Subscribe

Blog

எப்படிப்பட்ட கண் திருஷ்டி, நம்மை பாதிக்கும்? கண் திருஷ்டிக்கான தீர்வுகள். - ALP ஜோதிட ஆய்வு.

எப்படிப்பட்ட கண் திருஷ்டி, நம்மை பாதிக்கும்? கண் திருஷ்டிக்கான தீர்வுகள். - ALP ஜோதிட ஆய்வு.

அனைவருக்கும் வணக்கம்.

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.

நான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆசிரியர். ஸ்ரீ குரு. Dr. சாந்திதேவி ராஜேஷ்குமார்.

திருஷ்டி, கண் திருஷ்டி பற்றி, இன்னைக்கு பார்க்க போறோம்.

இந்த திருஷ்டி என்பது பிறந்த, சின்ன குழந்தைகளில் இருந்து, பெரியவங்க வரையும், இந்த திருஷ்டி தாக்கத்தால பாதிக்கப்படுவார்களா அப்படின்னா, நிச்சயமாக பாதிக்கப்படுவாங்க, அப்படின்னு சொல்லலாம்.

இப்ப, நம்ம நிறைய பேர் பார்த்திருப்போம். இந்த குழந்தைகளை வெளியே எடுத்துட்டு போகும் போது, அந்த குழந்தைகளை நல்லா அழகா டிரஸ் பண்ணி, கருப்புப் பொட்டை தாடையில் வைப்பாங்க, கன்னத்தில் இங்க வைப்பாங்க, நெத்திப் பொட்டுல வைப்பாங்க,   நெத்தியில்  நேரா வைக்காமல் சைடில் வைப்பாங்க. இப்படி என்னதான் நம்ம வச்சு அழைச்சுட்டு போனாலும், அந்த குழந்தைகள் பார்த்தவுடனே,  அப்படியே அழகா இருந்ததுனாலே, திருஷ்டி தாக்கிடும். வந்த உடனே, குழந்தைகள் கைவிடாமல் அழுதுட்டே இருப்பாங்க. ஏதோ, ஏதோ பண்ணுவாங்க,  அவர்களை சமாதானப்படுத்தவே முடியாது. அப்புறம் என்ன அப்படின்னு பார்த்தோம்னா, சரி, இன்னைக்கு வெளியில அழைச்சிட்டு போயிட்டு வந்திருக்கோம், திருஷ்டி கழிச்சு போடு அப்படின்னு, நம்ம வீட்ல உள்ள பெரியவங்க சொல்றத, நம்ம கேட்டிருப்போம்.

அதே மாதிரி, இந்த திருஷ்டி, குழந்தைகளுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் தாக்கும் தெரியுமா? 

குழந்தை இல்லாதவர்கள்,  இந்தக் குழந்தையை பார்த்து, நமக்கு இந்த மாதிரி ஒரு குழந்தை இல்லையே, என்று நினைக்கிறார்கள் என்றால் அதுவும் அந்த திருஷ்டியாக அங்க உருமாறுமா அப்படின்னா கண்டிப்பாக உருமாறும். 

சரி, இப்ப நிறையப் பேருக்கு குழந்தை இருக்கும். ஆனால், அழகான குழந்தையாக இருக்காது. அப்போ இந்தக் குழந்தை எவ்வளவு அழகா இருக்கு பாரு, அப்படின்னு நினைப்பாங்க. அது திருஷ்டி ஆகுமா? திருஷ்டி ஆகும்.

சரி, இன்னும் சில பேருக்கு என்ன ஆகும்னா, அவங்க ஆண் குழந்தை வேணும்னு ஆசைப்பட்டு இருப்பாங்க. ஆனா ஆண் குழந்தை இருக்காது. பெண் குழந்தையாக இருக்கும். அவங்க ஆண் குழந்தைகளை பார்த்தாக்க ஆசைப்படறாங்க.  இந்த மாதிரி ஒரு ஆண் குழந்தை இல்லையே, அப்படீன்னு. இன்னும் சில பேருக்கு ஆண் குழந்தைகளாக இருக்கும். பெண் குழந்தைகள் இருக்காது. அவங்க பெண் குழந்தைகள் வேணும்னு ஆசைப்பட்டுருப்பாங்க. அப்ப எந்த பெண் குழந்தைகளை பார்த்தாலும், இந்த மாதிரி நமக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே அப்படிங்கிற அந்த ஏக்கம், அடுத்தவர்களின் ஒரு விஷயத்தை பார்த்து ஏங்கக் கூடிய அந்த ஏக்கம் என்பது திருஷ்டியாக வருமா என்றால், கண்டிப்பாக வரும்.

