தொழில் பற்றிய ஆய்வு

அனைவருக்கும் வணக்கம், இந்த ஜாதகத்தில் தொழிலை பற்றி பார்க்கலாம் ஜாதகருக்கு வயது 40 முடிந்து 10 மாதம் ஆகுது, லக்னம் ரிஷபலக்னத்துல பிறந்திருக்காரு. இன்றைக்கு இவருடை அட்சயலக்னம் கன்னிலக்கனம். உத்திரம் நட்சத்திரம் இப்ப தான் ஆரம்பமாயிருக்கு. இதற்கு முன்னாடி சிம்மலக்கனம் அட்சய லக்கனமாக செல்லும் பொழுது லக்னாதிபதி 10 வருடத்தை இயக்கக்கூடியது சூரியன், சூரியன் எங்க இருக்குனா 2-ம் இடத்துல. லக்னாதிபதி 2 – ல குடும்பத்துக்கு வருமானம் சார்ந்த விஷயங்கள் நல்லா இருக்கும் தொழில் பார்க்கும்பொழுது 10-ம் அதிபதி சுக்ரன். லக்னாதிபதியும் 2ம் இடத்துல சுக்ரன் 2ம் இடத்துல வருமானம் உண்டு, ஆனால் சுக்ரன் அமைப்பு அஸ்தம் நட்சத்திரம் சந்திரனுடையசாரத்தில் இருக்காரு.லக்னத்தில் மூன்று நட்சத்தி பாதங்கள் இயங்கிருக்கும் , மகம் நட்சத்திரம் வரும் பொழுது இந்த காலகட்டத்தில் மகம் கேதுவுடைய நட்சத்திரம், இந்த லக்கனத்திற்கு 7-ம்இடத்துல இருக்காரு. 7-ம் இடத்தின அதிபதி சனிஸ்வரன் லக்னத்துல இருக்காரு இந்த காலகட்டத்துலகுடும்பத்தில் பிரச்சினைகள் உண்டாகிருக்கும் என்ன காரணம்னா மகம் நட்சத்திரம் சூரியனுக்கு 6 -ம் இடத்துல கேதுவுக்கு 8-ம் இடத்துல.4 – வருடம் 5 – மாதம் காலங்கள் சூரியன் – கேது இணைவு என்னவென்றால சஷ்டாஸ்டகம். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகும். இதற்கு அடுத்து பூரம் நட்சத்திரம், இது சுக்ரனுடைய நட்சத்திரம். இந்த சுக்கிரனுடைய நட்சத்திரகால கட்டங்களில் 10-ம் அதிபதி 3ம் அதிபதி, தொழில் ஜாதகருடைய முயற்சியால் அமைந்திருக்கும். சுக்ரன் 10-ம்இடம் சம்மந்தப்படும் பொழுது ஜாதகர் வண்டி வாகன தொழிலை ஆரம்பித்திருப்பார். விரயாதிபதி சாரத்தை வாங்கியதால் விரயம் ஏற்பட்டிருக்கும். இந்த ஜாதகத்தில் இன்னொரு தன்மையை ஆய்வு பன்னுபொழுது இந்த லக்னத்தில் எப்படி இருந்திருப்பாரு, இந்த லக்கனத்தில் குரு ,சந்திரன் ,ராகு, சனி 5 ,8க்கு அதிபதி குரு, அவர் லக்கனத்திலேயே இருக்காரு. 12 க்கு அதிபதியான சந்திரன் லக்னத்திலேயே இருக்காரு, 6, 7க்கு அதிபதியான சனி லக்னத்திலேயே இருக்கு, ராகு லக்னத்திலயே இருக்கு,சனி சந்திரன் ராகு என்பது ஒரு மதிமயக்கம்.இந்த காலகட்டங்களில் ஜாதகர் சுய சாரம் வாங்கி இருக்கிறார்ஆனால் இந்த லக்னத்தில் அட்டமாதிபதி லக்னத்திலேயே ,ஆறாம் அதிபதியும் லக்னத்திலேயே விரையாதிபதி லக்னத்திலேயே,அப்ப லக்னத்தில் 6 8 12 தொடர்பு உள்ளதால் ஜாதகர் சிறப்பாக இல்லை.விரயாதிபதியான சனி சந்திரன் ராகு சேர்க்கை மதி மயக்கத்தைக் உண்டாக்கும்.பன்னிரண்டாம் அதிபதி சனி சந்திரன் நீர் சம்பந்தப்பட்டது அதனால் மதி மயக்கம்உண்டாகும்.அதாவது குடிபோதைக்கு அடிமையாவார்.விரையாதிபதி சம்பந்தப்பட்ட தொழில் ஸ்தான அதிபதி சுக்கிரன் நீச்சம் பெறுவதால் நீச்சபங்க ராஜயோகத்தை அடைந்ததால் நீச்ச பங்கம் அவருக்கு வேலை கொடுத்திருக்கும்.குடும்பத்திற்கு பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கும்இப்பொழுது கன்னி லக்னம் இந்த காலகட்டத்தில் முதல் மூன்று வருடம் நான்கு மாத கால கட்டங்கள் உத்திர நட்சத்திரத்தில் லக்ன புள்ளி செல்லும்.உத்திர நட்சத்திர அதிபதி சூரியன் விரையாதிபதியும் ஆதிபத்யம் வாங்கிஇருப்பதால் மூன்று வருடம் நான்கு மாத கால கட்டங்கள் விரையம் ஆகத்தான் இருக்கும்.ஆனால் இந்த கன்னி லக்கினத்தில் புதன் பலமாக உச்சம் பெற்றிருப்பதால்எதிர்பாராத யோகம் உருவாகும் வாய்ப்பு உள்ளது.லக்னத்தோடு நீச்சபங்க ராஜயோகத்தின் கிரகங்கள் செயல்படும்போது நீச்சபங்க ராஜயோகம் அவர்களுக்கு உருவாகும்.இந்த லக்னத்தில் விரை யாதிபதியான சூரியன், லக்னாதிபதியும் இருக்காரு இரண்டுக்கும் 9-க்கு அதிபதியாக சுக்ரனும் இதில் இருக்காரு,விரையாதிபதி இருப்பதனால ஜாதகர் வெளிநாட்டில் வேலை பார்த்தார் இந்த குடும்பத்திற்குவிரயம் இருக்காது.குடும்பத்தின் அதிபதி லக்னத்தில் இருப்பதால் விரயம் உண்டாகும் சூழ்நிலை உருவாகும்.பத்து வருஷம் யோகத்தைக் கொடுக்கும் ஆனால் பத்து வருஷம் யோகமாக அமையும் னா? அமையாது.லாபாதிபதி இந்த லக்னத்திற்கு 12இல் விரயத்தில் உள்ளார். அதனால் வெளியூர் வெளியிடம் வெளிமாநிலம் போனால்தான் இவருக்கு யோகம்.அடுத்த ஜாதகத்தில் பார்க்கும்வரை நன்றி வணக்கம்.