Subscribe

Blog

திருமணத் தடைக்கு என்ன காரணம்? - ALP ஜோதிட ஆய்வு.

அனைவருக்கும் வணக்கம். 

இந்த நாள், இனிய நாளாக அமைய, வாழ்த்துகள். 

நிறைய பேர்,  திருமண வாழ்க்கையில் ஏற்படக் கூடிய நெருடலான சூழ்நிலைகள், திருமண வாழ்க்கை அமையவில்லை, திருமணம் தாமதமாகிறது, என்று சொல்கிறார்கள். அதே போல், ஒரு பெண் இருக்காங்க. ஒரு பையன் இருக்காங்க. பார்க்கிறார்கள், பேசுகிறார்கள், பிடிக்கிறது. ஆனாலும் திருமணம் கூடி வரவில்லை. இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும் என்பதை அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய திரு.  பொதுவுடைமூர்த்தி சார் அவர்களிடம் அட்சய லக்ன பத்ததியில், எந்த மாதிரியான நிகழ்வுகள் இருந்தால் அந்த மாதிரியான சூழ்நிலையில் அமையும் என்பதை, கேட்டுத்  தெரிந்து கொள்வோம். 

https://youtu.be/HCxHsmv7iuE?si=Oiwj4mbFINL7Vr8x

 

 

 

">

 

 

 

 

 

பொதுவுடைமூர்த்தி ஐயா : 

திருமணம் என்கின்ற பந்தம் 21 வயதிலிருந்து 30 வயது வரை. வாழ்க்கையில் நிறைய பேருக்கு, பெரிய எதிர்பார்ப்பு,  பெரிய விஷயம் எது என்றால், திருமணம். 

உதாரணமாக, வெளிநாட்டுக்குப் போகிறீர்கள் என்றால்,  இன்னைக்கு காலையில் 9 மணிக்கு உங்களுக்கு பிளைட். நீங்க அந்த பிளைட்டுக்கு போகிறீர்கள். வெளிநாட்டிற்கு போகும் போது, சொகுசாக பார்ப்போம், நல்ல பிளைட்டாக பார்ப்போம். நம் நேரத்திற்கு ஒத்து வருகிறதா என்று பார்ப்போம். இதுபோல் பார்ப்போம் அல்லவா? இப்படி பார்க்கும் போது, காலை 9 மணிக்கு பிளைட். இந்த பிளைட்டில் போகிறீர்களா என்று கேட்கிறார்கள். நீங்கள் இல்ல இல்ல காலையில் 9 மணிக்கு பிளைட் முடியாது,  என்று சொல்கிறீர்கள். சரி இந்த பிளைட்டை விட்டால், அடுத்த பிளைட் எப்போது என்றால் அடுத்த நாள் காலையில் 9 மணிக்கு தான். அதே பிளைட் தான். மறுபடியும் எவ்வளவு நாள்? ஒரு 24 மணி நேரம் கழித்து தான் ஒரு பிளைட். 

இது போல தான், திருமண வாழ்க்கை. ஒரு பொண்ணும், ஒரு பையனும் பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், இது பொருந்துகிறது, பொருந்தவில்லை, அழகாக இருக்கிறது, உயரமாக இருக்கிறது, கட்டையாக இருக்கிறது, படிச்சிருக்கு, படிக்கல, பேசுது, எங்க வீட்டுக்கு ஒத்து வருது, ஒத்து வரல. இப்படி, தனி நபர் சார்ந்த விஷயம், பெண்ணோடு சார்ந்து,   

ஆணோட சார்ந்து, குடும்பம் சார்ந்து, படிப்பு சார்ந்து,  வருமானம் சார்ந்து, தொழில் சார்ந்து, வெளிநாடு சார்ந்து,  இப்படி ஆயிரம் ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு செய்கிறோம் அல்லவா?    

ஒரு எதிர்பார்ப்பு இருந்தாலே ஒரு விஷயம். இப்போ ஒரு எதிர்பார்ப்பு வந்து, ஒரு பெண்ணோ பையனோ பிடிக்கிறது என்று முடிவு செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான், மறுபடியும் வாய்ப்பு கடவுள் கொடுக்குமா என்றால், கொடுக்கவே கொடுக்காது. 

திருமதி. சாந்தி தேவி :

எல்லோரும் எதிர்பார்க்கும் இயல்பான விஷயங்கள் தானே சார். நம்ம பெண்ணிற்கும், நம்ம பையனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்று.

