லயோலா கல்லூரி உதயம்

ருத்ரோத்காரி வருடம் மாசிமாதம்27ம்தேதி திங்கட்கிழமை பஞ்சமி திதியும் கூடிய நாளில் 10 3 1924 வருடம் காலை 10 மணி அளவில் லயோலா கல்லூரி உதயம்.

லயோலா கல்லூரி பரணி நட்சத்திரத்தில் ஆரம்பித்துள்ளது. பரணி தரணி ஆளும் என்பதற்கேற்ப இக்கல்லூரி ஆரம்பிக்கும்போது முதல்வராக இருந்தவர் டாக்டர் பிரான்சிஸ் பெற்றாம் .இவருடைய பெயருக்கு தமிழில் அர்த்தம் ஒளிமயம் என்று பெயர்.

ஒளிமயமாக ஆரம்பமானது இக்கல்லூரி என்பது உண்மை .
கல்லூரி மேஷ லக்னம் மேஷ ராசியில் ஆரம்பமானது. லக்னாதிபதி செவ்வாய்.

பெயர் புகழ் செல்வாக்கு அந்தஸ்து என்று சொல்லக்கூடிய ஒன்பதாம் இடத்தில் அமர்ந்து பெரும் புகழையும் சிறப்புமிக்க பெரும் தலைவர்களையும் மத வேறுபாடின்றி உருவாக்கித் தந்தது.

குரு பகவான் பாக்கியாதிபதியாய் எட்டாமிடத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக 12-ஆம் இடத்தையும் ஏழாம் பார்வையாக2ம் இடமான கல்வி ஸ்தானத்தையும்,9ம்பார்வையாக4ம்இடமான உயர்கல்விஸ்தானத்தை நோக்குவதாலும் இக்கல்லூரியானது கடல் கடந்து கல்வியில் பெயர் பெற்று மிகச்சிறந்த ஓர் கல்லூரியாக இருந்தது.

குரு பகவான் 12 ஆண்டுக்கு ஒரு முறை ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேருவார்.

அதேபோன்று குரு பகவான் ஏழு சுற்று 84 வருடம் அதாவது 1924 முதல் 2008 வரை ஏழு சுற்று முடிந்து எட்டாவது சுற்றான தனது ஆயுள் சுற்றை நடத்துகிறார்.

எனவே இந்த காலகட்டத்தில் கல்லூரி நிர்வாகம் ஆனது கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் .

பெயரை கெடுத்து கொள்ளக் கூடாது.இந்த எட்டாவது சுற்று முடிவுக்கு வரும் காலகட்டத்தில் சிக்கலான காலகட்டத்தில் நிர்வாகம் மிக கவனமாக இருக்க வேண்டும்.2020 வரை கவனம் தேவை.

இதில் மதத்தை கையில் எடுத்து எட்டாவது சுற்று பூர்த்தி செய்ய விடாமல் ஆகிவிடக்கூடாது.

ஆரம்பத்தில் பரணியில் ஆரம்பித்த இந்த கல்லூரி சுக்கிர திசை இருப்பு 12 வருடம் ஒரு மாதம் 22 நாள் இருப்பு இருந்தது. அதன்பின் சூரிய தசை 6 வருடம் அதன்பின் சந்திரன் தசை 10 வருடம் செவ்வாய் திசை 7 வருடம் ராகு தசை 18 வருடம் குரு தசை 16 வருடம். சனிதசை 19 வருடம்.

இந்த ஏழு திசைகளும் 1.5.2012 வரை நடைபெற்றது.

எட்டாவது தசை புதன் தசை நடைமுறையில் உள்ளது. இதுவும் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம். எட்டாவது தசை புதன் தசை என்பது புதன் வித்யாகாரகன் என்று பெயர்.

மேஷ லக்னத்திற்கு புதன் சத்துரு ஸ்தானாதிபதியாய் தன் தசையை நடத்துவதால் மேஷ லக்னத்திற்கு பதினோராம் இடமான பாதக ஸ்தானத்தில் இருந்து நடத்துவதால் புதன் தசை இக்கல்லூரிக்கு பாதகத்தை கொடுக்கும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும் .

இந்த புதன் திசையில் சூரிய புத்தி வரும் ஜூன் மாதம்2019 வரை நடைபெறுவதால் சூரியனும் பாதகஸ்தானத்தில் இருப்பதால்,கேது உடன் இருப்பதால், அரசாங்கம் மற்றும் அரசு அதிகாரிகளால் கேள்வி கணைக்கு ஆளாக நேரும்.

மேலும் மேஷ லக்னத்தில் ஆரம்பம் கண்ட இக்கல்லூரி லக்னாதிபதி செவ்வாயாக வருவதாலும் செவ்வாய் தனுசு ராசியில் அமர்ந்திருப்பதாலும் இந்த செவ்வாய் பகவான் மீது தற்போதைய காலகட்டத்தில்கோச்சாரத்தில் சனிபகவான் ஆகிய முடவன் அமர்ந்திருப்பதால் இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கல்லூரி நிர்வாகம் கவனமுடன் இருக்க வேண்டும்.

பரிகாரம்
செவ்வாய் பகவான் தனுசில் அமர்ந்துள்ளதால் கோயம்பேடு அருகில் உள்ள குறுங்கால் ஈஸ்வரர் கோவில் சென்று கல்லூரி பெயரில்பொறுப்பில் உள்ள முக்கியஸ்தர் சென்றுஅபிஷேகம் அர்ச்சனை செய்வது நல்லது. கும்பத்தில் சூரியன் புதன் அமர்வதால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அபிஷேகம் அர்ச்சனைசெய்தால் நன்மை பயக்கும் .

மத ஒற்றுமை காப்போம்

பிற மதத்தை காப்போம்
உலகத்தை ஆட்டிவைக்கும் கிரகங்கள் ஒருவரையும் விட்டு வைப்பதில்லை.