Subscribe

Blog

பிரச்சினை இருக்கும் இடத்தை சுட்டிக் காட்டும் பாவகம். - ALP ஜோதிட ஆய்வு.

பிரச்சினை இருக்கும் இடத்தை சுட்டிக் காட்டும் பாவகம். - ALP ஜோதிட ஆய்வு. 

அனைவருக்கும் வணக்கம். 

நான், ALP அஸ்ட்ராலஜர் சாந்திதேவி ராஜேஷ்குமார். 

இந்த நாள், இனிய நாளாக அமைய வாழ்த்துகள். 

எல்லோரும் கேட்கும் ஒரு கேள்வி. ஜோதிடத்தில், ஒருவரின் ஜாதகத்தில்  8 வது பாவகம் என்றாலே பிரச்சனை தானா? 

ஆமாம். ஆனால், பிரச்சனைகள் இருக்கும் இடத்தை, சுட்டிக் காட்டுவது 8 வது பாவகம். 

நம்மை இயக்கக் கூடியது, 12 கட்டங்கள் அப்படின்னு சொல்லுவோம். ஒவ்வொரு கட்டங்களுக்குமே பல பொறுப்புகள் இருக்கு. அந்த ஒவ்வொரு பொறுப்புகளுக்குமே அவர்கள் தான் காரண கர்த்தாவாக இருக்கணும். 

இப்போ, 8 அப்படின்னா அதனுடைய பொறுப்பு என்ன? நம்முடைய உடல் கூறுகளை நாம 12 பாவகமாக பிரிக்கிறோம். அந்த 12 பாவகத்திற்கும், 12 பலன்கள் அப்படிங்கிறது  இருக்கு. அப்போ 8 ஆம் பாவகத்தோட பலன்கள் என்னவா இருக்கு, அப்படின்னா, நாம பிரதானமா எல்லாரும் கேட்கக் கூடிய என்னுடைய கர்மா எப்படிப்பட்டது? அப்படிங்கிற கேள்விக்குரிய பதிலும் 8 -ல் தான் இருக்கு. நான் எவ்வளவு வருஷம் வாழ்வேன், அப்படிங்கிற கேள்விக்குரிய பதிலும் 8 -ல் தான் இருக்கு. நம்முடைய, ஆயுள் பாவகம் அப்படிங்கிறது 8 ஆம் பாவகம். அப்போ அந்த 8 ஆம் பாவகத்தினுடைய சிறப்புகள் என்ன? அப்படிங்கிறது தான் இன்னைக்கு நம்ம வீடியோவில் பார்க்க போகிறோம். ஏன்னா எந்த ஒரு விஷயமே இது நல்லது, இது கெட்டது அப்படிங்கிறது கிடையாது. 12 பாவகங்களுமே நமக்குத் தேவையான விஷயங்களை கொடுக்கக் கூடிய ஒரு நிகழ்வுகள் தான். 

அதுல 8 அப்படிங்கிறது, கழிவு அப்படின்னு சொல்றோம். 

இப்போ நம்ம உடலில் எடுத்துக்கிட்டோம்னா, நம்மளுடைய தலையில் இருந்து பாதம் வரைக்கும் நம்ம உடல் கூறுகளை பிரிக்கும் போது, லக்னம் அப்படிங்கிறது தலைப்பகுதி. 

ரெண்டு அப்படிங்கிறது, நம்மளுடைய முகம் அப்படின்னு சொல்லலாம். 

மூன்று அப்படிங்கிறது, நம்மளுடைய கழுத்து, ஷோல்டர் பகுதிகள் அப்படின்னு சொல்லலாம். 

நாலு, இருதயம், மார்பு சம்பந்தப்பட்ட பகுதிகள்.   

ஐந்து என்பது, மேல் வயிறு சம்பந்தப்பட்ட பகுதிகள். 

ஆறு என்பது, அடிவயிறு சம்பந்தப்பட்ட பகுதிகள். 

ஏழு என்பது, முதுகுத் தண்டுவடம் சம்பந்தப்பட்ட பகுதிகள். 

