ஜோதிட சிந்தனை

ஜோதிட சிந்தனை
================

சந்தை
======

கால புருசதத்துவப்படி ஏழாமிடமான துலாம் ராசி சந்தையை குறிக்கும். துலாம் ராசியின் குறியீடு தராசு .துலா ராசியில் சுக்கிரன் ஆட்சி பெறுகின்றது. சனி உச்சம் அடைகின்றது. சூரியனின் நீச்சம் அடைகின்றது.

துலாம் ராசியின் குறியீடான தராசு அங்குள்ள அனைத்துகடைகளிலும் இருக்கும்.

சுக்கிரனின் ஆட்சிவீடாக துலாம் இருப்பதால் சந்தைக்கு வருகின்றவர்களில் பெண்மணிகளே அதிகம் வருகின்றார்கள். அங்கு வியாபாரம் செய்யும் அனைவருக்கும் வியாபாரம் நன்றாக நடைபெறுகின்றது. . சுக்கிரனின் காரகங்களான ஆடை அலங்காரப்பொருட்களை சந்தையில் வாங்கும் வழக்கம் மக்களிடையே உள்ளது.

உச்சம் அடைந்த சனியினால் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. மக்கள் கூட்டத்தை குறிப்பவர் சனியாவார். சந்தைக்கு வருகின்ற மக்களில் ஏழை எளிய மக்களே அதிகம். ஏழை எளிய மக்களை குறிப்பவர் சனியாவார்.
மேலும் சனிகிரகம் வயது முதிர்ந்தவர்களையும் குறிக்கும். வயதான மூதாட்டிகளும் சந்தையில் வியாபாரம் செய்வதை காணமுடிகின்றது.சந்தைக்கு சென்று செருப்பு வாங்கும் வழக்கம் உள்ளது. செருப்பு சனியின் காரகமாகும்.

சூரியனின் நீட்சவீடு துலாம் எனவே நிழல்பாங்கிற்காக சந்தை முழுவதும் கூடாரத்தினால் மூடியுள்ளனர். மேலும் மரநிழலிலும் கடைகளை வைத்து வியாபாரம் செய்கின்றனர். மேலும் சூரியன் அஸ்தமித்த இரவு நேரத்திலேதான் அதிகமாக வியாபாரம் நடைபெறுகின்றது.

ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
சிவகாளீஸ்வரன்
7418796879
நன்றி.