Subscribe

Blog

ஒவ்வொரு தனி நபருக்கும், வாஸ்து வேறுபடும் என்ற புரிதலைத் தந்த, ALP அட்சய வாஸ்து ஜோதிடத்துக்கு, நன்றி.

வணக்கம்.

என்னுடைய பெயர் அனிதா. நான்  காங்கேயத்தில் வசிக்கிறேன்.

இரண்டு வருஷமா, 2023 -லிருந்து இந்த ALP க்குகுள் பயணித்துக்  கொண்டு இருக்கிறேன். இப்ப ALP அட்சய வாஸ்து ஜோதிட கிளாஸ் முடிச்சு இருக்கேன். இந்த கிளாஸ்  பத்தி என்னுடைய அனுபவங்களை இந்த கட்டுரையில் பதிவிடுகிறேன். 

முதலில் இந்த வாஸ்து கிளாஸ் நேரடி வகுப்பு அப்படின்னு சொன்னாங்க.  நம்ம நேர்ல போய் எப்படி கலந்துக்க போறோம் அப்படின்னு, அதைப் பத்தி கேட்கலை. அப்புறம் ஆன்லைன் அப்படின்னாங்க. அப்பவுமே வந்து எனக்கு வந்து செய்யலாமா, வேண்டாமா,  அப்படின்னு மனசு டபுள் மைண்டாகவே இருந்தது. நாளைக்கு கிளாஸ்னா இன்னைக்கு சாயந்தரம் தான் சாந்தி தேவி மேடம் கிட்ட ட்ரை பண்ணி அப்புறம் சேர்ந்தேன்.

நான் வந்து ALP ஜோதிடம் பாத்துட்டு இருக்கேன். ப்ரொபஷனலா பாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆபீஸ் போட்டு ப்ரொபஷனலா பாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன். 

இப்ப வாஸ்து ஏன் வேண்டாம்னு  நினைச்சேன்னா,  அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. ஒண்ணு நான் ஒரு பெண். இப்ப வாஸ்து பிரச்சனை எல்லாம் ஃபாலோ பண்ணனும்னா பல இடங்களுக்கு போகணும். அது நம்மனால முடியுமா, அப்படிங்கற ஒரு விஷயம்.

அடுத்த ஒரு விஷயம், பொதுவாக வாஸ்து வந்து பரவலாக பொது மக்களுக்கு மத்தியில் தெரியும். எல்லாருக்கும் தெரிஞ்சதென்ன,  குபேர மூலை மேடாக இருக்கணும். வடகிழக்கு மூலை பள்ளமாக இருக்கணும். எந்த மாதிரி கிச்சன் ஸ்லாப் இங்க வரும். லாப்ட் எங்க வரும், அப்படின்னு பொதுவான வாஸ்து எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கு.

அப்ப நான் வந்து, வீடு கட்டி கிரகப்பிரவேசம் வைக்கும் போது, வந்தவங்க, வாழ்த்தினவங்கள விட இங்க வாஸ்து சரியில்ல, இங்க அது சரியில்லை, இங்க இது சரியில்ல, இதை இப்படி வைக்கிறீங்க, அதை மாத்துங்க,  அப்படின்னு சொன்னது தான் அதிகம். இப்ப இந்த வாஸ்து கிளாஸ்க்கு போனாலும் அதுவே நடக்கும், இவங்களும் வந்து இதெல்லாம் இங்க இருக்கக் கூடாது, இதெல்லாம் இடிக்கணும் சொல்லிருவார்களோ என்ற பயம் தான் அதிகம் இருந்தது. 

ஏற்கனவே, இந்த வீட்டுல வந்து எங்கெங்க பிரச்சனை இருக்குன்னு எனக்கு தெரியும். சோ அப்படியெல்லாம் வந்து இடிக்கிறது மாதிரி, இடித்து மாத்தக் கூடிய அளவுக்கு நம்ம பொருளாதாரம் நிலைமை கிடையாது. கஷ்டப்பட்டு இப்ப தான் வீடு கட்டி முடித்திருக்கோம் அப்படிங்கிறப்ப, இந்த வாஸ்து கிளாஸ்க்கு போனா வந்து இங்கேயும் இடிக்க சொல்லிடுவாங்களோ அப்படிங்கற பயம் ரெண்டாவது காரணம். 

இந்த ரெண்டு காரணத்தினாலுமே வந்து நான் சேரலாமா வேண்டாமா என்ற தயக்கமாகவே இருந்துச்சு. சேரவே இல்ல. கடைசில சேரணும்னு நெனச்சு சேர்ந்துட்டேன்.

முதல்ல வாஸ்து கிளாஸ் வந்து அடிப்படை என்ன, எதெல்லாம் எங்க இருக்கணும் அப்படின்னு போச்சு. பிரச்சனை இருக்கே, பிரச்சனை இருக்கே அப்படின்னு மனசுக்குள்ள உறுத்தலாக இருந்தது. 

