கன்னி

பொது பலன்
இனிமையாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும் கன்னி ராசி அன்பர்களே!

கடந்த காலங்களில் நடைபெற்ற ஏழரைச்சனி முழுமையாக முடிந்து இந்த 2015-ஆம் ஆண்டில் சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும், பொருளாதாரரீதியாக மேன்மையும் கொடுக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் திருமண சுப காரியங்கள் கைகூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எல்லா தேவைகளும் நிறைவாகப் பூர்த்தியாகும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் யாவும் வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரரீதியாக மேன்மைமிகு பலன்கள் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலையும் அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் கௌரவங்களும் தேடி வரும். 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு விரய ஸ்தானமாகிய 12-ஆம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களுக்கு வீண் செலவுகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும், சனி பகவான் 3-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து சமுதாயத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். பிரிந்துசென்ற உறவினர்கள் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கடன்களனைத்தும் குறையும்.

உத்தியோகஸ்தர்கள் உயர்வடையக் கூடிய காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. எதிர்பார்க்கும் கௌரவப் பதவிகளும் ஊதிய உயர்வுகளும் தேடி வரும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்துமுடித்து உயரதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள் உங்களிடமுள்ள திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறவர்களின் விருப்பம் நிறைவேறும். பயணங்களாலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் சிறப்பாக அமையும். நல்ல நிர்வாகத் திறமையும் உங்களிடம் பளிச்சிடும்.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு லாபத்தை அடையமுடியும். போட்டி, பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் மறைவதால் புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். சொன்ன நேரத்திற்கு ஆர்டர்களையும் சப்ளை செய்வதால் மேலும் மேலும் முன்னேற்றங்களைப் பெறமுடியும். புதிய இடங்களில் கிளைகள் நிறுவும் நோக்கங்களும் நிறைவேறும். அரசு வழியில் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கப்பெறும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவுகள் உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.download (2)