பொதுவுடைமூர்த்தி ஐயா :

அது நடக்கக் கூடாது என்ற அமைப்பு இருக்கும். அப்போது தான், நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். நடக்கணும் என்று இருந்தால், பொண்ணு நல்ல பெண்ணாக இருக்கிறதா,  பரவாயில்லை கல்யாணம் பண்ணு. நடக்கக்கூடாது என்று இருந்தால், பொண்ணு என்ன படித்திருக்கிறது, பொண்ணுக்கு பாட்டு தெரியுமா, என்று கேட்பார்கள். பொண்ணு ஸ்டேஜ்ல பாடவா போகிறது? ஏன் இப்படி செய்கிறீர்கள்? பொண்ணு படிச்சிருக்கா? எங்க வீட்டுக்கு எல்லாம் வந்தால் பெண் வேலைக்கு போக வேண்டாம். படித்ததே வேலைக்கு போக வேண்டும் என்பதற்காக  படித்திருக்கும் அந்த பெண்ணிடம், நீ வேலைக்கு போக வேண்டாம். அது ஒரு ஆறு மாதம், ஒரு வருடம், இரண்டு வருடம் கழித்து, என்ன சொல்ல வேண்டுமோ, அதோட சூழ்நிலைகளே போக முடியாமல் போகும். அப்போது,  வேண்டுமானால் சொல்லலாம். வந்த அன்னைக்கே, எங்க வீட்டு மருமகள் வேலைக்கே போக கூடாது. எங்க வீட்டு பையன் இப்படி இருக்க கூடாது. பையனை சொல்வீர்களா? எங்க வீட்டு பையன் வேலைக்கு போக மாட்டான் என்று சொல்வீர்களா? எங்க வீட்டுப் பொண்ணு வேலைக்கு  போகக்கூடாது. எங்க வீட்டுப் பொண்ணு வேலைக்கு போகாது என்றால், எப்படி இருக்கும்? நான் வேலைக்கு தான் போவேன் என்று அந்தப் பெண் இருக்கும். எங்க வீட்டு மருமகள் எல்லாம் வேலைக்கு அனுப்ப மாட்டோம் என்று சொன்னால் முடிந்து விட்டது. அந்தப் பெண் கிடைக்காது. முடிந்து போச்சு. அந்தப் பெண் கிடைக்காது. அவ்வளவுதான் அந்த பஸ். பிளைட் சொன்னோம் பாருங்க, இன்றைக்கு ஒரு வாய்ப்பை விட்டு விட்டால், இந்த பத்து வருடத்தில் மூன்றே மூன்று வாய்ப்பு வரும். வந்தால் கல்யாணம் நடக்கும். இல்லையென்றால், அந்த பஸ் நல்லா இருக்கு, அந்த பஸ் நல்லா இல்லை. அந்தப் பெண் நல்லா இருக்கு. உயரமா இருக்கு. பொண்ணு கட்டையா இருக்கு. பொண்ணு ஒல்லியா இருக்கு. எவ்வளவு எதிர்பார்ப்பு என்று நினைக்கிறீர்கள். ஒரு தடவை, அந்த வாழ்க்கையை மிஸ் செய்து விட்டால் அவ்வளவுதான். மறுபடியும் கிடைக்கவே கிடைக்காது. தயவு செய்து, எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உறவுகளாக இருக்கலாம். அப்பா அம்மாவாக இருக்கலாம். ஏன் குழந்தைகளாக இருக்கலாம். ஒரு ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். ஒரே ஒரு முறை, எதிர்பார்ப்பு இல்லாமல், உங்களுக்கு பிடிச்சிருக்கா, பையனுக்கு பிடிச்சிருக்கா, பெண்ணிற்கு பிடித்திருக்கிறதா அப்படிங்கறத மட்டும் இரண்டு பேரும் மூவ் செய்து, கல்யாணத்தை கண்டிப்பாக நடத்திப் பாருங்கள். கண்டிப்பாக, அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். இப்படி நீங்கள் எதிர்பார்த்தீர்கள் என்றால், அது சின்னதாக கூட இருக்கட்டும். படிப்பு மட்டும் பாத்துக்குறேன் என்றால் அதுவும் எதிர்பார்ப்பு தான். வேலை மட்டும் தான் எதிர்பார்ப்பு அப்படின்னாலும்மே, அதுவும் எதிர்பார்ப்பு தான்.

திருமதி சாந்தி தேவி :

எதுவுமே எனக்கு வேண்டாம் சார். பார்க்க லட்சணமா, ஜோடிப் பொருத்தம் நல்லா இருந்தா மட்டும் போதும். 