எட்டு என்பது, பிறப்புறுப்புகள் சம்பந்தப்பட்ட, கழிவுகளை வெளியேற்றக் கூடிய பகுதிகள். 

ஒன்பது, அப்படிங்கிறது தொடை பகுதி. 

பத்து என்பது முழங்கால் மூட்டு பகுதி. 

பதின்னொன்று, கணுக்கால். 

பன்னிரண்டு என்பது பாதம். 

இதுதான், 12 உடல் கூறுகள் அப்படின்னு சொல்லலாம்.

அதுல 12 நிகழ்வுகள் அப்படிங்கிறது,  ஜாதகரை சுற்றி நிகழக் கூடிய தன்மைகள் எல்லாம் ஒன்றாம் பாவகம். 

அவங்க குடும்பத்தை சுற்றி நடக்கக் கூடியது, அவருடைய வருமானம் அப்படிங்கிறது, பண வருவாயை தரக்கூடிய பாவகம்,படிப்பு சம்பந்தப்பட்டது, அப்படிங்கிறது,  இரண்டாம் பாவகம்.

மூன்று அப்படிங்கிறது, அவருடைய முயற்சி. 

நாலு அப்படிங்கிறது,  அவருடைய தாய், சொத்து, சுகம் சார்ந்தது. 

ஐந்து, பூர்வ புண்ணியம் குழந்தைகள். 

ஆறு, எதிர்ப்புகள், நோய், கடன். 

ஏழு என்பது, கணவன், மனைவி, நண்பர்கள். 

எட்டு என்பது ஆயுள். அப்ப அந்த ஆயுள் தானுங்க ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். அப்ப இந்த ஆயுள் பத்தி நம்ம ஏன் பயப்படனும். 8 ஆம் பாவகம் நல்லா இருந்தா தான், மனிதன் ஆயுளோடு இருக்க முடியும் அப்படிங்கிற ஒரு நிகழ்வு இருக்கு இல்லையா? 

அப்போ, ஒவ்வொரு கட்டத்திலும், நிறைய விஷயங்கள் இருக்கு. நம்ம மனிதனுக்கு தேவைப்படக் கூடிய  பலன்களை எடுக்கிறோம் அப்படின்னா, அதில் 8 ஆம் பாவகம் மிக முக்கியமான பாவகம். திடீர் நிகழ்வுகளை தரக்கூடியது, 8 ஆம் பாவகம் தான். திடீர் அதிர்ஷ்டங்களை தரக் கூடியதும், 8 ஆம் பாவகம் தான். அதே நேரத்துல நமக்கு பிரச்சனைகள், தீராத பிரச்சனைகளைத் தரக் கூடியதும் 8 ஆம் பாவகம் தான்.

அப்போ இந்த 8 ஆம் பாவகம் அப்படிங்கிறது பிரச்சனைக்குரிய பாவகம், அப்படிங்கிறத விட, எங்கெல்லாம் நாம தப்பு பண்ணியிருப்போம், எங்கெல்லாம் நாம கர்மாவை கழிப்பதற்கு மிச்சம் வச்சிருக்கோம் அப்படிங்கிறத குறியிட்டு சுட்டிக் காட்டக் கூடிய பாவகமே 8 ஆம் பாவகம், அப்படின்னா பொருத்தமாக இருக்கும். 

இப்போ நாம ALP அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்துல ரொம்ப இம்பார்டன்ட் அப்படிங்கிறது, ஒவ்வொரு பாவகத்துக்கும் பல செயல்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்த 8 அப்படிங்கிறது, நம்மளுடைய கழித்தல், நம்மளுடைய கர்மாவை கழித்தல் அப்படிங்கிறது 8. 

