சாதகப் பொருத்தம்

101

சாதகரீதியான பொருத்தம் பார்ப்பதில் முக்கியமாக ஒரு விதிவிலக்கு பாடலை இங்கு நினைவுகூறுகிறோம் .”ஏகாதிபத்யே மைத்ரேவ சமசபதம ஏவச்ச  ரஜ்ஜீ தோஷ,ராசிதோஷ ,கணம் தோஷ ,நவித்யதே ” இதன் அடிப்படையில் ஆண்ட,பெண் இருவருக்கும் இராசி அதிபதிகள் ஒரு ராசி இருந்தாலும் ,நண்பர்களாக இருந்தாலும் எந்த தோஷமும் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என்று தெளிவுப்படுகிறது .ஆகவே ஆண்,பெண் இருவருடைய ராசியும் ,நண்பர்களாக இருப்பது மிக மிக முக்கியமாகும்.முதல் வகை மேஷம் ,கடகம்,சிம்மம்,விருச்சிகம்,தனுஷ் ,மீனம்,ஆகிய இந்த ஆறு ராசிகளும் தங்களுக்குள் நண்பர்களாக இருக்கும்.அதே போல் ரிஷபம், மிதுனம,கன்னி,துலாம்,மகரம்,கும்பம்,இந்த ஆறு இராசிகளும்தங்களுக்குள் நண்பர்களாக அமைந்தால்,வாழ்கையில் எத்தனை சண்டைகள் வந்தாலும்,மனதளவில் ஓன்று படக்கூடிய அமைப்பு நிச்சயமாக இருக்கும்,அப்படி இல்லாமல் மாறுப்பட்ட ராசி அமைப்புகள் இலக்கனங்களாக இருக்கும் பொழுது ,சண்டைகள் ஏற்படின்மனதளவில் பிரிவு எண்ணங்களையே அதிகப்படியாக தோற்றிவிக்கும் .இதனால் இலக்கின அதிபதிகள் நண்பர்களாக இருப்பது மிக மிக நல்லதாகும்.ஒரே இலக்கினமாக இருப்பதுஅதைவிட நல்லதாகவும் இருக்கும்.