பொதுவுடைமூர்த்தி ஐயா : 

அதுவுமே எதிர்பார்ப்பு தானே. பையன் உயரமா இருப்பான்,  பொண்ணு குட்டையா இருக்கும். பையனுக்கு ஏத்த உயரத்தில் பொண்ணு இல்லன்னு சொல்லுவாங்க. அவனுக்கு அப்படித்தான் அமைப்பே இருக்கு. 

சிம்ம லக்னத்துக்கு, பொண்ணு ஆள் பார்க்க வாட்டசாட்டமாக இருக்கும். ஏழாம் வீடு கும்ப லக்னம். பையன் ரொம்ப குட்டையா இருப்பான். இப்ப, இப்படித்தான் கல்யாணம் நடக்கும். பையனுக்கு பொண்ணு ஒரு இன்ச் கூட இருக்கு.  ஏன் இருந்துட்டு போகுது. பொருத்தம்னா என்ன, சினிமாவில் ஏதும் நடிக்கப் போகுதா? ஹீரோ ஹீரோயினா போய் நடிக்கிறதுக்கு? வாழ்க்கை, சந்தோஷமாக வாழ்வதற்கு. ஏன் இப்படி  பண்றாங்க. எப்பப் பாத்தாலும், அதப் பண்ணாத,  இதப் பண்ணாத, இப்படி இருக்காத, அப்படி இருக்காத. 

உதாரணமாக: பூரட்டாதி நட்சத்திரமாக இருந்தால், பையன் நல்லா குண்டாக இருப்பார். ஏழாம் வீடு, சிம்ம லக்கனம். சில நேரம் பொண்ணு ரொம்ப ஒல்லியா, கட்டையா இருக்கும். பொருத்தம் இல்லாத ஜோடி. ஆனால், எங்கேயாவது பொருத்தமான ஜோடி, அவ்வளவு சந்தோஷமாக சேர்ந்து வாழ்கிறார்கள் என்றால், அது ஒரு கேள்விக் குறி தான். ஒண்ணு, பையன் நல்லா படிச்சி இருப்பான், பொண்ணு படிக்காம இருக்கும். பையன் நல்லா வேலை பார்ப்பான்,  பொண்ணுக்கு வேலைய பத்தி யோசிக்கணும்னு இல்ல. பொண்ணு நல்லா வேலை பார்க்கும். பையனுக்கு வேலையே இருக்காது. அப்படி ஒரு திருமணம் நடந்த, ஆறு மாதம் கழித்து, ஒரு வருடம் கழித்து, இரண்டு வருடம் கழித்து, இரண்டு பேருமே வேலைக்குப் போவார்கள். இரண்டு பேருமே சம்பாத்தியம் செய்வார்கள். இப்படி நிறையப் பேர் பார்த்திருக்கிறோம். 

ஆனா பையனுக்கு வேலையே இல்ல, நான் பொண்ணு கொடுக்க மாட்டேன் என்று சொன்னால், பொண்ணு கொடுக்கும் போது மாப்பிள்ளைக்கு இத்தனை லட்சம் சம்பளம் என்று சொல்வார்கள் ஆனால் நான்கு மாதத்தில் வேலை போய் விடுகிறது. ஆறு மாதங்களுக்கு பிறகு வேலை போய் விடுகிறது. ஒண்ணுமே செய்ய முடியாது. நமக்கு வேண்டிய நண்பர் ஒருவர் பையனுக்கு நல்ல சம்பளம் என்று கொடுத்தார்கள். கொஞ்ச நாளில் அவர்  ஆக்சிடெண்ட்யில் கால் இழந்துட்டு முடிஞ்சு போச்சு. கால் அடிபட்டு போனது. அவுங்க ரொம்ப கஷ்டப்பட்டு வீட்டுல வச்சு, அவுங்கள காப்பாத்துனாங்க. அப்போ இந்த எதிர்பார்ப்புகள் சில நேரங்களில் ஏமாற்றங்களைக் கொடுக்கும். 