சார் அடிக்கடி சொல்லக்கூடிய ஒரு விஷயம், எந்த ஒரு பாவகமுமே கெட்டது அப்படிங்கிறது கிடையாது. அதுல உள்ள எல்லா விஷயங்களும் நமக்கு பரிபூரணமாக கிடைச்சா தான், ஒரு மனிதன் நல்ல விதமாக எல்லா செயல்களையும் அனுபவிக்க முடியும். அதுல 8 வது என்பது நம்முடைய உடம்பு உடைய மிக முக்கியமான ஒரு பார்ட். நம்ம உடம்புல கழிவுகள் வெளியேறல அப்படின்னா, அது என்ன அவஸ்தைகளை கொடுக்கும் அப்படிங்கிறது எல்லாருக்குமே தெரியும். உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.

அதே மாதிரி, அந்த 8 ஆம் இடம் அப்படிங்கிறது தான் நமக்கு எல்லாவிதமான மறைமுகமான நிகழ்வுகளை ஏற்படுத்தக் கூடியது. அதாவது, நம்மளுடைய உடல் உறுப்புகள்ல மறைமுகமான செயல்களை செய்யக் கூடியது அத்தனையுமே 8 ஆம் பாவகம் அப்படின்னு தான் சொல்லணும். அப்போ அதெல்லாம் கெட்டுப் போகும் போது நமக்கு எவ்வளவு பிரச்சனைகள் வருது. ஆபத்தான சூழ்நிலைகள் எல்லாம் வருது இல்லையா? அப்போ அப்படிப்பட்ட 8 ஆம் பாவகத்தை நாம எப்படி  கொண்டாடணும்? அந்த 8 ஆம் பாவகத்தினுடைய தன்மை, நமக்கு 8 ஆம் பாவகம் எங்கெங்கெல்லாம் இருக்கோ அங்கெல்லாம் பிரச்சனைகள் நமக்கு காத்துக்கிட்டு இருக்கு. அப்படிங்கிற ஒரு எச்சரிக்கை மணி அலாரம் அடிக்கும் இல்லையா? இப்போ வண்டில போய்கிட்டு இருக்கோம், ஒரு ரெட் சிக்னல் விழுகுது. சிவப்பு நிற சிக்னல் அப்படிங்கிறது தான், 8 ஆம் இடம். இந்த இடம் நீ நிறுத்தி போக வேண்டிய இடம். இந்த இடம் உனக்கு பிரச்சினைகளுக்குரிய இடம். இந்த இடத்தை வேகமாக கிராஸ் பண்ணா ஆபத்து இருக்கு அப்படிங்கிறத குறி காட்டக் கூடிய பாவகமே, இந்த 8 ஆம் பாவகம் அப்படின்னு சொல்லலாம்.

இந்த 8 ஆம் பாவகம், எங்கெல்லாம் இருந்தா, எதன் மூலமாக நமக்கு பிரச்சனைகள் வரும் அப்படிங்கிறத நாம தெரிஞ்சுக்க போகிறோம். 

உதாரணமா, ஒருத்தருக்கு அட்சய லக்னம். எல்லாருக்கும் லக்னத்தில் இருந்து 8 ஆம் பாவகம் வேலை செய்யுமா? அப்படின்னா லக்னத்தில் இருந்து எடுக்காதீங்க. உங்களுடைய இன்றைக்கு வயதுக்குரிய லக்னம் என்ன அப்படிங்கிறத எடுங்க. அந்த வயதுக்குரிய லக்னத்தை எடுத்து,  அந்த லக்னத்திற்கு 8 ஆம் பாவகம் என்ன அப்படிங்கிறத பாருங்க. 

