பரிகார திருத்தலங்கள்

பரிகார திருத்தலங்கள்
===================

சிம்ம லக்கினம் , கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நவகிரக தோசத்தால் திருமணம் நடைபெற தாமதமானால்
திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் கோவிலுக்கு சென்று விரைவில் திருமணமாகவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுங்கள் மிகவிரைவில் திருமணம் நடைபெறும்.

திருச்சி மலைக்கோட்டையிலுள்ள தாயுமானவர் சன்னதியில் நவகிரகங்களில் எட்டு பேர்களும் சூரியனை பார்த்தபடி அமர்ந்திருக்கின்றார்கள். சூரியபகவானுக்கும் உஷா தேவிக்கும் இங்கு திருமணம் நடைபெற்றதாக ஐதீகம் உள்ளது. மற்ற கிரகங்கள் சூரியனின் திருமண கோலத்தை பார்ப்பதாக ஐதீகம் உள்ளது.
சூரியனும் உஷாதேவியுடன் காட்சி தருகின்றார்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்கினாதிபதி சூரியன். கும்பலக்கினத்திற்கு ஏழுக்குடையவன் சூரியன் . எனவே சூரியனின் திருமணம் நடைபெற்ற இடமான தாயுமானவர் சன்னதிக்கு சென்று பிரார்த்தனை செய்தால் மற்ற கிரகங்களின் ஆசிகளின் மூலம் விரைவில் திருமணம் நடைபெறும்.

தாயுமானவர் சன்னதியில் சென்று பிரார்த்தனை செய்யும்போது சூரியனின் திருமணத்தை உருவகப்படுத்தி பார்க்கவும்.
மனோபாவம் மிகவும் முக்கியம்.

ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
சிவகாளீஸ்வரன்
7418796879
நன்றி.