இந்த திருமண வாழ்க்கை என்பது, தயவு செய்து மறுபடியும் சொல்கிறேன், ஒரே ஒரு தடவை நீங்கள் வாய்ப்பை விட்டு விட்டால், யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும்  நினைத்துக் கொள்ளட்டும், பொண்ணும் பையனும் மட்டும் தான், இதில் தலையிட வேண்டும். அப்பாவோ அம்மாவோ தலையிட்டால், உறவுகள் தலையிட்டால், நீங்க முடிவு பண்ணுங்க, நீங்க இதுதான் பையன் இது தான் பொண்ணு அப்படின்னு பாத்துட்டு வந்து கொடுங்க. ஆனால் அந்த பொண்ணும் பையனும் பார்க்கும்போது, பேசும் போது,  நீங்கள் எந்த இடத்திலும் தலையிடாதீர்கள். உயரமா இருக்குன்னு சொல்லாதீங்க, கட்டையா இருக்கு அப்படின்னு சொல்லாதீங்க. எடுத்துட்டு வந்த போட்டோவையோ, இல்ல நேர்ல பார்க்கும் போதோ, அப்பா அம்மா எதுவும் பேசாமல் இருந்தாலே, அந்தப் பையனும் பொண்ணும் முடிவு செய்தார்கள் என்றால் கண்டிப்பாகத் திருமணம் நடக்கும். இல்லையென்றால், மறுபடி மறுபடி நாங்க எவ்வளவோ திருமண தகவல் மையம் பார்க்கிறோம். எவ்வளவோ திருமண பொருத்தம் பார்க்கிறோம். நாங்க 20 பொருத்தம் 30 பொருத்தம் 50 பொருத்தம் எல்லாம்  பார்க்கிறோம். அட்லீஸ்ட் நாங்கள் பொருத்தம் பார்க்கும் போது, ஏதாவது ஒரு ஜாதகம் சேர்ந்திடாதா, ஏதாவது ஒரு ஜாதகம் கல்யாணம் ஆகி விடாதா, என்று பார்க்கிறோம். இல்ல ரொம்ப சங்கடமா இருக்கிறது எங்களுக்கே. வேலை மட்டும் தான் எதிர்பார்ப்பு அப்படின்னாலும்மே, அதுவும் எதிர்பார்ப்பு தான்.

திருமதி சாந்தி தேவி: 

நான் சமீபத்தில் ஒரு ஜாதகம் பார்த்தேன் சார். பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் நல்ல பொருத்தம் இருக்கிறது. தலைச்சனுக்கு தலைச்சன் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். 

பொதுவுடை மூர்த்தி ஐயா : 

அது ஒரு பெரிய கதை இருக்கு. மூத்ததுக்கு, மூத்தது சேர்க்கக் கூடாது என்று. இப்படி ஒன்று இரண்டு கிடையாது,  நிறைய இருக்கிறது. தென் மாவட்டங்களில் எல்லாம்,  வழிவம்சமாக, குல தெய்வத்தைத் வைத்துத் தான் முடிவு செய்வார்கள். இந்த சாமியை கும்பிட்டால், இந்த வீட்டில் பொண்ணு எடுக்க மாட்டார்கள்.  ஏனென்றால் அக்கா முறை வரும். அவுங்க யார் என்று தெரிந்தே இருக்காது. இந்த வம்சத்தில் வந்தவங்க அக்கா முறை வராது. இந்த  சாமியை கும்பிட்டால் தான், இந்த பொண்ணு எடுப்பார்கள். அங்க தான் அவங்களுக்கு மாமா புள்ள அத்தை புள்ள முறை வரும் என்று சொல்வார்கள். அப்படி எல்லாம் முறைகள் இருக்கிறது. நிறைய முறைகள், நம் சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கு. நம்மளுடைய சமூக அமைப்புகள் இருக்கு. கௌரவங்கள் இருக்கு. புகழ் இருக்கு. அந்தஸ்து இருக்கு. நிறைய எதிர்பார்ப்புகள். ஒவ்வொருத்தருடைய திருமண வாழ்க்கையும், ஒரு பெண்ணினுடைய திருமண வாழ்க்கையும், ஒரு ஆணினுடைய திருமண வாழ்க்கையும்,  மிகப் பெரிய அளவில், ஒரு கேள்விக் குறியாக இருக்கிறது. தயவு செய்து இது எல்லாம் வேண்டாம். 

வாழ்க்கை என்னவென்றால், ஜோதிடத்தில் இப்படித் தான் அமைப்பு இருக்கிறது என்றால், அதற்கு தகுந்தார்ப் போல் மாற வேண்டும் இல்லையா? இல்ல, இல்ல பையனும் பொண்ணும் அப்படி ஜோடி பொருத்தம். அப்படி ஜோடி பொருத்தம்.  பொண்ணுக்கு பொருந்தவே பொருந்தாது. பையன் செக்க செவேர் என்று இருப்பான். பொண்ணு கன்னங்கரேல், என்று இருக்கும். பொண்ணு கருப்பா இருக்கும். பையன் செக்க செவேர் என்று சூப்பரா இருப்பார். நடிகர் போல இருப்பார். இப்படித்தான் பொருந்தும். இப்படித் தான் அவனுக்கு அமைப்பு இருக்கிறது. அவனிடம் போய், பையனும் சிவப்பு பொண்ணும் சிவப்பு. பையனும் கருப்பு, பொண்ணும் கருப்பு,  அப்படின்னு சேர்த்தா, அப்படி எல்லாம் அமையவே அமையாதுங்க. எப்பவுமே பிளஸ்யையும், மைனஸ்சையும் சேர்க்கணுங்கிறது தான் கடவுளோடு அமைப்பு. பிளஸ்ஸும் பிளஸ்ஸும், மைனஸும் மைனஸும் என்றால் எப்படி இருக்கும்? 