அதைத் தான் நம்ம முன்னோர்கள் என்ன சொல்லி இருக்காங்க. கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது, அப்படின்னு சொல்லி இருக்காங்க. ஏன்னா, அந்தக் கண் திருஷ்டிக்குமான ஒரு நிகழ்வு இருக்குன்னு சொல்லலாம். 

திருஷ்டிங்குறது என்ன? 

ஒருத்தர் பார்க்கிறதுனால, அப்ப வரக் கூடிய பாதிப்பு அப்படின்னு சொல்லலாம். அது தான் கண் திருஷ்டி அப்படின்னு சொல்றது.  திருஷ்டினா, பார்த்தல் அப்படின்னு அர்த்தம். அப்ப கண் பார்க்கிறதுனால ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வு அப்படின்னு சொல்லலாம். 

இதை வந்து, இப்ப குருவை எடுத்துக்கிட்டோம்னா, நம்ம கிரகங்கள்ல குரு பார்த்தார்னா சிறப்பு. குரு பார்க்க கோடி தோஷ  நிவர்த்திஅதே சனி பகவான் பார்த்தார்ன்னு வச்சுக்கோங்களேன், சனி பார்க்க சகலமும் பிரச்சனை. அப்படிங்கற ஒரு நிகழ்வு இருக்கு.

அப்போ இந்த குருவுக்க்கும், சனிக்கும் உள்ள நிகழ்வு என்ன?  குரு பகவான் எல்லாத்தையும் கொடுக்கிறவர். அதனால அவருக்கு, தேவைகள் என்பது இருக்காது. அதனால எல்லாரையுமே நல்லா இருங்க அப்படின்னு வாழ்த்துறவங்க. ஆனா சனி பகவான் என்னன்னா, அவருடைய அந்த இயலாமையினுடைய வெளிப்பாடு, இத வந்து சனி பகவானுக்கு எதுவும் இல்லைன்னு அர்த்தம் கிடையாது. அந்த ஆதிக்கம் பெற்றவர்கள் உடைய நிலைப்பாடு அப்படிங்கிறதுதான், இங்க நாம  எடுத்துக்கணும். 

அப்போ ஊனன், முடவன்,  இருள், நடுக்கத்திற்கு அதிபதி அப்படியெல்லாம் சனி பகவானுடைய அந்த காரகத்துவங்களுக்கு சில  வர்ணனைகள் இருக்குன்னு வச்சுக்கோங்களேன்.

அப்போ என்ன? இருட்டுக்குள்ள இருக்கிறவங்க வெளிச்சத்தை பார்த்தால், ஒரு ஆசை வரும். அது ஊனமாய் இருக்கிறவங்களுக்கு, நல்லா இருக்கிறவங்கள பார்த்தா ஒரு சில எண்ணங்கள் தோன்றும். நம்ம இந்த மாதிரி இல்லையே,  அப்படின்னு அந்த ஒரு ஏக்கம், ஒரு ஆதங்கம் ஒரு இயலாமை. 

இப்ப முதலாளியா இருக்கிறவங்களுக்கு வேலை செய்றவங்க, நம்ம எப்ப இந்த மாதிரி எல்லாம் முதலாளியாக ஆகப்போகிறோம் அப்படிங்கற ஒரு ஏக்கம் இருக்கும்.

இந்த குழந்தைகள் முதல், இப்போ நல்ல வயதுக்குரிய குமரிப் பெண்களாக இருக்கு,  நல்லா ஒரு இளம் பருவத்தில் இருக்கக்கூடிய வாலிபர்களாக இருக்காங்க, 

பருவ வயதுல சொல்லுவாங்க ஒரு பழமொழி, பருவ வயதில், பன்றிக் குட்டி கூட அழகாக இருக்கும் அப்படின்னு சொல்லி, அந்த மாதிரி பருவ வயதில் ஏற்படக் கூடிய ஒரு திருஷ்டின்னு ஒண்ணு உண்டு.

