வேலை அல்லது தொழில் சிறப்பாக அமைய:

dgdf

சம்பந்தபட்ட ஜாதகர் தினமும் அதிகாலை 5 மணிக்கே எழுந்து சூரிய உதயத்திற்கு முன் எழுந்து முறையான சூரிய நமஸ்காரம் செய்து வருவது நிச்சயம் நல்ல வேலை, தொழில் அமைய வழிவகுக்கும்.

சுய ஜாதகத்தில் சனிபகவான் எந்த வகையிலாவது பாதிக்க பட்டு இருப்பின் சனி பீரிதி செய்து கொள்வது, விரைவான நன்மையை தரும் சிறந்த வேலை, தொழில் நிச்சயம் அமையும்.

அல்லது மாற்று திறனாளிகளுக்கு ஜாதகரால் முடிந்த அளவு உதவிகளை எந்த வகையிலாவது செய்து வருவது விரைவான ஜீவன மேன்மையை தரும். செய்தொழில் வளர்ச்சி பெற முடியாமல் இருப்பவர்கள், தனக்கு கீழ் பணியாற்றும் தொழிலார்களிடம், கண்ணியமாகவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் தன்மையுடன், நடந்து கொள்வார்களே ஆயின் அந்த தொழில் விரைவில் முனேற்றம் பெரும்.

தனது தகப்பானார் மூலம் எவ்வித துன்பங்களை ஜாதகர் அனுபவித்தாலும், அதை ஏற்று கொள்வாரே ஆயின், ஜாதகர் செய்யும் தொழில் நிச்சயம் 100 சதவிகித வெற்றி பெரும், ஏனெனில் ஒருவகையில் ஜீவன ஸ்தானத்துடன், தகப்பானர் ஆதிபதியமும் சம்பந்தம் பெறுவதால், அதன் காரகதுவ வழியில் ஜாதகர் கர்ம வினை பதிவை தீர்த்துக்கொள்ள கிடைத்த ஒரு வழி, மேலும் ஜீவன வழியில் அதிக நன்மையை ஜாதகர் பெறுவார் இது உறுதி.

ஒன்றுமே இயலாத நிலையில் உள்ளவர்கள் கூட, கன்று குட்டியுடன் உள்ள ஒரு பசுவிற்கு ஒன்பது சனிக்கிழமைகளில் தொடர்ந்து ஒரு வாழை பழம் கொடுத்துக்கொண்டு வருவாரே ஆயின், சில நாட்களில் ஜாதகருக்கு நிச்சயம் நல்ல வேலை அல்லது தொழில் அமையும்.