திருமதி சாந்தி தேவி :

நிறைய கல்யாணத்தில் இன்னொரு நிகழ்வு பார்க்கிறோம் சார். என்னவென்றால், ரொம்ப ஆடம்பரமாக கிராண்டா கல்யாணம் பண்ணுவாங்க. அந்த கல்யாண வாழ்க்கை, மூன்று மாதங்கள் கூட நிலைப்பதில்லை. அதே சமயம் சிலர், ரொம்ப எளிமையா செய்றாங்க. அவங்க காலம் காலமாக ரொம்ப நல்லா இருக்காங்க. இதுக்கு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா? 

பொதுவுடை மூர்த்தி ஐயா : 

நிறைய காரணங்கள் இருக்கு. உடனே சொல்வாங்க இதற்கு கண் திருஷ்டி பட்டு போனது என்று. சார் அவர் அவ்வளவு செலவு பண்ணி பண்ணினார். பொருத்தம் பார்த்து தானே திருமணம் செய்து இருப்பாங்க. பொருத்தம் பார்க்காமல் செஞ்சிருக்க மாட்டாங்க இல்லையா. கண்டிப்பா பொருத்தம் பார்த்துத் தான் பண்ணி இருப்பாங்க யாரோ ஒரு ஜோதிடரை பார்த்து இருப்பாங்க. ஜென்ம நட்சத்திரம், ஜென்ம ராசிக்கு அவங்க பொருத்தம் பார்க்கிறார்கள். நம்ம என்ன சொல்றோம் அட்சய நட்சத்திரத்திற்கு, இன்றைக்கு என்ன திசை நடக்குதோ அதற்குத்தான் பார்க்க வேண்டும். அதுதான் பொருத்தமா இருக்கும் என்று நான் சொல்கிறேன். பிறந்த குழந்தைக்கு பொருத்தம் பார்க்கிறீர்களா, இல்லை 25 வயது பொண்ணுக்கு பொருத்தம் பார்க்கிறீர்களா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். பொருத்தம் அப்படிங்கிறது ALP லக்னத்திற்கு ALP லக்னம். ARP க்கு ARP தான் பொருத்தம் பார்க்க வேண்டும். அப்படி பொருத்தம் பார்க்கிற அமைப்புகள் நல்லா இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். பெரிய கல்யாணம், சின்ன கல்யாணம், பெரிய சீர்வரிசை நடந்தது,  நூறு பவுன் போட்டார்கள், பிரம்மாண்டமாக ஆயிரம் பேர் லட்சம் பேரை கூப்பிட்டார்கள் என்பதெல்லாம் பிரச்சனை கிடையாது. இந்தப் பொண்ணும் பையனும் பொருத்தம் இல்லாத இணைகள், மூன்று மாதத்தில் பிரியக் கூடிய அமைப்புகள், இந்த ஜாதகத்தில் இருந்ததனால் பிரிந்தார்கள். மத்தபடி, சார் கண் திருஷ்டி ஆயிட்டு என்று சொல்வார்கள் அது எல்லாம் ஒவ்வொருத்தருடைய இயல்பு. நிறைய பேர் பார்த்திருக்கிறோம். ஜாதக அமைப்பு பொருந்தாது என்றால் பொருந்தாது தான். அது ஒரு மூன்று மாதம் ஆறு மாதத்தில் சில பேர் சேர்ந்துருவாங்க திரும்பி. என்னவென்றால் மறுபடியும் இது வெட்டி விட்டாலும் அதே போல சில விஷயங்கள். ஏன் என்ன காரணம் என்று கேட்க வேண்டும். அப்புறம் மறுபடியும் ஒண்ணு சேர்ப்பாங்க பாருங்க, அதேபோல வந்து விடக் கூடாது என்பதில் ரொம்ப கவனமா இருக்கணும். 

