ஆன்மீகம்

ஸ்ரீ அகத்தீஸ்வரர் ,ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி ஸ்தல வரலாறு பட்டுக்கோட்டை

ஸ்தல வரலாறு

மூலவர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் .
அம்பாள் ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி .
தல விருஷம் அரசமரம்.
தீர்த்தம் அகத்திய தீர்த்தம்.
பழமை காலம் தெரியவில்லை.
ஊர் பொன்னவாராயண் கோட்டை.
தாலுக்கா பட்டுக்கோட்டை.
மாவட்டம் தஞ்சாவூர்.
மாநிலம் தமிழ்நாடு .

திருவிழா :

மகா சிவராத்திரி , பங்குனி உத்திரம்

தல சிறப்பு :

அடிநாதம் அரசமர வேரிலிருந்து சுயம்புவாக தோன்றியிருக்கும் லிங்கம்.

திறக்கும் நேரம் :
காலை 6.00 மணி  முதல் 1.00 மணி மாலை 4.00 மணி இரவு 9.௦௦ மணி   வரை

தல பெருமை :

அம்மனும் அய்யனும் ஒரே  சந்நிதானத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்தலம்

 

அமைதியான சுழலில் இயற்கை எழில் கமழும் தென்னைமர காடுகளுக்கு நடுவில் அரசமரதடியில் அமைத்துள்ளது இந்த கோயில். இங்குள்ள அமைதியே அற்புதமான தெய்வீகம் . தென்னையின் தென்றல் தாலாட்டை அரசம் அசைந்து கேட்பது போல்.  இங்குள்ள அரசமர அடிவேருடன் தொடர்புடையது இந்த லிங்கம். தனியாக பிரிக்க முடியாத வேர்களுடனும் , மரத்தோடும் தொடர்புடைய சிவலிங்கம் பெருமான்                 ஸ்ரீ அகத்தீஸ்வரர். அய்யனின் சொரூபம் வேறு எங்கும் காணமுடியாத தோற்றமாக இருக்கும். தெய்வீகத்தை ரசிக்க தெரிந்தவர்களே லிங்கத்தின் அழகை அறியமுடியும்.
இத்தலத்தில் உள்ள அம்மன் ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அதி சக்தி வாய்ந்த அம்மன். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை போக்கும் சக்தி .  நேர் திசையில் இல்லாமல் தென்கிழக்கு திசையில் அமைந்திருப்பது கண் கொள்ள காட்சி. அம்மன் அந்துனை அழகு. தாயரில் கண்கள் மிகவும் விசேஷமானவை. ஒரு கண் அப்பன்         ஸ்ரீ அகத்தீஸ்வரையும் இன்னொரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களையும் காணும். இதில் இன்னொரு அம்சம்  கோபமுடைய முகமாகவும், சிரித்த முகமாகவும் காட்சி அளிக்கும் இந்த அம்மன் நம் எண்ணங்களின் பிரதிபலிப்பு.  

இங்குள்ள முருக பெருமானின் சிலை மிக மிக அழகான தோற்றமுடிய இந்த சிலை பழனி முருகனின் சிலை வடிவிலே இருக்கும். கார்த்திகை , ஷஷ்டி நாட்களில் அபிஷேகம் செய்து வழிபட தொழில் சிறக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

ராகு கேது என தனியே கொண்டுள்ள இந்த கோயிலில் நவகிரகங்கள் இல்லை. நாக தோஷம் , களத்திர தோஷம் , காள சர்ப்ப தோஷம் என ராகு , கேதுக்களால் ஏற்ப்படுகின்ற தோஷங்களை போக்கும் ஸ்தலம். அமாவாசை , பௌர்ணமி நாட்களில் பாம்பு சிவனின் பின்னால் உறைவிடமாக கொள்ளுமாம். ராகு கேது தோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி வழிபடுதல் தோஷம் நீங்கி சுபநிகழ்ச்சிகள் கை கூடும்.   
தல வரலாறு :

அகத்திய குறுமுனி மிக முக்கிய மருந்து தேவைக்காக தேவையான மூலிகை கிடைக்காமல் யோசித்த நேரம் வேதாரண்யம் வேதபுரீஸ்வர் தோன்றி வேதாரண்யம் அருகில் உள்ள மூலிகை வனத்தில் அந்த மூலிகை கிடைக்கும் என சொல்ல , அகத்தியர் தன் சிஷ்ய கோடி பரிவாரங்களுடன் புறப்பட்டார். செல்லும் போது வழியில் இந்த இடத்தை கடந்த போது அசரரி வாக்கு கேட்க அவ்விடத்தில் அடிவேருடன் தொடர்புடைய லிங்கம் பெருமானை மகிழ்ச்சி அடைத்து லிங்கத்தை எடுத்து பிரத்ஷ்டை செய்து வழிபட்டு சென்றரர். பின் வேதபுரிஸ்வரரை தரிசனம் செய்து மூலிகை மருத்துகளை எடுத்து கொண்டு செல்லும் போது இந்த லிங்கத்தின் அழகை காண மறுபடியும் வந்து தரிசனம் செய்ததாக செப்பேடு கூறுகிறது. அதனால் அய்யன் ஸ்ரீ  ஸ்ரீ அகத்தீஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

தற்போது :

நாளடைவில் மறைத்து போன இவ்விடத்தை பொன்னவாராயண் கோட்டை திரு. சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு அம்மன் நேரில் அருள் பாலித்து காட்சியளித்து மறுபடியும் இத்தலம் புத்துயிர் பெற்றுள்ளது நிகழ்கால வரலாறு.  இங்கு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு தன்னால் இயன்ற பெரும் உதவிகளை அம்மன் ஆருளால் செய்து வருகிறார். அவரில் இறை பணி சிறக்க அம்மன் ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அருள வேண்டும் என்பதே பயனடைந்த மக்களின் வேண்டுதல்.

சிறப்பம்சம் :

துஷட்ட சக்தி (பேய்) பிடித்தவர்களை விரட்டும் இடம் , ராகு & கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடை , குழந்தையின்மை ஆகியவற்றை போக்கும் ஸ்தலம்.

நேர்த்திகடன் :

தெய்வங்களுக்கு  வஸ்திரம் , மஞ்சள், கற்பூரம், பத்தி , நெய், விளக்கேற்ற எண்ணெய் , சந்தனம்,

இந்த ஆலயத்தை நம்பினோர் வீழ்வதில்லை

 

தொகுப்பு

 நன்றி ;பிரவீண் குமார், பட்டுக்கோட்டை.