ஒரு குழந்தை நல்ல அழகா இருந்தா, நல்லா இருக்குன்னா, அழகா இருக்கே, அப்படின்னு சொல்றது உண்டு. இதில, ஆண் பெண் வித்தியாசமே கிடையாதுங்க. அது ஒரு ஆண் அழகாக இருந்தாலும், அழகா இருக்கான்னு, பையன் அழகா இருக்கான்னு சொல்லுவாங்க. பெண் நல்லா இருந்தாலும்,  பெண் நல்ல அழகா இருக்கா,  அப்படின்னு சொல்லுவாங்க. அப்ப அந்த அழகு, வர்ணனை, அதிக அளவு ஆபத்தைத் தரும் அப்படிங்கறதும் இதனாலதான். அழகா இருக்காங்க என்றாலே அங்கே ஆபத்தும் அதிகமாக உண்டு. 

அடுத்தவங்களுடைய பார்வை எந்த அளவுக்கு பார்க்கப்படுகிறதோ, நம்ம அந்த மாதிரி இல்லையே,  அப்படிங்கற அந்த ஒரு ஏக்கப் பார்வை அப்படிங்கிறதே, அங்க திருஷ்டியாக வரும், அப்படிங்கிறது நிகழ்வு. 

சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். 

ஒரு அழகைப் பார்த்து, ஒரு தோற்றத்தைப் பார்த்து, ஒரு உருவத்தைப் பார்த்து, ஏற்படக் கூடிய ஒரு திருஷ்டி அப்படிங்கறது ஒரு வகை.

இன்னொண்ணு, அந்தப் பொருள், ஆசைகளை பார்த்து ஏற்படக் கூடிய ஒரு திருஷ்டி ஒண்ணு இருக்கு. ஒருத்தர் உடைய பொருளாதாரத்தின் மேன்மைகளைப் பார்த்து, பாரு, அவன் வந்து, புல்லட் வாங்கிட்டான்பா, நம்ம இந்த டூவீலர கூட, இந்த ஸ்கூட்டியை கூட,  நம்மளால மாத்த முடியல,  அப்படிங்கற அந்த ஒரு ஏக்கம். 

அவனப் பாரு, மூணு மாடியில் வீடு கட்டிட்டான், நம்மளால ஒரு காலி இடம் கூட வாங்க முடியலையே, அப்படிங்கற ஒரு ஏக்கம்.

அவனுக்கு பாருங்கப்பா, நாலு பிள்ளைகளும் சூப்பரா படிச்சு,  நல்லா லைஃப்ல செட்டில் ஆகிட்டாங்க. தான் ஒத்தப் பிள்ளைய ஒழுங்கா கரை சேர்க்க முடியலையே, அப்படிங்கற ஒரு ஏக்கம்.

இந்த மாதிரி ஒவ்வொரு நிகழ்வுக்குள்ள, அவனுக்கு என்னப்பா, அரசாங்க வேலையில, மாசம் கண்டா,  வேலை பார்த்தாலும்,  வேலை பார்க்கலன்னாலும்  சம்பளம் வாங்கிடுவான். 

அவனுக்கு என்னப்பா, முதலாளி, 10 பேருக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு வளர்ந்துட்டான்.

இப்படின்னு, ஒருத்தர் நல்ல நிலையில் இருக்கிறதை பார்த்து பார்த்து, அந்த ஏக்கம், ஏங்குதல் அப்படிங்கிறது, அங்க திருஷ்டி ஆக பாதிக்குமா,  பாதிக்கும்.

சரி. இது ஒரு பக்கம்.

அடுத்து, ஒருத்தங்களுடைய செயல்கள், நேர்த்தியைப் பார்த்து, இவ்வளவு அழகா பண்றாங்களே, இவ்வளவு நேர்த்தியா பண்றாங்களே,  இவ்வளவு திருத்தமாக செய்கிறார்களே, எனப் பேசுதல். அதாவது ஒரு வீட்டுக்கு போறோம், ஒரு வீட்டில் இருக்கக் கூடிய வேலையாட்கள், எந்த அளவுக்கு பணிந்து, பண்பா ஒரு இடத்துல நடந்து இருக்காங்களோ, அந்த மாதிரி நம்ம வீட்ல வேலை ஆட்கள் இல்லையே, அப்படிங்கற ஏக்கம் கூட, அவங்களுக்கு திருஷ்டியாக பாதிக்குமானா, கட்டாயம் பாதிக்கும்.

இப்ப இந்த திருஷ்டியினுடைய வகைகள் வந்து, ரஜினி படத்தின் டயலாக் மாதிரி, எவ்வளவு வயசானாலும், அழகும், கம்பீரமும் போகல,  அப்படின்னு சொல்லுவாங்க பாருங்க. அந்த தோற்றத்தை வைத்து வரக் கூடிய ஒரு திருஷ்டிங்குறதும் அதிகமாகவே இருக்கு.