திருமதி சாந்தி தேவி: 

வகுப்பில் நீங்க நிறைய தடவை சொல்லி இருக்கிறீர்கள். சில நட்சத்திரங்கள் போகும்போது கட்டாயம் அவர்களுக்குள் பிரச்சனைகளையும் பிரிவினைகளையும் கொடுத்து விடும். அது என்ன பண்ணாலும் அந்த கிரகங்கள் நல்லா இருந்தாலுமே அதன் வேலையை செய்யும் என்று சொல்லி இருக்கீங்க அது என்ன மாதிரியான நட்சத்திரங்கள் அதற்கான காரணங்கள் என்ன?

பொதுவுடை மூர்த்தி ஐயா :

ஒரே ஒரு நட்சத்திரம், அது போல சொல்லும் போது விசாக நட்சத்திரம் ALP யாக போகும்பொழுது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் என நாம சொல்லுவோம். விசாக நட்சத்திரம் போகும் போது.  ஏனென்றால் ஒன்றுமில்லாத ஒன்று என்று சொல்லுவோம். புயல் வருகிறது என்றால், இரண்டு மேகம் மோதிச்சு, மின்னல் மின்னுச்சு, இடி இடிச்சது என்று சொல்வோம். காற்றுல வந்து ஒரு வெற்றிடம் உருவாகிறது. கடல்ல ஒரு வெற்றிடம் உருவாகுது. புயல்ல வந்து ஒரு பகுதியில், 2018ல் புயல் பத்தின விஷயங்கள் எல்லாம் நமக்கு தெரியும், ஒரு சாதாரண வெற்றிடம்னு நினைச்ச விஷயம், ஒரு ஊரு இல்ல ஒரு மாவட்டம் இல்ல இரண்டு மாவட்டங்கள் இல்ல 14 மாவட்டத்தை வந்து பெரிய போராட்டமா நிப்பாட்டுச்சு. வெற்றிடம் என்று சொல்லுவோம் ஒன்றும் இல்லாத ஒன்று. அதேபோல ஒரே ஒரு நட்சத்திர புள்ளி போகும் போது, ஒன்றுமில்லாத ஒன்று என்று நாங்கள் அடிக்கடி சொல்லுவோம். குரு நீங்க எங்கனாலும் வச்சுக்கோங்க சுக்கிரன் எங்கனாலும் இருக்கட்டும். 

உதாரணத்திற்கு, துலாம் லக்னத்தில் விசாக நட்சத்திரம் போகும் போது, எங்க வேண்டுமானாலும் இருக்கட்டும். சேர்ந்து இருக்கட்டும். ஆறு எட்டாக இருக்கட்டும். குரு உச்சமா இருக்கட்டும். குரு நீச்சமா இருக்கட்டும். சுக்கிரன் உச்சமா இருக்கட்டும். சுக்கிரன் நீச்சமா இருக்கட்டும். செவ்வாய் உச்சமா இருக்கட்டும். ஏன் செவ்வாய் எடுத்தேன் என்றால் ஏழாம் வீடு மேஷம். மேஷத்தின் அதிபதி செவ்வாய். ஒரு விஷயத்தை நாம் ஓப்பனாக பேசறோம் அல்லவா. இது யாருக்கு போனாலும் வெற்றிடத்தை கொடுக்கும். அப்போ வெற்றிடங்கள் வரும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய ஆய்வு. அதுக்காக தான் கொஞ்சம் கவனமா பாருங்க. நீங்க இந்த இடத்துல சொல்லுங்க. அதாவது பொண்ணுகோ பையனுக்கோ தெரிவியுங்கள். இந்த இடத்தில், ஒன்றுமில்லாத ஒன்றுக்கு எல்லாம் சண்டை போடுவீங்க. நீங்க சண்டைய பெரிதாக்காதீங்க. ஐயா, கொஞ்சம் பொறுமையா இருங்க. அப்பதான் அவங்களுக்கு புரியும். பள்ளம் இருக்குன்னு தெரிஞ்சா தானே, மெதுவா போவாங்க, கவனமா போவாங்க, பார்த்து போவாங்க, பள்ளமே தெரியலன்னா கொண்டு போய் விட்டுட்டு கால் உடைஞ்சு போச்சுங்க. சின்ன படியிலிருந்து விழுந்ததாலே கால் உடைஞ்சு போச்சுன்னு சொல்லுவாங்க. படில தடுக்கி விழுந்ததுனால. விசாக நட்சத்திரம் போகப் போகிறது. கொஞ்சம் பெரிய பள்ளமா இருக்கு பாத்து போங்க. அந்த கால கட்டங்கள் என்று சொல்லுவோம். அட்சய லக்னம் படிங்கன்னு சொல்றதுக்கு காரணமே இதுதான்.

