முகநூலும் மூன்றாம் பாவமும்

முகநூலும்
**************
மூன்றாம் பாவமும்
************************
ஓர் அசத்தல் ஆய்வு –[ 1 ]
**************************

வணக்கம் ..

இன்றைய சூழலில் ரொம்ப பரபரப்பாக பேசப்படுற ஒரே விஷயம் முகநூல் தாங்க.

முகநூல் காரகத்துவம்
***************************
முன்ன பின்ன பழக்கம்
இல்லாத நபர்களிடம் நட்பு
நட்பு கொள்ள உதவும் ஒரு
வலைதளம் முகநூல்.

என்னடா முன்ன பின்னனு
இவ்வளவு மோசமாக எழுதறேன்னு தப்பா நினைக்க வேண்டாம்
அப்ப தான் நான் எடுத்துகொண்ட ஆய்வுக்கு ஒரு பஞ்ச் கொடுத்த மாதிரி இருக்குமுங்க.

அன்று பேனா மூலம் நட்பு
இன்று போன் மூலம் நட்பு

அட அதுவும் மூன்றாம் பாவம் தாங்க
இதுவும் மூன்றாம் பாவம் தாங்க.

மூன்றாம் பாவம் மறைவு
ஸ்தானத்திலேயே ரொம்ப
குறைந்த மறைவு பாவம்னு
சாஸ்திரம் சொல்லுது.

அது அன்று இருந்த பேனாநட்புக்கு ரொம்ப பொருத்தமா இருந்துச்சு.

கடிதம் மூலமாக நட்பை ஒருவரை
ஒருவர் பார்க்காமல் மறைவாக
வச்சு கிட்டோம்.யார் யாருக்கூட நட்பு
வச்சுகிட்டோம்னு யாருக்கும்
அவ்வளவா தெரியாது.
அதுதாங்க உண்மையாக
மூன்றாம் பாவத்தின் வேலை.

ஆனால் இன்று நம்ம யார்கிட்ட
நட்பு வச்சு இருக்கோம்னு உலகத்துலஇருக்கற முன்னபின்ன தெரியாத அத்தனை பசங்களும்
மறைமுகமாக,மறைவு பாவத்தில்
மிகப் பெரிய மறைவு பாவமான
12ம் பாவம் மூலமா விடிய விடிய
முழிச்சுகிட்டு பார்த்துக்கிட்டு
இருக்காங்கனா பாருங்க.

மூன்றாம் பாவகாரகங்கள்
*********************************
தொலைபேசி,தந்தி,
கடித போக்குவரத்து,
செய்தி போக்குவரத்து,
வானொலி செய்திகள்,
தொலைக்காட்சி நியூஸ்,
தபால் அலுவலகம்,
தந்தி செய்தி தொடர்பு,
தூதுவர்,
பிரசாரகர்,
செய்தி அனுப்புபவர்,
பத்திரிக்கை ஆசிரியர்,
பத்திரிக்கையாளர்,
எழுத்தாளர்கள்,வதந்திகள்,
கோள் சொல்பவர்கள்,
நூலகம்,
நூல்கள் சேகரிப்பவர்கள் ,
வீடு மாற்றம்,
தற்செயலாக
அறிமுகம் ஆகும்
நண்பர்கள்,
வலது காது,
தோள் பட்டைகள்,
தோள் எலும்புகள்,
கைகள்,
நரம்பு மண்டலம்,
மனகுழப்பம்,
காது,கழுத்து
,கையில் அணியும்
ஆபரணங்கள்,
சுத்தமான உணவு,
மத சம்பந்த கடமை,
ஆடை ஆபரணங்கள்,
மன உறுதி,
வீரம்,
இளைய சகோதரர்,சகோதரி
ஆளடிமை,
போர் வெல்லல்,
தேக பலம்,
எதிரியை வெற்றி கொள்ளல்,
போக சக்தி,
வீரிய ஸ்தானம்,
மாரக ஸ்தானம்,
சங்கீதம்,
தாயார் விசனம்,
வெற்றியை செல்வமாக
பெற்று வாழ்வதாம்.

மேற்கூறிய அனைத்தும் மூன்றாம் பாவக காரகத்துவங்கள் ஆகும்.

சரிங்க இனி விசயத்துக்கு
வருவோம்.

கம்பியூட்டர்,செல்போன்,
தகவல் தொடர் போன்ற
சாதனங்களை குறிக்கும்
பாவம் மூன்றாம் பாவம் தாங்க.
ஒரு 15 வருஷம் முன்னாடி எல்லாம்,தபால்,தந்தி,
தொலைபேசின்னு இருந்தது.
ஆனா இன்று இண்டர்நெட்,
ஈமெயில்,செல்போன்,
எஸ் எம் எஸ்,வாட்ஸ் அப்,
பேஸ் புக் னு இன்று எவ்வளவோ
வளர்ச்சிநிலையை நோக்கி சென்று கொண்டு உள்ளது உலகம்.
இது ஆக்கம் நோக்கி
செல்கின்றதா அழிவை
நோக்கியா ?இதில போய்
என்னங்க சந்தேகம்
மூன்றாம் பாவம் தான மாரக பாவம்.
அப்ப இதெல்லாம் அழிவை நோக்கி தான நம்மல கொண்டு போகுது.

ஆமாங்க என்னைக்கு
மனுஷன் சுகமா
இருக்கணும்னு நினைச்சானோ
அன்றே அழிவும் ஆரம்பம்
ஆயிருச்சிங்க .நான் சொல்றது என்னன்னா..