உதாரணமாக, இப்போ அட்சய லக்னம் அப்படிங்கிறது மகர லக்னமாக இருக்குது அப்படின்னு வச்சுக்கோங்க. இந்த மகர லக்னத்திற்கு, 8 ஆம் வீடு, ALP என்கிறது எங்க இருக்கோ அதிலிருந்து 8 ஆம் வீடு தான் நமக்கு பிரச்சனைகளை குறி காட்டக் கூடிய ஒரு நிகழ்வாக அமையும். இப்போ இந்த 8 ஆம் பாவகம் (சிம்மம்) வீட்டினுடைய அதிபதி யாராக இருப்பார்கள் என்றால் சூரிய பகவான். இந்த சூரிய பகவான், மகர லக்னத்திற்கு பிரச்சனைகளை குறி காட்டக் கூடிய, எச்சரிக்கை மணியை அடிக்கக் கூடியவர். அதாவது,  எச்சரிக்கையாளர் யார் என்றால் சூரிய பகவான். ரெட் அலர்ட் என்று சொல்வார்கள் இல்லையா, நம்மை எச்சரிக்கைப் படுத்துதல் அப்படிங்கிறது தான் சூரிய பகவானுடைய வேலை. இந்த இடத்தில் எல்லாம் நீ தப்பு பண்ணி இருக்க. இந்த இடத்தில் எல்லாம் நீ கவனமாக இருக்கணும், அப்படின்னு சொல்றது தான் சூரிய பகவானுடைய வேலை.

இப்போ மகர லக்னத்திலேயே, சூரிய பகவான் இருக்கிறார் அப்படின்னு வச்சுக்குவோமே, லக்னத்திலேயே சூரிய பகவான் இருக்கார் அப்படின்னா இந்த ஜாதகர் என்ன பண்ணுவார்? அவருடைய எண்ணங்களாலும் அவருடைய செயல்களாலும் அவரே பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வார் அப்படிங்கிற ஒரு நிகழ்வு இருக்கு. அப்போ இந்த ஜாதகர் கடந்த கால நிகழ்வுகள்ல, சரியான விதைகளை விதைக்கவில்லை. அப்போ அவர் தண்டனைகளை பெறக் கூடிய ஒரு காலமாக இது மாறும், அப்படிங்கிறது தான் இந்த 8 ஆம் பாவகத்தினுடைய நிலை. 

இதுவே சூரியன் இரண்டாம் வீடான கும்பத்தில் இருக்கிறார் என்றால், அவர் எங்க எச்சரிக்கையாக இருக்கணும்? அப்படின்னா அவர் குடும்பம். குடும்பமே அவருக்கு பிரச்சினைக்குரியதாக மாறும். குடும்பத்தினால தான் அவருக்கு தண்டனைகள் காத்துக் கிட்டு இருக்கு. அப்போ குடும்பம்கிற நிகழ்வுக்காக அவர் தன்னை செலவழிக்க வேண்டியது இருக்கும். அப்போ குடும்ப உறவுகள் கிட்ட எவ்வளவு கவனமாக இருக்கணும் அப்படிங்கிறத புரிந்து கொள்ளக் கூடிய, அதே மாதிரி வருமானத்தில் பிரச்சனைகளைத் தரும். உங்களுக்கு வரக் கூடிய வருமானத்தை, எந்த அளவுக்கு போற்றிப் பாதுகாக்கணும் அப்படிங்கிறது உணர்த்துவதும் இங்கே தான். வருமானம் உங்களுக்கு பிரச்சனைகளை கை காட்டி,  பிரச்சினைகள் இருக்கக்கூடிய விடயமாக உங்களுக்கு காமிக்கிறது. அப்போ அங்க நீங்க கவனமா இருக்க வேண்டும். 

மேலும், இரண்டு அப்படிங்கிறது என்ன? நாம பேசக் கூடிய பேச்சு. அப்போ நீ பேசுனா பிரச்சனைகளை சந்திப்பாய். பேசாத அப்படிங்கிறத குறி காட்டக் கூடிய பாவகம். இது. 

அப்போ 8 எங்கெல்லாம் இருக்கோ அந்த இடம் சார்ந்த நிகழ்வுகளில், நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதே இதனுடைய அர்த்தம் என்று சொல்லலாம்.