திருமதி சாந்தி தேவி :

ஜாதகங்கள்ல பார்க்கும்போதே, இந்த பையனுக்கு இரண்டு கல்யாணம் இருக்கு.  இந்த பொண்ணுக்கு இரண்டாம் தாரம் கல்யாணம் ஆகக்கூடிய நேரம் இருக்கு. இப்போ பண்ணாதீங்க.  பண்ணீங்கன்னா கண்டிப்பா இரண்டாம் தாரம் தான் அப்படிங்குற அமைப்பு இருக்கு.  அதனால தள்ளிப் போடுங்க.  அப்படின்னு சொல்லி, நிறைய பேருடைய வாழ்க்கை ரொம்ப டிலே ஆகுது. இப்ப வரைக்கும் கூட கல்யாணம் பண்ண முடியாமல் தவிப்பதைப் பார்க்க முடிகிறது. இதற்கு என்ன செய்வது? 

பொதுவுடை மூர்த்தி ஐயா :

ஜாதகம் அப்படி இருக்க போய்த்தான் 27 வயது, 30 வயசு, 35 வயசு, 45 வயசு வரைக்கும் கல்யாணம் ஆகவில்லை. என்னைப் பொறுத்த வரைக்கும், கல்யாணத்தை முதலில் பண்ணுங்க, அது முதல் கல்யாணமா, இரண்டாவது கல்யாணமா, அப்படிங்கறத அப்புறமா பாத்துக்கலாம். என்னைப் பொறுத்த வரைக்கும் 25 வயசுக்குள்ள முதல் கல்யாணம். இல்லேன்னா 27 வயசுக்குள்ள முதல்  கல்யாணம் பண்ணுங்க. 27 வயசுக்கு பிறகு என்றால்,  இரண்டாம் தாரமா திருமணம் பண்ணிக்கோங்க. இரண்டு திருமணம் ஆகும்னா, உனக்கு 25 வயசு, இல்ல 26 வயசு.  அந்தப் பையனோ பொண்ணோ  ஒத்துக்கிட்டாங்கன்னா உடனே இரண்டாம் தாரப் பெண்ணோ அல்லது இரண்டாம் தாரப் பையனோ கல்யாணம் பண்ணுங்க. போதுமே.  இரண்டாம் தாரம் தான் பண்ண போறீங்க. அப்ப இரண்டாம் தாரம் உள்ள பெண்ணையே திருமணம் செய்து கொண்டால், அவ்வளவு சந்தோஷமாக போவாங்க. நல்ல புரிதல் இருக்கும். நல்ல மெச்சூர்டு இருக்கும். பொதுவாகவே 27, 28 வயதிற்கு பிறகு ஆண்களுக்கும் பெண்களுக்கும் புரிதல் தன்மை வந்துவிடும். 

சும்மா, 35 வயசு 40 வயசு 50 வயசு, 55 வயசு, அப்படின்னா எப்ப தான் கல்யாணம் பண்றது? ஏன் இரண்டு கல்யாணம் எப்போ? 47 வயசுல. அப்போ மூணாவது கல்யாணம் 60 வயசுல. அப்போ அறுபதாம் கல்யாணம் தான் பண்ணனும். ஜாதக அமைப்பு அப்படி இருந்தா, அப்படித்தான் பண்ணிட்டு இருப்பாங்க. இல்ல சார், எனக்கு இரண்டு கல்யாணம் அப்படின்னா, வரட்டும் ஃபர்ஸ்ட். நீ முதல்ல ஒரு கல்யாணத்தை பண்ணுடா. அதுக்கப்புறம் இரண்டாம் கல்யாணம் பேசலாம். தயவு செய்து கல்யாணம் பண்ணி வைங்க. ஜோதிடர்களுக்கு எல்லாம் அன்பான வேண்டுகோள். 27 வயதுக்குள்ள முதல் கல்யாணத்தை முடித்து வையுங்கள். 27 வயதுக்கு பிறகு  முப்பது வயதுக்குள்ள பொறுமையா பார்த்து பண்ணுங்க. ஏனென்றால், இந்த காலகட்டங்கள் வேகமாக ஓடுகிறது. 45 வயசுல கல்யாணத்தைப் பத்தி பேசினா, நல்லா இருக்காது. 21 ல இருந்து 30 க்குள்ள கல்யாணம். 31 க்கே கல்யாணத்தை பத்திப் பேசக்கூடாது. 31 ன்னா ஜாதகமே பார்க்காத கல்யாணம் பண்ணு. அப்படித் தான் நான் சொல்லுவேன். 30 வயசுக்கு மேல பொறுமை வந்துரும். அந்த அமைப்பு வந்துடுச்சா,  ஜாதகம் வருதா, இதான் ஜாதகமா, முன்னாடி பார்த்த பொண்ணா, பையனா, சரியா. கடகடனு உடனே பண்ணு,  நல்லா பண்ணு. பொண்ணு வீட்ல பேசு, மாப்பிள்ளை வீட்டுல  பேசு, கல்யாணத்தைப் பண்ணு. யாரையும் கூப்பிடாத, உறவுகள்ல நாலு பேர கூப்பிடு. அக்கா வீட்ல கூப்பிடு. மாமா மச்சான் வீட்ல கூப்பிடு போதும். உடனே பண்ணி விட்டுடுவேன். இதுக்கெல்லாம், விளம்பரம் எல்லாம் போட்டு, ஊருக்கெல்லாம் கூப்பிட்டு, சாப்பாடு போடாத. ஃபர்ஸ்ட் கல்யாணத்தை பண்ணு. அப்புறம் ரிசப்ஷனை பெருசா,  கிராண்டா பண்ணிக்கோ. 