சரி, இதுக்கு எல்லாம் எளிமையாக என்ன பரிகாரங்கள் பண்ணலாம்? இதை நம்ம முன்னோர்கள் காலம் காலமாகவே நமக்கு சொல்லிக் கொடுத்துட்டு தான் இருக்காங்க. ஆனா இன்னைக்கு அவசர யுகத்துல,  நம்ம அதை எல்லாம் பயன்படுத்தல. அதுல எனக்கு தெரிஞ்சு, என்னுடைய முன்னோர்கள், எனக்கு சொன்ன சில வித நிகழ்வுகளை, உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்குத் தான் இந்த பதிவு.

குழந்தைகளுக்கு திருஷ்டி தாக்கம் ஏற்படுகிறது அப்படின்னா, ஒண்ணு, அந்த குழந்தைகளுக்கு அழகு படுத்தாமல் நம்ம வெளியில அழைச்சிட்டு போகணும்.

யாரும் பார்த்து, எவ்வளவு அழகா அலங்காரம் பண்ணிருக்காங்கன்னு, சொல்லாத அளவுல இருக்கணும்.நிறைய பேர் பாருங்க, கண்ணுக்கு மை போட்டு, அவங்களுக்கு நல்லா  அழகு படுத்தி, பவுடர் அடிச்சு, துணி போட்டு, அழகாக அழைச்சிட்டு போயிட்டு வருவாங்க. அதுக்கு கையுறை, காலுறை,  நிறைய ஆபரணங்கள் எல்லாம் போடுவாங்க. அது எல்லாமே எந்த அளவுக்கு குழந்தைகளுக்கு நிறைய அலங்காரத்தில் முக்கியத்துவம் காண்பிக்கின்றோமோ, அந்த அளவுக்கு அவங்களுக்கு திருஷ்டியை எல்லாம், நாமே  கூட்டுறோம், அப்படிங்கறதுதான் அர்த்தம்.

நிறைய குழந்தைகளுக்கு, அம்மாவின் உடைய அந்தப் பார்வையே, என் குழந்தை எவ்வளவு அழகா இருக்கு பாரு, அப்படின்னு நினைக்கிறது. இது, நிறைய திருஷ்டி தாக்கத்தை உருவாக்கும் அப்படின்னு சொல்லலாம்.

அப்ப இதுல இருந்து விடுபடுறதுக்கு என்ன பண்ணணும் தெரியுமா? 

முதல்ல நம்ம குழந்தைகளுக்கு திருஷ்டி சுத்தி போடறதுன்னா, கற்பூரம் காமிச்சு திருஷ்டி சுத்தி போடற வழக்கம் அப்படிங்கிறது தொன்று தொட்டு இருக்கு. பிறந்த 30 நாட்களுக்கு உள்ள குழந்தைகளுக்கு, திரியில தீபம் ஏற்றி,  அதை குழந்தைக்கு சுத்திட்டு, அதை தண்ணீரில் போட்டு, அந்த தண்ணிய கொண்டு போயி, வெளியில ஊத்துற வழக்கம் இருக்கு.

