ALP ஆய்வு

#ALP ஆய்வு பற்றிய பதிவு:
=====================

இன்று காலையில் எப்போதும் போல புதிய நபர்கள் ஜாதகம் பார்க்க வந்திருந்தனர்.

ஜாதகம் பெறப்பட்டது.

ஜாதகம் ஆய்வு செய்யப்பட்டது.

தரப்பட்ட ஜாதகத்தில் 1 5 9 குரு + செவ்வாய் + சனி தொடர்பு சம்பந்தப்பட்டது.

யான்:
உங்கள் ஜாதகத்தோடு செல்வமணி, செல்வராஜ், ராஜகுமாரி, ராஜாமணி, போன்ற பெயர்கள் சம்பந்தப்படுகிறது. இவர்கள் யாரையாவது சமீபமாக சந்தித்தீர்களா? அல்லது உங்கள் வீட்டு நபரா? அல்லது உங்கள் நண்பரா? என்று வினவப்பட்டது.

ஜாதகர்:
மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியோடு, ஆம் ஐயா செல்வமணி எங்கள் வீட்டு அருகில் உள்ள நபர் வரும் வழியில் அவரை சந்தித்து விட்டு வந்தோம். ராஜகுமாரி எங்கள் உறவுக்காரப் பெண்.
அதிர்ச்சியில் இருந்து மீளாமல் எப்படி சொல்கிறீர்கள் என்று வினவினார்கள்.

யான்:
தொடர்ந்து அவர்கள் கேள்விகளுக்கு அவர்கள் வந்த நோக்கத்திற்கு ஜாதகத்தில் என்ன உள்ளதோ அதை மறக்காமல் அப்படியே சொல்லிவிட்டு அதற்குரிய எளிய சூட்சும பரிகாரங்கள் சொல்லப்பட்டது.

அவர்களும் திருப்தியோடும் மகிழ்ச்சியோடும் சென்றனர்.

இதுபோன்று ஒருவர் ஜாதகத்தை வைத்து மிகத் துல்லியமாக அவர்களோடு தொடர்பு கொள்ளக்கூடிய அனைத்து விஷயங்களையும் நம்மால் சரியாக கணிக்க முடியும்.

இந்தியாவிலேயே முதன் முறையாக பெயரியல் தொடர்பான விஷயங்களை கூறுவதில் முதன்மை ஜோதிடராக நெல்லை வசந்தன் ஐயா ஆரம்பித்து வைத்தார்.

தற்போது #ALP முறையில் இது எளிய முறையில் சாத்தியம்.

இதுதாங்க ஜோதிடம். ஜோதிடத்தில் சரியான முறையில் அணுகினால் அன்றாடம் நடக்கக் கூடிய நிகழ்வுகள் அனைத்தையும் மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும்.

ஜோதிடம் எந்த அளவு உண்மை என்று மக்களுக்குப் புரிய வைக்கவே இந்த பதிவு. உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எனது ஜோதிட ஆய்வுகள் அவ்வப்போது பகிர்ந்து வருகிறேன்.

அனைத்து குருமார்களுக்கும் நன்றிகள்!

பிரபஞ்சத்திற்கு நன்றிகள் பல!

வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

₹#சந்திரமௌலி
ALP ஜோதிட ஆராய்ச்சியாளர்.