மென்பொருள்களில் (Softwares) கிரகங்களின்

மென்பொருள்களில் (Softwares) கிரகங்களின்
————————————————————————
ஸ்புடங்கள், நிலைகள் மாறுபடுவது ஏன்?
———————————————————————–
நேற்று Astro Rajasekaran எழுப்பிய கேள்விக்கு விடையாகவே இந்தப் பதிவை இடுகிறேன். எதிர்வரும் ஆகஸ்ட் 22 மற்றும் 24ம் தேதிகளில் புதன் குரு, செவ்வாய் சனி ஆகியோரது இணைவுகள் (Conjunction) ஏற்படுகின்றன. அதுபற்றிய அவரது பதிவில் அவரது மென்பொருள் குறிப்பிட்டிருக்கும் நேரத்திற்கும் நமது சபரி பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்கும் வித்தியாசம் வந்தது. இது எதனால்? மென்பொருட்கள் தவறான தகவல்களைத் தருகின்றனவா? என்ற அவரது கேள்விக்கு (கேள்வி அவருடையது என்றாலும் பதில் அனைவருக்கும் பயன்படும் என்பதால்) சில விளக்கங்களை இங்கே எனது டைம்லைனிலேயே தருகிறேன்.

மென்பொருட்களை உருவாக்கும்போது கீழ்க்கண்ட காரணிகள் அதன் துல்லியத்தை நிர்ணயிக்கின்றன. 1. எபிமெரிஸ் (Ephemeris Factor) 2. நேர வித்யாசம் (Time Factor)
3. இடமத்தியக் கொள்கை(Centric Factor)

1.எபிமெரிஸ் :
———————-
எபிமெரிஸ் என்பது கிரக நிலைகளைக் கணிப்பதற்கு பயன்படுவதாகும். இதில் பல அடிப்படை வகைகள் உள்ளன. Julian 1900, Bessalian 1950, Julian 2000 போன்றவை அவற்றில் குறிப்பிடத் தக்கவையாகும். இதில் அந்த மென்பொருள் எதை அடிப்படையாக வைத்துக் கணிக்கப்படுகிறதோ அதற்கேற்றபடி ஸ்புடங்கள், கிரக நிலைகள் மாறுபடும். இவை ஒவ்வொன்றிற்கும் சில திருத்தங்கள் உண்டு. அதை செய்யாமல் விடுவதால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.

2. நேர வித்யாசம் :
—————————–
நேர நிர்ணயத்தைப் பொருத்தவரை யுனிவர்சல் டைம், டெரஸ்டிரியல் டைனமிக் டைம், எபிமெரிஸ் டைம் முதலிய பல நேர நிர்ணயங்கள் உள்ளன. அவற்றிற்கென்று சில திருத்தங்களும் உண்டு. அதனைச் சரியாகத் தேர்ந்தெடுக்காததாலும் தவறுகள் ஏற்படுகின்றன.

3. இடமத்தியக்கொள்கை :
——————————————
எந்த இடத்தை மத்தியமாகக் கொண்டு ஸ்புடங்களைக் கணிக்க வேண்டும் என்பதில் சில கொள்கை முறைகள் உள்ளன. பௌமத்தியக் கொள்கை, பூமத்தியக் கொள்கை, குறிப்பிட்ட இடமத்தியக் கொள்கை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கொள்கையைப் பொருத்தும் ஸ்புடங்கள் மாறுபடும்.

இங்கே நான் சில தரவுகளைக் கொடுத்திருக்கிறேன். அதில் 22-08-2016ல் புதனும் குருவும் ஒன்றாக இணையும் நேரத்திற்கும், 24-08-2016ல் செவ்வாயும் சனியும் ஒன்றாக இணையும் நேரத்திற்கும் நமது சபரி பஞ்சாங்கம் மற்றும் மென்பொருளில் கணிக்கப்பட்ட ஸ்புடத்திற்கும் இதர முறைப்படி கணிக்கப்பட்ட ஸ்புடத்திற்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் காணலாம். அதுமட்டுமின்றி அந்த நேரத்திற்கு நாசாவின் எபிமெரிசில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்புடங்களையும் கொடுத்திருக்கிறேன். நாசாவிற்கும் நமது கணிதத்திற்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்பதைப் பார்த்தாலே நமது பஞ்சாங்கம் மற்றும் மென்பொருளின் துல்லியத்தை நீங்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.

https://m.facebook.com/story.php?story_fbid=609013162581933&id=100004197633275