
வணக்கம்.
என்னுடைய பெயர் சுபமதி. ALP ஜோதிடர் மற்றும் ALP வாஸ்து கன்சல்டன்ட், ஒமன் நாட்டில் மஸ்கட்டில் இருக்கிறேன்.
ALP ஜோதிடர் என்கிறதே ஒரு ஆச்சரியமான விஷயம். ஒரு 15 நாளில் ஜோதிடம் கற்றுக்கொண்டு பலன் சொல்வது ஆச்சரியமான விஷயம். எல்லாருமே அழகாக பலன் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அதே மாதிரி ALP அட்சய வாஸ்து ஜோதிடம் என்பது ரொம்ப ரொம்ப ஆச்சரியமான விஷயமாக இருக்குது. இதை எங்களுக்கு கொடுத்த, எங்கள் அன்பிற்குரிய குருநாதர் பொதுவுடைமூர்த்தி சாருக்கும், எங்களுக்கு இதைச் சொல்லிக் கொடுத்த சத்தியநாராயணன் சார் அவர்களுக்கும் மற்றும் அனைத்து டீச்சர்களுக்கும், கோச் எல்லாருக்குமே பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சத்யா சாருக்கு இணை சத்யா சார் மட்டும்தான். அவர் ஃபர்ஸ்ட் நாள் கிளாஸ்லையே சொன்னாரு, அனைவரையும் வாஸ்து கன்சல்டன்ட் ஆக தான் வெளியே அனுப்புவோம் என்று. அதோட ஆழம் அப்போது தெரியவில்லை. இப்போது நான் நன்றாக உணர்கிறேன்.
அனைத்து விஷயங்களையும் ரொம்ப நுணுக்கமாகவும், அழகாகவும், எங்களுக்கு மூளையில் பதிகின்ற மாதிரி, திரும்பத் திரும்ப சொல்லி, அழகா பதிய வச்சுட்டாரு.
ஒரு வீடுன்னா எப்படி இருக்கும்? அதன் அனைத்து பகுதிகளும் சமமாக இருக்கணும். ஆண் தன்மை, பெண் தன்மை எல்லாம் சமமாக இருக்கணும்னு, அழகா சொல்லிக் கொடுத்தாரு. ஒவ்வொரு விஷயத்தையும் ஆழமாக, காரண காரியங்களையும், தத்துவத்தோடு, நம்ம தெரிஞ்சுக்கிற மாதிரி, அழகா சொல்லி கொடுத்தாங்க.
வீடு எப்படி இருக்கணும்? எந்த பகுதி பாதிச்சா என்ன பாதிப்பு வரும் அப்படிங்கிறது நல்லா உணர்ந்துவிட்டோம். நமக்கு இன்னைக்கு ALP என்ன போகிறதோ, அதன்படி தான் நமக்கு வீடு அமையும். அதன் அடிப்படையில் தான் பிரச்சினைகள் இருக்குங்கிறதும் தெளிவாக புரிஞ்சுக்க முடியுது. நேரா போய் கூட பார்க்க வேண்டியதில்லை. ஜாதகத்தை வச்சே தெளிவா சொல்ல முடியுது.
சின்ன சின்ன விஷயங்களுக்கும் காரண காரியங்கள் இருக்குங்கிறத நல்லா உணர வச்சாரு.
எந்த இடத்தில் வாஸ்து பிரச்சனையாக இருக்கும், எந்த இடத்தில் நாம் பிரச்சனையாக இருப்போம், நமக்காக தான் வீடு அப்படிங்கிறத புரிஞ்சுக்க முடிஞ்சது.
இப்ப நார்மலாக ஒரு வாஸ்து சொல்றாங்கன்னா, அவருக்கு ஏதாவது பிராப்ளம்னா வீட்டை இடிச்சு கட்டுங்கன்னு தான் சொல்லுவாங்க. ஆனா நம்மளோட ALP அட்சய வாஸ்து ஜோதிடத்தில் அப்படியெல்லாம் கிடையாது. அதுக்கு ஆல்டர்நேடிவ்வா என்ன பரிகாரம்னா சிம்பிளாக எல்லாரும் பண்ணிக்கிற மாதிரி தான் பரிகாரங்களும் இருக்குது. இதுல வந்து ஜாதகத்தை வச்சே நம்ம சொல்றது மட்டும் இல்லாம, வீட்டுக்கு பக்கத்துல என்ன இருக்குது, உதாரணமாக, மால், போலீஸ் ஸ்டேஷன், மேனுஃபாக்சரிங் யூனிட்டு, ஐ.டி. கம்பெனி, கோயில், சர்ச், இந்த மாதிரி என்ன இருக்குதுன்னு, பர்ஃபெக்ட்டா சொல்ல முடியுது.