இன்னும் ஒரு படி மேல போய் என்ன பண்ணுவோம். நம்ம வீட்ல இருக்கக் கூடிய கல் உப்பு . இதுதான் திருஷ்டி கழிக்கிறதுக்கு,  நம்ம பாட்டிமார்கள் காலம் காலமாக பயன்படுத்திக்கிட்டு வர  ஒரு பரிகாரம். வாரத்துல ஒரு நாள், அது உயர்ந்த பொழுதுகள் என்று மூன்று கிழமைகளை சொல்லுவாங்க. ஞாயிற்றுக்கிழமை,  வெள்ளிக்கிழமை,  செவ்வாய்க்கிழமை. இந்த மூன்று பொழுதுகளில் ஏதாவது ஒரு நாளில் இதனை செய்யலாம். கல் உப்பு என்பது  மகாலட்சுமியின் அம்சம். உப்புங்குறது அப்படி கரையும் தன்மையை உடையது. அதனால, எவ்வளவோ பெரிய பார்வை தோஷங்கள் இருந்தாலும், அது அப்படியே கரைந்து போயிடணும் அப்படிங்கறதுக்கான ஒரு மகத்துவத்தை தரக்கூடியது. அந்த கல் உப்பு எடுத்துக்கிறோம். அடுத்து வரமிளகாய் எடுத்துக்கணும். பட்ட மிளகாய், காஞ்ச மிளகாய், வர மிளகாய் என்று  ஊருக்கு தகுந்த மாதிரி அதுக்கு பேரு உண்டு. வர மிளகாய்  எடுத்துக்குவோம். ஏன்னா அந்த மிளகாய் காட்டத்தை போல, அந்த வயிற்நெரிச்சல், திருஷ்டியில பார்க்கிறவங்களுடைய, அந்த பார்வைகளுடைய தாக்கத்தை எரிக்கணும், அப்படிங்கறதுக்காக அந்த வர மிளகாய். அடுத்து கடுகு, சட சட சட சடன்னு பொரிகிறது அப்படிங்கிறதுக்காக, அப்படி பொரிந்து போயிடணும்ங்கிறதுக்காக கடுகு. சிலர் கடுகுக்கு பதிலாக மிளகு  சேர்த்துக்கிறது உண்டு. அந்த மிளகுடைய அந்த காட்டம். இந்த மாதிரியான ஒரு விஷயங்களை, நம்ம கையில் வைத்து, அதை பிடித்து, ஊருக் கண்ணு, உறவுக் கண்ணு, அந்தக் கண்ணு, இந்தக்  கண்ணு, என எல்லாக் கண்ணும்  சொல்லுவாங்க.

எங்க முறையில் என்ன சொல்லுவாங்க? தெலுங்குல சொல்லுவாங்க. இருவு திருஷ்டி, பொதுவு திருஷ்டி, தள்ளு திருஷ்டி, தனையன் திருஷ்டி, முண்ட கண்ணு, நக்க கண்ணு, பிள்ளி கண்ணு,  பாம்பு கண்ணு எல்லா கண்ணும், அடியோட நாசலங்க,  நிர்மூலங்க, கொள்ளல,  போவால, அப்படின்னு சொல்லி திருஷ்டி கழிப்பாங்க.

அப்ப இந்த மாதிரி சொல்லி, அந்த உருவத்தை, மூணு தடவை வலது இடது சுத்தி, அந்த தலையில் இருந்து,  தலை முதல் பாதம் வரையும் இழுத்து, தூ தூ தூ என  மூன்று தடவை துப்ப சொல்லி, கொண்டு போய் போடுவாங்க. அவங்களுடைய இடது கை வலது கால், வலது கை இடது கால், இப்படி மாறு கை மாறு கால்ல தடவி, அதை கொண்டு போயி எரிச்சுட்டு வந்துருவாங்க. அதை ஏதாவது ஒரு பேப்பர்லையோ அல்லது கொட்டாங்குச்சியிலோ போட்டு,  தணலில்  போட்டு எரிச்சிடுவாங்க. 

திருஷ்டி அதிகமாக இருக்கு, இல்ல கழிஞ்சிருக்குறத, அந்த நெடிய வச்சு, நம்ம முன்னோர்கள் கண்டு பிடிச்சிடுவாங்க.

அப்பப்பா, இவ்வளவு திருஷ்டியா, என. 

அந்த மிளகாயில ஒரு காட்டம் கூட வராது. நார்மலா ஒரு மிளகாயை கருக்கினோம்னா, அந்த காட்டம், அந்த இடத்தில் நம்மளை இருக்க விடாது. ஆனால் திருஷ்டி சுத்தி போட்டு,  நம்ம அதை எரிக்கிறோம்னா, அதிலிருந்து ஒரு காட்டம் கூட வராது, தெரியாது. 

சரி, இந்த மாதிரி எல்லாம் பண்ண முடியல, என்ன பண்ணலாம்?  இது தான் முதன்மையான பரிகாரம்.ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக்கணும், அந்த எலுமிச்சம் பழத்தை சுத்தி கொண்டு போய் பிச்சு  போட்டு விட வேண்டும்.

ஒரு தேங்காய் எடுத்துக்கணும். தேங்காயில் ஒரு சூடத்தை வச்சு பத்த வச்சு, திருஷ்டி கழிச்சு,  நம்ம நிறைய கடை வீதிகள் எல்லாம் பார்த்திருப்போம்,  வெள்ளிக்கிழமை ஆனா,  ஒவ்வொரு கடை வாசல் முன்னாடியும் தேங்காயை சுத்தி உடைச்சிருப்பாங்க, அதை நம்ம வீடுகள்லயும் பண்ணலாம்.