ஆனாலும் இது எங்க இருக்கணும்? எப்படி இருக்கணும்? இங்க இருந்தா இப்படிக் குறை. ஆனால், அந்தக் குறையினால என்ன பாதிப்புகள் இருக்கும், அப்படிங்கறது முதல்ல இருந்தே தெளிவாக சொல்லிட்டு இருக்காங்க. அதனாலே வந்து கொஞ்சம் சமாதானமாகவே இருந்தது.

அதாவது மேற்கு மூலை மேடாக அப்படின்னு எல்லாருக்கும் தெரியும். எல்லாரும் சொல்லுவாங்க. சரி.  பள்ளமாக இருந்தால் என்ன ஆகும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் பெரிய குத்தம் மாதிரி எல்லாருக்குமே ஆபத்து வரப்போகுது அப்படிங்கற மாதிரி, என்ன இப்படி இருக்கு, என்ன இப்படி இருக்கும்பாங்க? இப்படி இருந்தா என்ன ஆகும்னு கேட்டா தெரியாது. கொஞ்சமா, வாஸ்து தெரிஞ்சவங்களாலேயே வந்து இந்த மாதிரி பிரச்சனைகள் இருக்கு.

ஆனா இவங்க வந்து ALP அட்சய வாஸ்து ஜோதிடத்தில் வந்து, இது இப்படி இருக்கணும். இது இப்படி இல்லனா காரணம் இது, என்று சொல்லித் தந்தார்கள். 

உதாரணமாக சொன்னாலே வந்து, வடகிழக்குல சில விஷயங்கள் இப்படி இருக்கணும். அது இல்லன்னா அவங்க வந்து அந்த வீட்டில அந்த உரிமையாளர் வந்து இருக்க மாட்டாரு. ஃபாரின் அந்த மாதிரி போவாங்க, அப்படின்னு எடுக்கலாம். 

இப்ப அந்த வீட்டுல வடகிழக்கு மூலை எப்படி இருக்கணுமோ, அப்படி இல்ல. இந்த விஷயம் இருக்கக் கூடாது, ஆனா இருக்கு. ஆனா அவர் பாரின்ல ஒர்க் பண்றாரு. அது நல்லாவே இருக்கு. அப்ப அவர் இதை எதுக்கு இடிக்கணும்? இதை எதுக்காக எடுக்கணும்? எதுக்காக மாத்தணும்? இப்ப அவர் பாரின்ல இருக்காரு, அது அவருக்கு ஓகே என்கிற போது, அது அப்படியே இருந்துட்டு போகட்டும். இப்ப அது இருந்தா அவங்க வீட்ல இருக்க மாட்டாங்க. அவங்க இங்க இல்ல. ஃபாரின்ல இருக்காங்க.  

இன்னும், வடக்கு வாசல், கிழக்கு வாசல் தான் நல்லது. கிழக்கு வாசல் தான் நல்லதுன்னு புதுப்புது மூடநம்பிக்கைகள்,  நடை முறைகள், மக்கள் மத்தியில இருக்கு. வடக்கு வாசலும், கிழக்கு வாசலும் வாழ்ந்தால் நல்லது. சைட்டு போட்டா கூட வடக்கு வாசல்,  கிழக்கு வாசல் வீடுகள் விற்று போய்விடும். தெற்கு வாசல் மேற்கு வாசல் விற்க தாமதாகும் அப்படிங்கற மாதிரி இருக்கு.

ஒவ்வொரு ப்ரொபஷன்க்கும், ஒரு வாசல் வந்து நல்லா ஒர்க் அவுட் ஆகும் அப்படிங்கறத சொன்னாங்க. ஏனா எங்களுக்கு அமையறது பூராமே மேற்கு வாசலாகவே அமையும். எங்களுக்கு அப்படி தான் அமைகிறது. ஆனால் எப்படி பார்த்தாலும் எங்களுக்கு அப்படித்தான் அமைந்திருக்கும். 

இது எனக்கு ராசி இல்லையோ அப்படின்னு கூட நான் பீல் பண்ணியிருக்கேன். என்னுடைய கணவர் செய்ற ப்ரொபஷன்க்கு அதுதான் அமையும்னு இருக்கு. அப்ப அது கரெக்டா தான் இருக்கு. இதுல வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை அப்படின்னு இந்த வாஸ்து சம்பந்தமாக என்ன பிரச்சனைகள் இருக்கக்கூடும், என்ன சொல்லிருவாங்களோ அப்படின்னு இருந்த பயம் விலகி விலகி, எனக்கொரு தெளிவு கிடைக்க ஆரம்பிச்சிருச்சு.