இப்போ சூரியன், ஏழாம் வீடான கடகத்தில் இருக்கிறார் என்றால், யார் மூலமாக பிரச்சினைகள் இருக்கும்? மனைவி மூலமாக, கணவன் மூலமாக, நண்பர்கள் மூலமாக பிரச்சனைகள் ஏற்படும். ஏன்னா, இங்க இந்த பிரச்சனைகளை நாம சரியா ஹாண்டில் பண்ணல. அதனால,  ஏழாம் வீடு பலவீனமாகி விட்டது. 8 ஆம் வீடான சிம்ம வீட்டின் அதிபதி சூரியன் கடகத்தில் இருந்தால், உனக்கு தண்டனை தரக் கூடியது யாரு? உன்னுடைய நண்பர்கள் தான். உன்னுடைய கணவர் தான்,  உன்னுடைய மனைவி தான். அந்த தண்டனையை நீ அனுபவித்து தான் ஆக வேண்டும். அப்போ அவங்க கிட்ட எப்படி நீ பக்குவமாக நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி பக்குவமாக நடந்தால் மட்டும் தான் அந்த தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும், அப்படிங்கிறத உங்களுக்கு எச்சரிக்க கூடிய பாவகம்.

அதே போல இப்போ சூரியன் பத்தாம் வீடான துலாமில் இருக்கிறார். தொழில் மூலமாகவே, நீ தண்டனைகளை அனுபவிப்பாய். வேலை உனக்கு பிரச்சனையாக ஆகும். அப்போ கிடைச்ச வேலையை காப்பாத்திக்கிறது தான் புத்திசாலித்தனம். அங்க வேலை செய்யக் கூடியவங்க பிரச்சனை பண்ணுவாங்களா? கண்டிப்பா பண்ணுவாங்க.  தொழிலாக செய்றீங்க அப்படின்னா வேலையாட்கள் மூலமாக பிரச்சினை இருக்குமா? நிச்சயமாக இருக்கும். தொழில் எதிர் பார்த்த மாதிரி இருக்காதா? கண்டிப்பாக இருக்காது. அப்போ அதெல்லாம் உனக்கு தவறான நிகழ்வுகளாக, செய்த வினைப் பயன், இங்க தான் வேலை செய்திருக்கு. கடந்த காலத்துல, நாம சரியாக தொழிலை ஹாண்டில் பண்ணல. நமக்கு கிடைத்த வாய்ப்புகளை நாம சரியாக பயன்படுத்தல. அது தவறா பயன்படுத்தியிருக்கோம்,  அப்படிங்கிறதுனால இந்த 8 ஆம் பாவகத்தின் அதிபதி 10 ல் இருந்து நமக்கு பிரச்சனைகளை தருவார், தரப் போறார் அப்படிங்கிறத நமக்கு கை காட்டக் கூடிய பாவகம் அப்படிங்கிறது தான் இந்த 8 ஆம் பாவகத்தினுடைய வேலை.

அப்போ இந்த 8 ஆம் பாவகத்தின் அதிபதி எங்க இருக்காரோ, அது சார்ந்த பிரச்சனைகளை ஜாதகர் நிச்சயமாக அங்கெல்லாம் கவனமா இருக்கணும்ங்கிறத உங்களுக்கு புரிய வைக்கிறது தான் ALP ஜோதிடம். 

அதனால, இந்தந்த நிகழ்வுகள், இங்கு இருந்து எல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் வர காத்திருக்கு. இதெல்லாம் நீங்க ஹேண்டில் பண்றதுன்னா, ரொம்ப பக்குவமா ஹேண்டில் பண்ணனும். இதெல்லாம் இப்படித் தான் இருக்க போகிறது. இதற்கு தீர்வு தேடி நாம ஓட வேண்டிய அவசியம் இல்ல. இத நாம ஹேண்டில் பண்ண தெரிஞ்சுக்கிட்டாலே போதுமானது. என்ன பண்ணுவோம் இப்ப சுனாமி வரப்போகுது அப்படின்னு தெரிஞ்சிருச்சு, எங்க தாக்க போகுது நம்மளுடைய தொழில் ஸ்தானத்தை தாக்க போகுது அப்படின்னு நமக்கு தெரிஞ்சு போச்சு, அப்ப என்ன பண்ணனும் ஒண்ணு  நாம தொழில் செய்யாம, வேலை வாய்ப்புகளைத் தேடி ஓடிக் கொள்ளணும். இல்லனா, அந்த இடத்தை பாதுகாக்கணும். இல்ல அங்க வேலை செய்யக்கூடிய வேலை ஆட்களை, வேலையாட்களை,  நாம்  பத்திரமா அவங்களுக்கு  தகுந்த மாதிரி ஹேண்டில் பண்ண கத்துக்கணும், அப்படிங்கிறது தான்.

