மிருகசீரிஷம் நட்சத்திரம்

ஓம் நமசிவாய …குரு வாழ்க…. குருவே துணை…

***** மிருகசீரிஷம் நட்சத்திரம்*****

…. நிரந்தர நடையன் ஆகும்…
… தேச மெய்ப்பொருளும் வல்லான்,..
… அருந்தவத்தோர்க்கு நல்லான்…
…. ஆயுதம் பிடிக்க வல்லோன்…
… நிரம்பிய கல்விகற்கும் ….
.,….நினைத்தது முடிக்க வல்லான்…
…. வருந்தியே கருமஞ் செய்யும் மான் தலை
நாளினானே….!!!!!

… மிருகசீரிஷம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள்….!!!

…. நன்கு நிமிர்ந்து அழகாக நடப்பார்கள்…!!!

… ஞானம் சார்ந்த கருத்துக்களை நன்கு அறிந்தவர்கள்…!!!!

…. தவம் செய்யும் முனிவர்களுக்கு நல்லவர்…!!!

… நல்ல ஆயுதப் பயிற்சி பெற்றவர்களாக திகழ்வார்கள்…!!!

…. நிறைந்த கல்வி கற்றவர்கள்…!!!

… தான் எண்ணியதை முடிக்க வல்லவர்..!!!

…. கஷ்டப்பட்டு எந்த கடினமான செயலையும் செய்ய வல்லவர்கள்….!!!!

.. நன்கு நடனம் பயின்றவர்கள்…

… மேல் கண்ட ,குணங்கள் நிறைந்தவரே மிருகசீரிஷத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்..!!!!

… இதுதான் அந்தப் பாடலின் பொருள்…

.. மிருகசீரிஷம் நட்சத்திரம் வான மண்டலத்தில் “”மான் தலை “” போன்ற அமைப்பை கொண்டது..!!!

… மிருகசீரிஷம் நட்சத்திரம் அத்திரி கோத்திரத்தை சார்ந்தது…!!!!

… விருட்சங்களில் கருங்காலி மரமாகவும்..!!

.. மிருகங்களில் பெண் சாரையாகவும்..!!!

… திசைகளில் மேற்காகவும்…!!!!

…. உடல் உறுப்புகளில் புருவங்களாகவும்..!!!!

… பஞ்ச பூதங்களில் நிலமாகவும்….!!!

…. தேவகணமாகவும்….!!!

…. குணங்களில் தாமச குணமும் கொண்டது இந்த மிருகசீரிஷ நட்சத்திரம்…!!!

…. இந்த நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியிலும்…

… பின் இரண்டு பாதங்கள் மிதுன ராசியிலும் உள்ளன..!!!

… மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் பகவான்…!!!

… மிருகசீரிஷம் நட்சத்திரம்…
.. ஒரு உன்னதமான நட்சத்திரம்..
.

… இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகுந்த பாக்கியசாலிகள்…

…. மிருகசீரிஷ நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய தெய்வம்…

… தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் உள்ள “””வன துர்க்கை அம்மன்..””கோவில்.

… திருமணமாகாதவர்கள் எலுமிச்சை பழ
விளக்கு ஏற்றி….

இத்தலத்திலுள்ள துர்க்கையை
வணங்கினால் ….

…மிக விரைவில் திருமண பாக்கியம்
கைகூடும்..!!!!.

…. இங்குள்ள வனதுர்க்கை வணங்கினால்..

.. சகல தெய்வங்களையும் , வணங்கிய
பலன் பெறுவார்கள்…!!!

… எத்தகைய துன்பத்தையும் மிக எளிதில் போக்கிவிடும் ஆற்றலைப் பெற்றதால்…

இங்குள்ள அம்பிகைக்கு”” துர்க்கை “””
என்ற பெயர் வந்தது…!!!

… வன துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபடுவது சிறப்பு…!!!

… மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு அதிதேவதை “”வனதுர்க்கை..””

.. வன துர்க்கை அம்மனுக்கு பூஜையின்போது கோதுமை அல்வா கோதுமை சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்கிறார்கள்…!!!

.. அதை பிரசாதமாக உண்டு அனைவருக்கும் விநியோகம் செய்தால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்..!!!

… மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த கடவுள்”””பரசுராமர்.”””

… மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த நாயன்மார்..
… கண்ணப்ப நாயனார்…

… மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த ஆழ்வார்கள்…
.. கோவலூர் எம்பெருமானார்..
… திருக்கச்சி நம்பிகள்…

… மிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரிய விருட்சம் கருவேல மரம்..!!!

… கருவேல மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோவில்கள்…

… திருவள்ளூர் ..திருவேற்காடு …
..தேவி கருமாரியம்மன் கோவில்..!!!

… திருவாரூர்.. அம்பர் மாகாளம்…
.. மகாகளேஸ்வரர் கோயில்…!!!

… திருவாரூர்.. .எண்கண்…..
… ஆதிநாராயண பெருமாள் கோவில்…!!!

… கிருஷ்ணகிரி… ஓசூர்…
… சந்திரசூடேஸ்வரர் கோவில்…

… திருச்சி ….முசிறி…
… சந்திரமவுலீஸ்வரர் கோவில்…

வருடத்திற்கு ஒருமுறையாவது…

… மேற்கண்ட ஸ்தலங்களில் ஏதாவது ஒரு ஸ்தலங்களுக்குச் சென்று…

.. மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரிய தலவிருட்சமான கருவேல மரத்திற்கு…

… ஒரு குடம் தண்ணீர் ஊற்றி வணங்கி வர
.. நாம் ஊற்றிய நீர் மரத்தின் வேருக்கு பட்டதும் நம் வாழ்க்கைத் தரம் செழிக்க ஆரம்பிக்கும்…!!!

.., இதில் மாற்றுக் கருத்து இல்லை…!!!

.. ஓம் சசிசேகராய வித்மஹே..
… மஹாராஜாய தீமஹி..
.. தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்..!!!

… தென்னாடுடைய சிவனே போற்றி.. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி..

… சொற்றுணை வேதியன் சோதிவானவன்.
. பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்.
.. கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்..
.. நற்றுணையாவது நமச்சிவாயவே..
..( திருநாவுக்கரசர் தேவாரம்.).
.. திருச்சிற்றம்பலம்…

.. ஜோதிட வகுப்புகள் விரைவில் ஆரம்பம்..

.. அடிப்படைக் கல்வி …
…உயர்நிலைக் கல்வி..
.. கற்றுத்தரப்படும்…
… இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்…

..M.S. செல்வராஜ்..D.A.B.A..Astro..
.. நல்லூர் …திருப்பூர்…
… தொடர்பு எண்கள்..
..9965742366..
..9360354122..