ஏன்னா அடிப்படையில் ALP அட்சய  வாஸ்து ஜோதிடத்தில் என்ன சொல்றாங்கன்னா, எப்படி ஜாதகம் என்பது எல்லாருக்கும் பொது கிடையாதோ, அதே போல்  ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி ஜாதகம் இருக்கும். அது மாதிரி ஒவ்வொரு தனி மனிதருக்கும் வாஸ்துவும் தனி.

பாரின்ல இருக்காங்களா,  அவங்களுக்கு வாஸ்து வேற,  அவங்க இங்க வேலை செய்றாங்களா அவங்களுக்கான வாஸ்து வேற,  அவங்க வந்து ஒரு பழைய இரும்பு, பழைய ஏதோ ஒரு பழைய பொருட்கள், டீல் செய்யும் துறையில் இருந்தால், அவர்களுக்கான வாஸ்து வேறுபடும். என் வீட்டுக்காரர், பழைய கம்ப்யூட்டர்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் கம்ப்யூட்டர் விற்கிறார். அவருடைய ப்ரொபஷன்க்கு இந்த மேற்கு வாசல் தான் அமையும் அப்படின்னு இருக்கு. அப்ப அதுதான் அமையுது. 

இப்ப இதுல வந்து வாஸ்து, எந்த வாஸ்து நிபுணர்களும் சரி, எந்த வாஸ்து பார்க்கிறவங்களும் சரி,  பொதுவான வாஸ்து தான் பேசுறாங்க. இது இப்படித் தான் இருக்கணும். இந்த இந்த மூலையில இது இருக்கணும். இந்த வாசல் தான் நல்லது. இந்த வாசல் ப்ரைமரி. அடுத்தது இது, அடுத்தது இது,  இல்லையா, வீட்டை கிழக்கு பார்த்து கட்டிக்கோங்க, இப்படி பொதுவான விஷயம்தான் பேசுறாங்க.

ஆனா நம்ம ALP அட்சய வாஸ்து ஜோதிடத்தில், மிக முக்கியமான அருமையான விஷயமே வந்து, எல்லா திசைகளும் நல்ல திசை தான். எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் பொது கிடையாது. எப்படி ஒவ்வொருத்தருக்கும் ஜாதகம் என்பது தனியாக உள்ளதோ, அது மாதிரி ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவங்களுடைய சூழ்நிலை பொறுத்து, அவங்களுடைய வேலையை பொறுத்து,  வாஸ்துவும் வேற வேற அப்படின்னு புரிய வச்சாங்க. அதுலயே பாதி ரிலீவ் ஆயிருச்சு. நல்ல தெளிவு கிடைச்சது.

அப்புறம் நம்ம சத்யநாராயணன் சார் வந்து, இந்த காரகத்துவங்கள் வந்து பேசிக்ல இருந்தே படிச்சிட்டு தான் இருக்கோம். ஆனா இந்த அளவு மனசில பதிந்தது, இந்த வாஸ்து கிளாஸில் தான். ரொம்ப பதிஞ்சது அதுக்கு காரணம் நம்ம சத்யநாராயணன் சார் தான். இப்ப எதைப் பார்த்தாலுமே,  ஒவ்வொரு பொருளுமே வந்து,  காரகத்துவ ரீதியா பாக்குற மாதிரி, காரகத்துவங்கள் மனசுல பதிஞ்சிருச்சு. 

வாஸ்து, அடிப்படை வாஸ்து, எந்த தொழில் செஞ்சா என்ன என்ன காரகத்துவங்கள் எங்க இருக்கணும்? எங்க இருந்து பாதிக்கப்பட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் அப்படின்னு சொல்லி இருக்காங்க.

சரி, இதுக்கு என்ன பண்றது? அதுவும் சொல்லி இருக்காங்க. உடனே இடிக்கணுமா, உடைக்கணுமா, ரூம் மாத்தணுமா, அதெல்லாம் எதுவும் செய்ய வேணாம். சின்ன சின்ன பரிகாரங்கள்,  ரொம்ப பிராக்டிகலான பரிகாரங்கள், ஒரு சாமி படம்,  ஒரு செம்புக் கம்பி, ஒரு விளக்கு,  ஒரு பெயிண்ட், ஒரு ஸ்கிரீன் போதும். இவ்வளவு இருந்தால் போதும். 

நம்ம வீட்டோட வாஸ்து பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் நம்ம இதை வந்து நிவர்த்தி பண்ணிக்க முடியும். இதுக்கு அப்புறம் ஜாதகம்,  நம்மளுடைய ஜாதகம் எப்படியோ, அப்படித் தான் நம்மளுடைய வேலை அமையும், அப்படித் தான் நம்மளுடைய வாஸ்து அமையும்.

