவர் மௌனமாக அமைதியாக இருந்து ஜோதிடர் சொல்வதை மட்டும் கேட்கவேண்டும். அலட்சிய மன போக்கை தவிர்க்க வேண்டும். ஜோதிடர் ஏதாவது கெடு பலன் சொன்னால் பரிகாரம் ஏதாவது உண்டா என கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். சண்டைக்குப்போகக்கூடாது. வாக்கு வாதத்தில் ஈடுபடக்கூடாது.
6. ஜோதிடர் சொன்ன ஆலோசனையில் திருப்தியில்லையென்றால் அல்லது பிடிக்கவில்லையென்றால் அமைதியாக திரும்பி வந்துவிடவேண்டும்.
7. ஒரு ஜோதிடர் சொன்ன விசயங்களை இன்னொரு ஜோதிடரிடம் சொல்லக்கூடாது. ஜோதிடர்களை ஒப்பிட்டு பேசக்கூடாது. இது ஜோதிடருக்குள் வெறுப்புணர்ச்சியை தூண்டும். இதனால் உங்களுக்கு உரிய ஆலோசனையை அவர் வழங்க மாட்டார்.
8. ஜோதிடரிடம் சென்று எனக்கும் ஜோதிடம் தெரியும் , சும்மா நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என பார்க்க வந்தேன் என்று சொல்லக்கூடாது. இப்படி சொல்வதால், ஜோதிடருக்கு உங்கள் மீது வெறுப்பு உணர்ச்சி தோன்றி எதையும் சரியாக பார்க்க மாட்டார். நவ கிரகங்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.
9. தேவை இருந்தால் மட்டும் ஜோதிட ஆலோசனை பெறுங்கள். பொழுது போக்கிற்காக ஜோதிடரை பார்க்காதீர்கள். இது வம்பை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.
10. ஜோதிடர்களுக்கு தட்சிணை வழங்குவது என்பது நீங்கள் அவர்களின் நேரத்தை எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. ஜோதிடர்களை பிச்சைக்காரர்களாக கருதாதீர்கள்.
11. வா வா என கூவி அழைக்கும் ஜோதிடர்களை தவிர்த்து, சத்தமில்லாமல் செயல்படும் நல்ல ஜோதிடர்களை தேடிப்போய் ஆலோசனை பெறுங்கள். குறிப்பாக உங்களுக்கு தெரிந்த நபர்கள் பரிந்துரை செய்யும் ஜோதிடர்களைப்போய் பாருங்கள்.
12. ஜோதிட ஆலோசனைப் பெறும்போது சொந்தக்காரர்களையோ அல்லது நெருங்கிய நண்பர்களையோ உடன் அழைத்து செல்லாதீர்கள்.

Julkaissut Krishna Kumar Ramasamy Perjantaina 8. kesäkuuta 2018