சரி, இப்போ இந்த 8 ஆம் இடம் அப்படிங்கிறது, ஒவ்வொரு நிகழ்வுகளுக்குமே எடுத்துக்கலாம். ஒரு பாவக காரகத்துவங்கள் அப்படிங்கிறது ஓராயிரம் இருக்கு. இப்போ 8 என்பது எச்சரிக்கையை குறி காட்டக் கூடிய நிகழ்வு அப்படிங்கிறது மட்டும் நாம பார்த்தோம். 8 என்பது ஆயுள் என்பதும் பார்த்தோம். அப்போ இங்க ஆயுள் அப்படிங்கிறப்போ, ஒரு பூரணமான தீர்க்க ஆயுள் அப்படிங்கிறது 8 ஆம் பாவகம். 8 ஆம் பாவத்தின் அதிபதி எங்கெல்லாம் இருக்காரோ, அந்த இடத்தில் நமக்கு நோய்கள் வரும், பிரச்சனைகள் இருக்கும். அப்படிங்கிறத நாம தெரிஞ்சுக்கணும். இப்போ ஒரு குழந்தையோட ஜாதகமா இருக்கு.  இந்த 8 ஆம் பாவத்தின் அதிபதி இரண்டாம் பாவகம் கும்பத்தில் இருக்கு, அந்தக் குழந்தை இந்த மகர லக்னம் மாறும் வரைக்கும் பேச்சு திக்கி திக்கி வரும். பேச்சு அவ்வளவு சரளமாக இருக்காது. தடைபட்ட பேச்சு,  என நாம எடுத்துக்கணும். ஏன்னா நாம முன்னாடியே பார்த்தோம் ஸ்பீடு பிரேக் அப்படிங்கிறது தான் 8 ஆம் பாவகம். தடுத்தல் அப்படிங்கிறது, 8 ஆம் பாவகம். இந்த மாதிரி ஒவ்வொரு நிகழ்வுகளையும் நமக்கு இணைச்சி புரிய வைக்கிறது தான் ALP ஜோதிடத்தினுடைய தாத்பர்யம்.

உணர்வதும் உணர்த்துவதும். என்னுடைய நிலை, நான் வாங்கி வந்த வரம். என்னுடைய கொடுப்பினை இப்படிப் பட்டது தான். இதனை நான் ஏத்துக் கிட்டு இதோட வாழ நான் பயணிக்கிறேன். அப்படிங்கிற புரிதலை உங்களுக்கு கொடுக்கிறது தான் இந்த ஜோதிடம். கட்டாயம் நீங்க படிக்கணும். நீங்க படிச்சீங்கனாலே உங்களுடைய தன்மைகள்ல நீங்க மாற்றத்தை கொண்டுவர முடியும். அது உங்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். 

மீண்டும் இனியதொரு நிகழ்வில்,  சந்திப்போம். நன்றி. 

வீடியோ லிங்க்: 

https://youtu.be/g0DO5FmfKoI?si=l5k7eZgvFjy6nKGh 

ALP ASTROLOGY,
ALP ILLAM, No.18A Ganesh Nagar (First Right),
Old Perungalathur (NEAR LOTUS POND),
S.V Nagar Post, Chennai - 600063,
Tamil Nadu, India.

Mobile: 9786556156 / 9363035656

Email:
alpastrologyoffice@gmail.com
alpastrology.org@gmail.com


About author

ALP Blog

ALP ASTROLOGER KUNTIKANA RADHAKRISHNA BHAT KERALA



Comments


Leave a Reply

Subscribe here

Scroll to Top