மனத்திரையில் தோன்றும் காட்சிகள்

மனத்திரையில் தோன்றும் காட்சிகள்?
?மனதில் தோன்றும் காட்சிகள் நமது கற்பனையால் உருவாக்கப்படுகின்றன. இந்தக் கனவுகள்தான் வாழ்க்கையில் முன்னேற்றத் திற்கான ஆரம்பப் படிகளாக அமைகின்றன.
?தகவல்கள் நமது மனதில் மூலப் பொருள்களாக நுழைந்து எண்ணங்களாக உருவெடுக்கின்றன. அதே வகையில், கற்பனையில் உருவாகும் விஷயங்கள் கூடத் தகவல்களாக மனதை வந்தடைகிறன.
தகவல்களைக் கட்டுப்படுத்தினால், எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம். அதன் வழியாக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தலாம். விளைவுகளை நமக்குச் சாதகமாக அமைத்துக் கொள்ளலாம்
?மனம் ஐம்புலன்கள் வழியாகக் கிடைக்கும் தகவல்களுக்கும் வித்தியாசம் பாராட்டாது. இதையும் மெய்யான தகவல் என்று பாவித்து, பதப்படுத்தி எண்ணங்களாக மாற்றித் தரும்.
?கனவுகள் நிஜமாகும். . இந்தக் கனவுகளில் வரும் தகவல்கள் நமது மனதை மீண்டும் மீண்டும் அடைந்து, நமக்கு நல்ல எண்ணங்களைத் தயார் செய்துகொடுக்கும். அதன் விளைவாக நமது முயற்சியில் பெரிய மாறுதல் ஏற்படும். வெற்றி வாய்ப்புகள் பெருகும்.
?கனவுகள் காணுங்கள். உங்கள் கனவுகள் பிரம்மாண்டமானவைகளாக அமையட்டும். நீங்கள் அதில் கதாநாயகனாக/ கதாநாயகியாக பல சாதனைகளை நடத்துங்கள். அனைவரும் உங்களைப் போற்றும் அந்தக் காட்சியைக் கண்டு மகிழுங்கள். பாராட்டுக்களைக் கேட்டு சந்தோஷப்படுங்கள்.
?1.கனவுகள் அதாவது கற்பனைக் காட்சி துல்லியமானதாக இருக்கவேண்டும்
?2. மீண்டும் மீண்டும் அந்தக் காட்சியை மனதில் தருவித்து கண்டு களிக்கவேண்டும்
?3. அந்தக் காட்சியோடு உணர்ச்சிபூர்வமாகக் கலந்துவிட வேண்டும்.
?காட்சி துல்லியமாக அமையாவிட்டால், மனம் அந்தத் தகவலை நிராகரித்துவிடும், ஏற்றுக் கொள்ளாது.
?நாம் ஒரு வெற்றியைச் சாதிக்க விரும்பினால் அந்தச் சாதனைக்கான அளவுகோலை துல்லியமாக நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த அளவைச் சாதித்துவிட்டதாகக் கனவு காண வேண்டும்.
?இன்ன சாதனை செய்யவேண்டும் என்று தீர்மானித்த பிறகு, அதைச் செய்து முடித்துவிட்ட நிலையில் ஏற்படும் சந்தோஷ நிலையை மனதில் கற்பனை செய்து பார்க்கும்போது மனம் அந்தத் தகவலைப் பதப்படுத்தி வெற்றி எண்ணத்தைத் தயார் செய்து தருகிறது.
?அந்த எண்ணம் தீவிரம் அடையவேண்டும் என்றால், ஒருமுறை கற்பனை செய்தால் போதாது, மீண்டும் மீண்டும் அந்த வெற்றிச் சித்திரத்தை மனதில் திரையிட்டுப் பார்க்க வேண்டும்.
?அடிக்கடி இந்தக் காட்சி நமது மனத் திரையில் ஓடும்போது, ‘வெற்றி’ தகவல் மீண்டும் மீண்டும் மனதில் திணிக்கப்படுகிறது. அடிக்கடி இப்படி ஒரு கனவு நிலைக்குச் சென்றுவிட வேண்டும். நிஜ வாழ்க்கையில் வெற்றியைச் சந்திக்கும் முன்பே அதைச் சாதித்துவிட்ட மனநிலையை அடைந்துவிட வேண்டும்.
?அப்படி ஒரு நிலையை அடைவதற்கு உணர்ச்சிகள் கற்பனையோடு பிணைந்திருப்பது அவசியம். உணர்ச்சிப்பூர்வமாக அந்தக் கனவுக் காட்சியில் லயித்துவிடும்போது இந்த எண்ணம் மிக ஆழமாகப் பதிந்துவிடுகிறது. இடையில் ஏற்படும் சிக்கல்களால் இந்த ஆழமான எண்ணத்தை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது.
?மேலோட்டமான எண்ணங்களால் சிக்கல்களை எதிர்க்க முடியாது. பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்துத் தாக்குபிடிக்க முடியாது. அதனால் கனவோடு உணர்ச்சிபூர்வமாக லயித்துவிட வேண்டும்.
?ஆண்டாள் மனிதப் பெண்ணாகப் பிறந்து, கடவுளான கண்ணணையே கணவனாக அடைய வேண்டும் என்று கனவு கண்டாள். உலகத்தவர் அனைவரும் இது ஈடேறாது என்று எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் அதைப் பொருட் படுத்தவில்லை. அந்தக் கனவிலேயே லயித்திருந்தாள். கண்ணணுக்கும் தனக்கும் நடக்கவிருக்கும் திருமணக் கோலாகலத்தைத் தனது கற்பனையில் துல்லியமாகக் கண்டுகளிக்கிறாள்.
“வாரணமாயிரம்…” என்று துவங்கி திருமண வைபவத்தில் தனக்கும் கண்ணணுக்கும் நடக்கும் (நடக்கவிருக்கும்) ஒவ்வொரு சடங்கையும் கற்பனையில் விவரித்துப் பார்க்கிறாள். “மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத, முத்துடைத் தாமங்கள் நிறைந் தாழ்ந்த பந்தர்க் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்”.
மனித வாழ்க்கையில் நடக்கவே வாய்ப்பில்லாத அந்தத் தெய்வத் திருமணத்தைக் கூடத் தனது கனவினால் சாதித்துக் காட்டினாள் ஆண்டாள்.
?கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்” என்றார் மகாகவி பாரதி. கிட்டத்தட்ட அவரது கனவுகள் அனைத்துமே இன்று நிஜமாகிவிட்டன.
?எப்படி நமது மனம் என்னும் தொழிற்சாலை ஐம்புலங்களின் வாயிலாக வரும் தகவல்களை உள்வாங்கி, பதப்படுத்தி எண்ணங்ளைத் தயார் செய்கிறதோ அதேபோலக் கற்பனையில் வரும் நிகழ்வுகளையும் உள்வாங்கி அதிலிருந்தும் எண்ணங்களை உற்பத்தி செய்கிறது. இந்த எண்ணங்களால் நமது நடவடிக்கைகள் திறம்படுகின்றன, வெற்றி பெறுவது திண்ணம்

படித்ததில் பிடித்தது

copy paste