கழிவறைன்னு எடுத்துக்கிட்டோம்னா நமக்கு அந்த கழிவறை தான், நம்மளுடைய சந்தோஷம் லாபம் பொருளாதாரத்துக்கெல்லாம் முக்கியம். அதனால அதை கிளீனா, ரொம்ப அழகா வச்சுக்கணும்னு, நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சது.
இதை நம்ம புரிஞ்சுக்கிறது மட்டும் இல்லாம, ஒரு இடத்தில வாஸ்து சொல்லும்போது, அவங்களுக்கு இந்த காரணத்தால, இது எப்படி இருந்தா, இந்த பாதிப்பு வரும். இந்த காரணத்தால இப்படி வச்சீங்கன்னா, உங்களுக்கு நல்லா இருக்கும்னு சொல்லும் போது, அவங்களும் அதை உணர்ந்து நல்லா அமைக்கிறாங்க. மற்ற வாஸ்து முறையில் அப்படியே எதிர்பார்க்க முடியாது.
நம்ம ஜாதகத்தை வச்சே சொல்ல முடியும். எந்த மாதிரி இருக்குதுன்னு பாத்தீங்கன்னா, வீட்ல மரங்களை எங்க வைக்கணும், கிணறு எங்க வைக்கணும், டிரைனேஜ் எங்க வைக்கணும், அப்படிங்கறதெல்லாம் நம்ம கிளியரா புரிஞ்சுகிட்டோம்.
இதுல பார்த்தீங்கன்னா, ஒருத்தருக்கு நம்ம வாசல் அமைச்சு கொடுக்கிறோம்னா, ஃபர்ஸ்ட் ALP பாக்கணும். இன்னொண்ணு, அவங்க என்ன தொழில் பண்றாங்களோ, அதுக்கு தகுந்த மாதிரி வாசல் அமைத்துக் கொடுக்கிறது, ரொம்ப முக்கியமான விஷயம்.
பாத்தீங்கன்னா, இன்னொரு விஷயம், கலர்ல எடுத்துக்கிட்டோம்னா ரொம்ப முக்கியமானது, நம்ம ஒவ்வொரு ALP க்கும் பொருத்தமாக, அதற்கு தகுந்த மாதிரி கலர் இருக்குது. அது நல்லது. பத்து வருஷத்துக்கு ஒரு தடவை நம்ம மாத்துறது ரொம்ப நல்ல விஷயம்.
இதுல பரிகாரங்கள்னு பாத்துக்கிட்டோம்னா ரொம்ப ரொம்ப எளிமையான பரிகாரங்களாக இருக்கு. கலர் மாத்துறது, விளக்கு வைக்கிறது, ஸ்கிரீன் போடுறது, சாமி போட்டோ, மேட்டு போடறது, இந்த மாதிரி சின்ன சின்ன, எளிமையான பரிகாரங்கள் தான்.
நார்மல் வாஸ்துங்கறது 25% தான். நம்ம ஜாதகம் 75% பலன் தரும். நம்ம நார்மல் வாஸ்து பார்க்கிறோம் என்றால் 25% தான் சொல்றாங்க. அதனை சக்ஸஸ்ஃபுல்லாக சொல்ல முடிவதில்லை. நம்ம வந்து 100% வச்சு பார்க்கும் பொழுது பெர்பெக்ட்டா சொல்ல முடியுது.
நம்மளுடைய ALP படி லக்னம் மாறும். ஆனால் வீடு மாறாது. அப்போ ஒரு லக்னம் மாறும் போது, சின்ன சின்ன பொருட்களையோ, கலர், இந்த மாதிரி மாத்தி நம்ம வீட்டோட எனர்ஜியை இன்க்ரீஸ் பண்றதுங்கிறது, நம்ம வாஸ்துவோட ஸ்பெஷாலிட்டியே.
இந்த வாஸ்து வகுப்பில், நானும் பங்கு பெற்றேன் என்பது எனக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம்.
நான் மீண்டும் என்னுடைய நன்றியையும் வணக்கத்தையும் பொதுவுடைமூர்த்தி சார் அவர்களுக்கும் சத்யா சார் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்.
o-0-o
அடுத்த, 'ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பு', ஆன்லைன் மூலம், வரும் 10 ஆம் தேதி, மே 2025-ல், துவங்குகிறது. இவ் வகுப்பில் சேர, தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: 𝟗𝟕𝟖𝟔𝟓𝟓𝟔𝟏𝟓𝟔 / 9085855656 .