​ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி

​ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி

புதிதாக ஜோதிடம் கற்றுக்கொள்பவர்கள் கீழ் கண்டவாறு ஒரு படிவம் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். 
பிறகு உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் கீழ் கண்ட விவரங்களை தெரிந்துகொண்டு அவைகளை குறித்து வைத்துக்கொள்ளவேண்டும். 
குறைந்தது 100 பேர்களைப்பற்றிய தகவல்களை சேர்த்து வைத்துக்கொண்டால் அது ஜாதக ஆய்வுக்கு பெரிதும் உதவும்.

ஜாதக விவரம்

ஜாதகரின் பெயர்:

ஜாதகரின் பிறந்த தேதி:

ஜாதகரின் பிறந்த நேரம்:

ஜாதகரின் பிறந்த ஊர்:

ஜாதகரின் முக்கிய அங்க அடையாளங்கள் என்ன?

ஜாதகரின் குணம் எப்படி?

ஜாதகர் அவர் வீட்டில் எத்தனையாவது குழந்தை?

ஜாதகரின் ஆரம்பகல்வியில் பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு பணவருவாய் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு நல்ல பணவருவை வந்த காலம் எப்பொழுது?

ஜாதகருக்கு பணத்தகராரு உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு உடன்பிறப்புகள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் உடன் பிறந்தோர் எண்ணிக்கை எத்தனை?ஆண்,பெண் விவரம்.

ஜாதகருக்கு உடன் பிறந்தவர்களுடன் உறவு எப்படி?

ஜாதகருக்கு இடமாற்றம் ஏதாவது ஏற்பட்டதா?

ஜாதகர் பிறந்த இடம் விட்டு வேறு இடத்தில் குடியேறியவரா?

ஜாதகரின் தாய் எப்படி?அங்க அடையாளம் மற்றும் குணம்.

ஜாதகருக்கு தாயுடனான உறவு நிலை எப்படி?சுமூகமா? விரிசலா?

ஜாதகரின் தாய்க்கு வருமானம் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் தாய்க்கு நோய்கள் ஏதாவது உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் தாய்க்கு சொத்துக்கள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் தாய்க்கு கல்வித்தகுதி என்ன?

ஜாதகருக்கு அசையா சொத்து (நில புலங்கள்,வீடு) உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகர் சொத்து வாங்கிய காலம் எப்பொழுது?

ஜாதகருக்கு அசையும் சொத்து (வண்டி,வாகனம்) உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு சொத்து தகராரு உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் பள்ளிக்கல்வியில் ஏதாவது பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் கல்லூரிக்கல்வியில் ஏதாவது பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் கல்வித்தகுதி என்ன?

ஜாதகருக்கு காதல் அனுபவம் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு தெய்வ நம்பிக்கை உண்டா?(உண்டு/இல்லை)

ஜாதகருக்கு அரசியல் ஆர்வம் உண்டா?(உண்டு/இல்லை)

ஜாதகருக்கு கலை ஆர்வம் உண்டா?(உண்டு/இல்லை)

ஜாதகருக்கு குழந்தைபாக்கியம் உண்டா?(உண்டு/இல்லை)

ஜாதகருக்கு எத்தனை குழந்தைகள்? ஆண்,பெண் விவரம்.

ஜாதகருக்கு குழந்தை பிறந்த காலம் எப்பொழுது?

ஜாதகருக்கு குழந்தைகளால் நன்மை உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் குழந்தைகளுக்கு நோய்கள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு குழந்தைகளுடனான உறவு நிலை எப்படி?சுமூகமா? விரிசலா?

ஜாதகருக்கு கடன் தொல்லை உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு எதிரிகளால் தொல்லை உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு யாரால் என்ன தொல்லை?

ஜாதகருக்கு நோய்கள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு திருமணம் ஆகிவிட்டதா? (ஆம்/இல்லை)

ஜாதகருக்கு திருமணம் நடந்த காலம் எப்பொழுது?

ஜாதகருக்கு நடந்த திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டதா? அல்லது காதல் திருமணமா?

ஜாதகரின் திருமண வாழ்க்கை எப்படி? மகிழ்ச்சியானதா?

ஜாதகரின் திருமண வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமா?

ஜாதகரின் மனைவி அல்லது கணவன் எப்படி? அங்க அடையாளம் மற்றும் குணம்.

ஜாதகரின் மனைவி அல்லது கணவனுக்கு வருமானம் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் மனைவி அல்லது கணவனுக்கு நோய்கள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் மனைவி அல்லது கணவனுக்கு சொத்துக்கள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு அவமானம் ஏதாவது ஏற்பட்டதா?

ஜாதகருக்கு விபத்து ஏதாவது ஏற்பட்டதா?

ஜாதகருக்கு பயண சுகம் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு ஆன்மீக ஈடுபாடு உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் உயர்கல்வியில் ஏதாவது பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் தந்தையார் எப்படி?அங்க அடையாளம் மற்றும் குணம்.

ஜாதகருக்கு தந்தையுடனான உறவு நிலை எப்படி?சுமூகமா? விரிசலா?

ஜாதகரின் தந்தைக்கு வருமானம் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் தந்தைக்கு நோய்கள் ஏதாவது உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் தந்தைக்கு சொத்துக்கள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் தந்தைக்கு என்ன தொழில்?

ஜாதகரின் தந்தைக்கு கல்வித்தகுதி என்ன?

ஜாதகரின் தந்தை பிறந்த இடம் விட்டு வேறு இடத்தில் குடியேறியவரா?

ஜாதகருக்கு சொந்த தொழிலா? அடிமைத்தொழிலா?

ஜாதகர் என்ன தொழில் செய்கிறார்?

ஜாதகர் வேலைக்கு சேர்ந்த காலம் எப்பொழுது?

ஜாதகருக்கு உத்யோக உயர்வு கிடைத்த காலங்கள் எப்பொழுது?

ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்பட்ட காலங்கள் எப்பொழுது?

ஜாதகருக்கு தொழில் பிரச்சினை ஏதாவது உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு நண்பர்கள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு நண்பர்களால் உதவிகள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கிறதா?

ஜாதகரின் விருப்பங்கள் நிறைவேறுகிறதா?

ஜாதகருக்கு அதிருப்திகள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகர் வெளி நாடு பயணம் செய்துள்ளாரா?

ஜாதகருக்கு நன்றாக தூக்கம் வருகிறதா?

ஜாதகருக்கு எதிர்பாராத விரையங்கள் ஏற்பட்டுள்ளதா?

ஜாதகரின் வீட்டில் உள்ளவர்கள் யாராவது வெளி நாட்டில் வசிக்கிறார்களா?

ஜாதகரின் வீட்டில் யாருக்காவது விபத்து ஏற்பட்டுள்ளதா?

ஜாதகரின் வீட்டில் யாருக்காவது திருமணம் நடக்காமல் தடைபட்டுள்ளதா?

ஜாதகரின் வீட்டில் யாருக்காவது உடல் ஊனம் உள்ளதா?

படித்ததில் பிடித்தது.