அடுத்து ஒரு பூசணிக்காய்,  அந்த பூசணிக்காயை சுத்தி உடைக்கிறது. அமாவாசை,  பௌர்ணமி நாட்கள்ல இந்த மாதிரி அந்த திருஷ்டி கழித்தல்ங்கிறதுல ஆயிரம் நிகழ்வுகள் இருக்கு.

இன்னும் நம்ம உடலில் ஏற்படக் கூடிய, அந்தப் பார்வை, நேத்ர தோஷ திருஷ்டியை போக்குவதற்கு, ஒரு கைப் பிடி கல் உப்பு கொஞ்சம் கஸ்தூரி மஞ்சள், அதை நம்ம குளிக்க கூடிய தண்ணியில் கலந்து,  தலையோட ஊத்தி விட்டு, அதுக்கப்புறம் நம்ம குளிச்சுக்கணும். 

மாதத்தில் ஒரே ஒரு தடவை, கடல்ல குளிச்சா, எந்த திருஷ்டி இருந்தாலும், அந்த திருஷ்டி போய்டும். ஏன்னா கடல்ல இருந்து தானே உப்பு கிடைக்குது, அப்ப அந்த உப்பான கடலிலேயே போய் குளித்தால், நமக்கு எல்லா திருஷ்டியும் போயிடும்.

இன்னும் சொல்லப்போனால், கடலில் குளிச்சா எனக்கு சேராது அப்படிங்கிறவங்க,  முழங்கால் அளவு தண்ணியில நின்னுட்டு வந்தாலே, ஒரு 15 நிமிஷம் நின்னாலோ அவங்களுக்கு அந்த திருஷ்டி அப்படிங்கிறது கழிஞ்சிடும்.

அதனால நம்ம வாழ்க்கையில, நம்மளுடைய வளர்ச்சியை தடை படுத்துவதற்கு, இந்த கண் திருஷ்டி அப்படிங்கறது,  ஒரு முக்கிய காரணமாக இருக்கு.

அதை நம்ம அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தில்,  அவ்வளவு அழகாக பார்க்கலாம். ஒரு ஜாதகத்தில் லக்ன அதிபதி,  அந்த ஜாதகர் போய், 6, 8, 12 ல் இருக்காரு அப்படின்னா, கட்டாயம் அவங்களுக்கு நல்லா இருக்காது. அவங்களுடைய சூழ்நிலைகள் நல்லா இருக்காது. ஆனால் பார்க்கிறவங்களுக்கு, அவனுக்கு என்னப்பா, அப்படிங்கிற மாதிரியான பேச்சுக்கள் இருக்கும். அதனாலயே அவங்க, அந்த திருஷ்டி தாக்கத்தினால், எப்ப எல்லாம் அவங்களுக்கு திருஷ்டி வரப்போகுதுன்னு, இந்த லக்னாதிபதி எங்க நிக்கிறாரோ அதை வச்சு நம்மளால கண்டுபிடிக்க முடியும்.

அங்க சனீஸ்வரன் எந்த பாவகத்தை பார்க்கிறாரோ,  அந்த ஸ்தானத்துல,  அவங்களுக்கு அந்த திருஷ்டிங்கறது ஒளிஞ்சிகிட்டு இருக்கு அப்படிங்கறத நம்மளால கண்டு பிடிக்க முடியும். 

அதை பார்த்து விட்டு, அட்சய லக்ன பத்ததி ரீதியாகவும், எந்தக் கிழமையில், நம்ம திருஷ்டி கழிக்கணும் அப்படிங்கற ஒரு நிலையும் இருக்கு. அதைப் பார்த்தும்  நீங்க திருஷ்டி தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு தீர்வாக அமையும்.

மீண்டும் இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.

நன்றி, வணக்கம்.

வீடியோ லிங்க்:

https://youtu.be/mZAkXza4xao?si=k_igmSosHxDOQpAu 

ALP ASTROLOGY,
ALP ILLAM, No.18A Ganesh Nagar (First Right),
Old Perungalathur (NEAR LOTUS POND),
S.V Nagar Post, Chennai - 600063,
Tamil Nadu, India.

Mobile: 9786556156 / 9363035656

Email:
alpastrologyoffice@gmail.com
alpastrology.org@gmail.com


About author

RADHAKRISHNAN

ALP ASTROLOGER KUNTIKANA RADHAKRISHNA BHAT KERALA



Comments


Leave a Reply

Subscribe here

Scroll to Top