திருமதி சாந்தி தேவி :

செவ்வாயைப் பத்தி நாம  பார்த்தோம் சார்.  செவ்வாய் தோஷத்தினால் பாதிப்பு அப்படின்னு, ALP படிக்கிறதுக்கு முன்னாடி நிறைய பேர் சொல்லி இருக்காங்க. ALP படிச்சதுக்கு அப்புறம் அந்த தாட்ஸ் மாறிடுச்சு அப்படின்னு தான் சொல்லணும்.  ஆனா, இதுலயுமே ஒரு சிலர் என்ன கேட்கிறார்கள், எனக்கு ALP  ரிஷப லக்னம் போகுது, ஏழாம் இடத்தில் செவ்வாய் இருக்கிறது. அப்ப, இந்த பத்து வருடமும் இந்த செவ்வாய் என்னை பாதிக்குமா, என்று கேட்கிறார்கள்.

பொதுவுடை மூர்த்தி ஐயா :

ஒரு போராட்ட நிலையை கொடுக்குமா என்றால், கொடுக்கும் தான். அதுல, எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. என்னன்னா மிருகசீரிஷம் 1,2  போகும் போது, உங்களுடைய தாக்கம் என்ன செய்யும், கோபப்படுவோம், ஆதங்கப்படுவோம்.  வெறுப்பா இருக்கும். பொறாமைப் படுவோம். நம்மளை என்னன்னு தெரியாமலே அவுங்களை வந்து கோபப்பட வைக்கும். இது ஒரு பெண்ணோட ஜாதகம் என்றால், ஏழாம் வீடு கணவர் என்ன செய்வார் என்றால், இந்த மனைவியை கோபப்படுத்தி, கோபப்படுத்தி, காயப்படுத்துவார். இந்த பெண் அவரை திட்டிக்கிட்டே இருக்கும். ரெண்டு பேருக்குள்ளேயும் பெரிய ஒரு போராட்டமான நிகழ்வு நடக்கும். இதை புரிஞ்சிக்கிடாம, எனக்கு ரிஷப லக்னம், 7ல் செவ்வாய் இருக்கு, பத்து வருடம். 10 வருட பாதிப்பு உண்டா என்றால், உண்டு. பொதுவா உண்டு. ஒண்ணு, பெரிய அளவுல இல்ல. ஆனால், குறிப்பிட்ட எட்டு வருஷம் முடிந்த பிறகு,  கடைசி இரண்டு வருஷம், மிருகசீரிஷம் 1,2, அந்த காலகட்டங்களில், இந்தப் பெண், கண்டிப்பாக கணவனிடம் கோபப்பட்டு, சண்டை போட்டு, சண்டை வளத்துக் கிட்டு,  தேவையில்லாத கோர்ட்டு, கேஸ், வம்பு, வழக்கு, இழுத்துக் கிட்டு நிக்கறதுக்கு, ரொம்ப கவனமா இருக்க வேண்டிய இடத்துல இருக்காங்க. ரொம்ப பொறுமையா இருக்க வேண்டிய  காலம், இது தான். 

வீடியோ லிங்க்:  

https://youtu.be/HCxHsmv7iuE?si=Oiwj4mbFINL7Vr8x

 

 


About author

ALP Blog

Admin=> Have all rights



Comments


Leave a Reply

Subscribe here

Scroll to Top