Subscribe

Blog

இவரது தவ வலிமையில், பிரசன்னம் ஓர் அங்கம்.

இவரது தவ வலிமையில், பிரசன்னம் ஓர் அங்கம்.

பண்டைய காலத்தில் கோவில்கள் ஆங்காங்கே கட்டப் பட்டுள்ளது; ஆயினும் புராதான கோவில்களுக்கு சிறப்பு அதிகம். மூலகிரகம் அல்லது கர்ப்பகிரகம் என்ற இடத்தில் மூலவர் காலடியில், அஷ்டபந்தன கலவைகளைக் கொண்டு உலோகங்களை பயன்படுத்தி, பிரதிஷ்டை செய்து, தாமரை கம்பியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட உலோகத்தில் இருந்து அந்த கர்ப்பக்கிரக விமானத்தின் கலசத்தோடு இணைத்து,  சதுர்வாசலின் கலசத்தின் வாயிலாக, கிழக்கு திசை கொடி மரத்தின் வழியாக, இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் இறை சக்தியினை கிரகித்து, அந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, அவர்களின் சரீரத்தில் தேங்கி இருக்கும் தீயக் கதிர்வீச்சினை வெளியேற்றி, இறை சக்தியை பாரபட்சம் இன்றி, ஏற்றத் தாழ்வுகள் இன்றி, வரும் எல்லோருக்கும் புகுத்துகின்ற விசேஷ விஞ்ஞானமாக திகழ்ந்து வருகிறது.


உலோகங்கள் அனைத்தும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது. நாம் உருவம் கொடுத்து வழிபடும் கடவுள் யாவும் கிரகங்களின் ஒரு வித காலத்தின் தோற்றமே. உதாரணத்திற்கு தங்கம் என்பது குரு பகவானின் கடாக்ஷம் கொண்டது. அதாவது குரு பகவானின் கதிர்வீச்சு இந்த பூமியோடு கலக்கும் பொழுது இரசாயன மாறுதலுக்கு உட்பட்டு தங்கமாகிறது. அவ் வண்ணமே மஞ்சள் கிழங்கும், குரு பகவானின் கடாக்ஷமாகும். தட்சிணாமூர்த்தி என்பவர் குரு கிரகமே. எனவே தட்சிணாமூர்த்தியை பிரதிஷ்டை செய்யும் போது, தங்கத் தகடைக் கொண்டு பிரதிஷ்டை செய்ய,  குரு பகவானின் கதிர்வீச்சு அங்கு முழுவதுமாக  கிரகிக்கப்படுகிறது.

இப்படி திசை அறிந்து, உலோகம் அறிந்து, இயற்கையின் புவியீர்ப்பு சக்தி அறிந்து, அந்த இடம் ஆகாயத்திலிருந்து கிரகிக்கும் சக்தியை உணர்ந்து, நம் முன்னோர்களால் புராதன கோயில்கள் வடிவமைக்கப்பட்டன.
 

ஒரு கோயிலுக்குள் சக்தியைக் கொண்டு வர, தன் தவ வலிமையினால் சித்தி அடைந்த, பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்ட ஒருவராலேயே பிரதிஷ்டை என்கிற இறைப்பணியை ஸ்தாபனம் செய்ய முடியும். இந்தப் புரிதலைத் தந்த வாக்கு யோகி அவர்களுடன், நானும் எனது கணவரும், ஒரு நாள் பெங்களூர் பீமா நகரிலுள்ள பஞ்ச சக்தி தேவஸ்தானம் என்ற அம்பாள் கோயிலுக்கு சென்று இருந்தோம். அது காலைப் பொழுது. சுமார் ஒன்பது மணி இருக்கும். பெங்களூரில் வானிலை என்பது மனதிற்கு ரம்மியமான அந்த வேளையில், அம்பாளை தரிசனம் செய்து முடித்து விட்டு, ஈசான்யத்தில் இருக்கும் கோயில் அலுவலகத்தில், அதிகாரி எங்களை வரவேற்ற வண்ணம் உள்ளே அழைத்து அமரச் செய்தார். 

 

பேசிக் கொண்டிருந்த போது, அந்த கோயில் நிர்வாகி, வாக்கு யோகி ஐயாவிடம், இந்தக் கோயிலைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க, வாக்கு யோகி அவர்கள், ஒரு நொடிப் பொழுது, கண் மூடி திறந்த வேளையில், "என்ன தரைக்கு கீழே தண்ணி இருக்கு, அதற்கு மேல அம்பாள் பிரதிஷ்ட பண்ணி இருக்கீங்க...." என்று கூறினார்.

அதற்கு அந்த கோயில் நிர்வாகி, இருக்கையை விட்டு எழுந்து இரு கைகள் கூப்பி, வணக்கம் செய்து, "ஐயா..! இது என்ன ஆச்சரியம்... இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்.... இந்த கோயிலுக்கு பல வருடங்களாக வந்து போகக்கூடிய மக்களுக்குக் கூட இது தெரியாது... ! நீங்க எப்படி சொன்னீங்க? இந்த கோயிலைக் கட்டும் போது நீங்க இங்கே எதாச்சும் வந்தீங்களா...?" என்று கேட்டார். எப்பொழுதும் போல வரிசை பற்களின் ஓரச் சிரிப்பில் முடிந்தது வாக்கு யோகி ஐயாவினுடைய பதில்!

அதன்பிறகு ஐயா அவர்கள் அது பற்றி கூறுகையில், "அது ஒண்ணும் இல்ல.... பிரசன்னம் தான்.... பிரசன்னம் போட்ட போது தனுசு லக்னம், எட்டுல குரு உச்சத்துல... எட்டுங்குறது மறைவு.... சந்திரன் என்கிறது பெண்... அது ஜல ராசி... அதனால கீழ தண்ணி ஓடிக் கிட்டு இருக்கு... அதுக்கு மேல அம்பாள பிரதிஷ்ட பண்ணி இருக்காங்க.. ! இது எல்லாமே கணக்கு தான்யா... இந்த பிரபஞ்சமே கணக்கு அடிப்படையில் தான் ஓடிக் கிட்டு இருக்கு..." என்றார்.
 

இந்தப் பிரசன்ன கணக்கிற்கு வியப்படைந்த நான், வாக்கு யோகி ஐயாவிடம், "இந்தக் கணக்குகளை சித்தர்கள் பெரியளவு பயன்படுத்தி இருக்கிறார்கள்...!" என்றுக் கூறி மனம் நெகிழ்ந்தேன்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தின் (ALP Astrology) மூலம், நடந்த உண்மையான நிகழ்வுகளை கொண்டு இந்தப்  பதிவானது செய்யப்படுகிறது. 

 

அட்சயம் வளரும். 

நன்றி.

ALP ASTROLOGY FACEBOOK: https://www.facebook.com/share/166o8XydVq/

ALP ASTROLOGY INSTAGRAM: https://www.instagram.com/alp_sasti_tv_official?igsh=MWs4OWJobWVwazM3dg==

ALP ASTROLOGY OFFICE: 9363035656 / 9786556156

ALP ASTROLOGY,
ALP ILLAM, No.18A Ganesh Nagar (First Right),
Old Perungalathur (NEAR LOTUS POND),
S.V Nagar Post, Chennai - 600063,
Tamil Nadu, India.

Email:
alpastrologyoffice@gmail.com 
alpastrology.org@gmail.com 

 


About author

RADHAKRISHNAN

ALP ASTROLOGER KUNTIKANA RADHAKRISHNA BHAT KERALA



Comments


Leave a Reply

Subscribe here

Scroll to Top