ஒருவரின் சுகஸ்தானம்
நான்காம் பாவம்.இந்த 4ம்
பாவத்தையே விரயம்
செய்யக் கூடிய பாவம்
தாங்க 3ம் பாவம்.
ஆக ஒருவர் இந்த
3ம் பாவத்தை கையில் எடுத்தா
அவரோட அத்தனை சுகமும்
கெட்டு போகுமுங்க.
ஆனா நம்ம இன்று அத தான கையில பிடிச்சுகிட்டே [செல்போன்] இருக்கோம்.

இனி மூன்றாம் பாவஅதிபதிய முகநூல் பாவாதிபதி ன்னு
சொல்லுவோமா….

முகநூல் பாவாதிபதி
[மூன்றாம் அதிபதி ]
பன்னிரு பாவங்களில்
இருப்பதால் ஏற்பப்படுத்தும் பலன்கள் :

1ம் பாவத்திலிருந்தால்
****************************
முகநூல முதன் முதல்ல
கண்டுபிடிச்சவங்க இவங்களா
தான் இருக்குமுங்க
முகநூலே கதி என்று இருப்பார்கள்.
பல புதிய புதிய செய்திகளை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம்
உடையவர்கள்.முகநூலில்
நிறைய நண்பர்களிடம் நட்பு
கொள்வதில் ஆர்வம் உடையவர்கள்.
நண்பர்களிடம் அதிகம் இன்பாக்ஸில் பேசுபவர்கள்,செல் போனில் பேசுபவர்கள் இவங்களாக தான் இருக்குங்க அதிகம் share,அதிகம் like,
அதிகம் comments இவங்க
தான் கொடுப்பாங்க இவங்கள
எப்பவும் உங்க நட்பு வட்டத்துலயே வச்சுகிட்டா like உங்களுக்கு தாங்க.
இவங்க மட்டும் முக நூல்ல
தன்னுடைய முகத்தை காட்டவே மாட்டாங்க,ஏன்னா மூன்றாம்
பாவம் குறுகிய மறைவு பாவதாங்க
அதனால அப்ப அப்ப
கொஞ்சம் காட்டுவாங்க

2ம் பாவத்திலிருந்தால்
****************************
முகநூல்ல குடும்பத்தோடு
போட்டோ போட்டு
இருக்காங்க அப்படின்னா
அது இவுங்களாக தான்
இருக்கும்.தன்னுடைய
குடும்பம் போல் முகநூல
நினைத்து,சொந்த குடும்பத்த
மறந்துவிடுவாங்க.குடும்ப சுபநிகழ்ச்சிகளை முகநூலில்
பகிர்ந்து கொள்வார்கள்.
முகநூல வச்சு பணம் சம்பாதிக்கனும்னாஅது
இவுங்க தாங்க. தன்னுடய
குடும்ப விஷயம்,பண விஷயம்,
பணம் எப்படி சம்பாதிக்கலாம்
என்பது பற்றி அதிகம் பகிர்ந்து கொள்வார்கள்.இவங்க
Comments பண்ணுனா யாரும்
எதிர் கேள்வி கேட்க முடியாது.கேட்கறவங்க
வாயை அடைசிடுவாங்க.
அப்ப வாதமும் இருக்கும்
விதண்டா வாதமும் இருக்கும்.

மூன்றாம் பாவத்திலேயே
*********************************
இருந்தால்
***************
முகநூல்ல கலக்குறது இவங்க
தாங்க.இவங்க முகநூல்ல
போஸ்ட் பண்ற,ஒவ்வொரு
விஷயமும்,முக்கியமானதா
தான் இருக்கும்.இவங்க பதிவு
எல்லாம் வீரமா,விவேகமா,
விளக்கமா,ஆன்மீகமா,
ஜோதிடமா,புராணமாகத் தான் இருக்குங்க.இவர்கள் தானாக
முகநூலில் பிரபலம்
ஆயிடுவாங்க.இவங்க
வித்தியாசமா போடுற
ஒவ்வொரு பதிவுக்கு
Like க அள்ளுவாங்க.
அதிகமாக share ஆகிறதுதும்
இவங்க பதிவு தாங்க.இதன்
மூலம் இவஙகளுக்கு பேர்
புகழ் அந்தஸ்து எல்லாம்
தானாதேடிவருமுங்க.
கொஞ்சம் இவங்களுக்கு வீரியம் அதிகம் அப்ப அப்ப கொஞ்சம் அந்த மாதிரி படமும் பார்ப்பார்கள்.இவங்க மட்டும் இல்லைங்க இத படிக்கிறநீங்களும்தான்.
முகநூல்னாலே மூன்றாம் பாவ தான பாவம் அப்புறம் நீங்க மட்டும் என்ன பண்ணுவிங்க.
சங்கீதம்,மல்யுத்தம்,கராத்தே,
நிலதரகர்கள்,வேத விற்ப்பன்னர்கள்,
ஜோதிடர்கள்,காது,மூக்கு
,தொண்டைமருத்துவர்கள்,
விற்பனை பிரதிநிதிகள்,
மேற்கண்ட துறையில் இருக்கும்
இவங்க எல்லாம்
முக நூலுக்கு வந்தா சீக்கிரம்
புகழ் வரும்,தொழில் முன்னேற்றம் ஏற்படுங்க அப்படியே உங்கள
விளம்பரத்த முகநூல்ல
விடுங்கஜெயிக்கபோறது நீங்க தாங்க

ஆய்வு தொடரும்….

நன்றி

SRE G.சக்திகுரு M.sc.,M.phil.,
(Astro )

Cell:96889 74555

நாமக்கல்