ஜாதகம்

images (1)

என்பது 12பாவகங்களுடன் இறை அருளால், ஒவ்வொருவரும் தாம் செய்த வினை பதிவிற்கு ஏற்றார் போல் 12 பாவக அமைப்பில் இருந்து பாவக வலிமை மற்றும் சிறப்பு தன்மை என்ற அடிப்படையில் வழங்கபடுகிறது, எப்படி ஒரு நபருக்கு ஆதார் அடையாள அட்டையில் உள்ள விபரங்கள் மற்ற ஒருவருக்கு ஒத்து போகாதோ, அதை போன்றே ஒருவரின் ஜாதகத்தில் உள்ள பாவகத்தின் தன்மை மற்ற ஒருவருக்கு ஒத்து போகாது, ஆதார் அடையாள அட்டையில் உள்ள பொதுவான விஷயங்களான கண்ணின் விழித்திரை, கைரேகை,பெயர், முகவரி, பிற சுய குறிப்புகள்,புள்ளி விவரங்கள் ஆகியவை அனைவருக்கும் பொதுவாக இருப்பது போல், நவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே விதமான அமைப்புடன், தனது ஜீவ சக்தியை வழங்குகிறது, மேற்கண்ட குறிப்புகளான கண்ணின் விழித்திரை, கைரேகை,பெயர், முகவரி, பிற சுய குறிப்புகள்,புள்ளி விவரங்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசம் பெறுவது போல், சுய ஜாதகத்தில் 12 பாவகங்களும் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலை என்ற அமைப்பில் வித்தியாசபடுகிறது. எனவே நவகிரகங்கள் பூமியில் ஜெனனம் செய்யத மனிதர்கள் அனைவருக்கும், ஒரே மாதிரியான ஜீவ காந்த சக்தியையே தருகிறது, மனிதர்களின் சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்கள் தனது கொள்ளளவுக்கு ஏற்றவகையில் கிரகங்களின் ஜீவசக்தியை பெற்று ஒரு ஜாதகருக்கு தனது பாவக வழியில் இருந்து யோக பலன்களையோ, அவயோக பலன்களையோ வாரி வழங்குகிறது.