Subscribe

Blog

சிவசக்தியின் வாக்குயோகி.

சிவசக்தியின் வாக்குயோகி!

அன்று சித்திரை மாதம், வளரும் மூன்றாம் பிறை!! நாமக்கல் மாவட்டம், எனது அக்கா அவர்களது வீடு. எப்பொழுதும் போல காலைப் பொழுது எங்கள் வீடு ஆன்மீகத்தில் நனைந்தது. நனைந்து முடிந்த நேரம் சுடச்சுட இட்லிகளின் ஆவி காற்றில் புன்னகையிட்டது. அச் சிற்றுண்டியை சுவைத்து முடித்தெழும் பொழுது, நானும் என் அக்காவும் எதிர்பாராத விதமாக இரண்டு சக விருந்தினர்களை எதிர்கொண்டோம்.

வந்தவள் எனது அக்காவின் தோழி மற்றும் அந்தத் தோழியின் தங்கை சீதா. நாலு பெண்கள் கூடினால் உங்களுக்கே தெரியும் ஊர் கதை அரங்கேறும்!

பேசிக் கொண்டிருந்த அந்த வேளையில் சீதாவின் கர்ப்பம் பற்றி தெரியவந்தது. அவள் மூன்றாவது குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். மகாலட்சுமிகள் என்று முதல் இரண்டு குழந்தைகள் இருக்க, அவளது மாமியாரின் நிபந்தனை ஆண் குழந்தை தான் வேண்டுமென்பது மூன்றாவதும் பெண் குழந்தையெனில், தன் வீட்டிற்கு காலடி எடுத்து வைக்க வேண்டாம் என்று மாமியாரின் தரப்பு அதிகாரம். மாமியாரின் தவிப்பு புரிந்தாலும், நெருக்கடியில் சிக்கி வாழும் அவளது வாழ்க்கையை எண்ணி எங்களுக்கும் வருத்தமே!

தற்பொழுது வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? இல்லை பெண் குழந்தையா? என தெரிவதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டவள் இந்த கேள்விக்கு மறுப்பு தெரிவிக்கும் மருத்துவர் மத்தியில், தொடர்ச்சியாக தேடும் தீவிரத்தில் எனக்குத் தெரிந்த மருத்துவர் யாரேனும் இருக்கிறார்களா என்றாள். ரகசியமாய் அவரிடம் ஆண் குழந்தை தானா? என்று தெரிந்து கொள்ளலாம் என்ற அவளின் தேவை அவளது மாமியார் மீதுள்ள கடும் பயத்தையே வெளிப்படுத்தியது.

இதற்காக மருத்துவரை அணுகுவது சட்டப்படி குற்றம் அல்லவா! தவிப்பின் காரணமாக என் அக்காவை நம்பி நாடி வந்த தோழியிடம் சிசுவின் பாலினத்தை தெரிந்து கொள்ள யாரையும் தேட வேண்டாமே!!! என்பதை இவளிடம் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த தருணத்தில் எனது கைபேசியின் அழைப்பு மணி ரீங்காரம் செய்தது.

கைபேசியின் அந்தப் பக்கம் "அட்சய லக்ன பத்ததி" ஜோதிட முறையை இயற்றிய எனது குருநாதர் பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள். "என்னையா!! என்ன நடக்குது அங்க?” என்றார். உண்மையான பக்தியோடு பசித்த போதும் சரி, தவித்த போதும் சரி; இயற்கை தன் சூட்சும ஜோதிட கரம் கொண்டு மெய்யுணர்ந்து அருள் பாவிக்கும் என்பது போல, சீதாவின் உரையாடலை பற்றி நான் அவரிடம் விவரிக்க, எங்கள் மனதில் முதல் முத்திரையாக "விதி வலியதுய்யா!! அவங்க அதை கலைக்கணும்னு நினைச்சாலும் முடியாது" என்றார்.

எனக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் மற்ற விஷயங்களை பேசி அந்த அழைப்பிற்கான நோக்கம் தீர்ந்தது.

சில மாதங்களுக்கு பிறகு, "சீதா அவர்களுக்கு பெண் குழந்தை" பிறந்திருப்பதை கேட்ட அந்த நொடி, எனக்கு ஐயா அவர்கள் சொன்னது நினைவிற்கு வந்தது. அவர் சொன்னபோது தெளிவு கிடைக்காத அந்த வாசகத்திற்கு, இன்று பிரமிப்போடு இரு புருவங்கள் மேலோங்க அன்னாரது மொழி, காலத்தை முன்கூட்டியே உணர்த்துகிற அருள்வாக்கு என்று எனக்கு விளங்கியது. தன் தாயார் வீட்டிற்கு சென்ற சீதா ஓர் தைரியலட்சுமியையே பெற்றெடுத்தாள்!!!

சற்று சிந்தித்துப் பாருங்கள். சீதாவைப் பற்றிய தகவலை ஐயாவிடம் நான் பகிரவில்லை. அவர் அதை கேட்கவும் இல்லை!! நான் கேள்வி கேட்ட தருணம், நொடிப் பொழுதில் பதில் அளித்த, அவர் கணக்குப் போட்டு வித்தை செய்ததாகவும் தெரியவில்லை.
எனக்கு ஆச்சரியம் மட்டுமே மிஞ்சியது!!

இதை படிக்கும் நீங்கள் சொல்லுங்களேன்!! மதி வலியதா? (இல்லை) பிரபஞ்ச சக்தியை தன் சித்த சரீர வழி கொண்டு உணர்த்திய, இந்த வாக்குயோகியின் சொல் வலியதா?

அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தின் (ALP Astrology) மூலம் நடந்த உண்மையான நிகழ்வுகளை கொண்டு இந்த பதிவானது பதிவு செய்யப்படுகிறது.

நன்றி. 

ALP ASTROLOGY,
ALP ILLAM, No.18A Ganesh Nagar (First Right),
Old Perungalathur (NEAR LOTUS POND),
S.V Nagar Post, Chennai - 600063,
Tamil Nadu, India.

Mobile: 9786556156 / 9363035656

Email:
alpastrologyoffice@gmail.com
alpastrology.org@gmail.com


About author

RADHAKRISHNAN

ALP ASTROLOGER KUNTIKANA RADHAKRISHNA BHAT KERALA



Comments


Leave a Reply

Subscribe here

Scroll to Top