அது மாதிரி நம்மளுடைய ஜாதகத்துல, இப்படி இப்படி எல்லாம் இருந்தா, இந்த மாதிரி தான் அமையும், அமையணும் அப்படின்னு இருக்கு. அப்படிங்கும் போது சில விஷயங்கள் எதெல்லாம் சரி பண்ணிக்க முடியுமோ, ஜாதகத்தையும் வாஸ்துவையும் ஒப்பிட்டு சரி பண்ணிக்கலாம். சில விஷயங்கள் சரி பண்ணிக்க முடியாது, அதை ஏத்துக்கலாம். இப்படி இந்த மாதிரி ஒரு முழுமையான கிளாஸ் ஆக இருந்தது.

ஜோதிடமும் சரி, வாஸ்துவும் சரி,  எனக்கு தெரிஞ்சதெல்லாம் ALP மட்டும்தான். எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு மற்ற முறைகளை கம்பேர் பண்ணி பேசுற அளவுக்கு மற்ற முறைகள் எல்லாம் தெரியாது. எனக்கு தெரிஞ்சது மொத்தமே வந்து ALP தான். இருக்கிற ஒரே ஒரு குரு பொதுவுடைமூர்த்தி ஐயா மட்டும்தான். 

அப்படி இருக்கும் போது, எனக்கு கம்பேர் பண்ணி சொல்ற மாதிரி தெரியல. ஆனா பேசிக்குவாங்க இல்லையா,  வாஸ்து பத்தி பேசும்போது, நம்ம பில்டர் ஓரளவு பேசுவாங்க, அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க பேசுவாங்க,  அவங்க எல்லாரும் சொல்றது வந்து எல்லாருக்கும் பொதுவான வாஸ்து. ஆனா அது கிடையாது. 

வாஸ்துங்குறது வந்து, தனிப்பட்ட மனிதன், ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறானது. அவங்க உள்ளூர்ல இருக்காங்களா, வெளியூர்ல இருக்காங்களா, என்ன வேலை செய்றாங்க, ஆண் குழந்தை இருக்கா, பெண் குழந்தை இருக்கா,  இப்படி பல விஷயங்களை வைத்து தான் ஒவ்வொரு மனுஷனுக்கும் வாஸ்துங்குறது வேற,  இதுதான் நம்ம ALP அட்சய வாஸ்து ஜோதிட கிளாஸோட, ரொம்ப ஆச்சரியப்படக் கூடிய ஒரு விஷயம். அப்புறம் நம்ம ஜாதகத்துக்கும், நம்ம வாஸ்துக்கும் அவ்வளவு பொருந்தி போகுது.  

பரிகாரங்கள் ரொம்ப சுலபமானதாக இருக்கு. இடித்து, உடைத்து, கட்ட எல்லாம் வேண்டாம். இந்த மூணு விஷயங்களும் இந்த ALP அட்சய வாஸ்து ஜோதிடத்தில், நிறைவாக இருந்தது. ஒரு முழுமையான கிளாஸ் அட்டென்ட் பண்ணமாதிரி இருந்தது.

அவ்வளவுதான்!  வேறென்ன வேணும்!

வாஸ்துக்குள்ள எங்க எது இருக்கணும்னு தெரிஞ்சிருச்சு,  யாருக்கு எப்படி இருக்கணும்னு தெரிஞ்சுருச்ச, அவங்க ஜாதகத்துக்கும் வாஸ்துவிற்கும் உள்ள தொடர்பு தெரிஞ்சிருச்சு,  இதை எப்படி சரி பண்ணனும்னு தெரிஞ்சுருச்சு, இனி என்ன தெரியணும்? 

அதனால நான் ஜாதகம் படிச்சேன். பார்க்கிறேன். ப்ரொபஷனலா யூஸ் பண்றேன்,  என்கிறதை விட,  இந்த வாஸ்து வகுப்பு வந்து எனக்கு ஒரு முழுமையான மனத் திருப்தியையும், நிறைவையும் தந்திருக்கு.  மன பயத்தையும் நீக்கியது. நம்ம வீட்ல இப்படி இருக்கே, நம்ம நிலத்துல இப்படி இருக்கே,  ஏதாவது ஆகுமா, ஆகுமோ, என்கிற பயத்த நீக்கிருச்சு. ரொம்ப சிம்பிளா பரிகாரம் பண்ணிக்கலாம். சிம்பிளா ஒரு படம் மாட்டிக்கலாம். என்னோட மனசுல இருந்த பெரிய பாரமே நீங்கின மாதிரி இருக்கு.

ஒரு முழுமையான விஷயத்தை கத்துக்கிட்ட மாதிரியான திருப்தி,  எனக்கு இந்த வகுப்பு மூலமா கிடைச்சது. இந்த வாய்ப்பை கொடுத்த ஐயா பொதுவுடைமூர்த்தி அவர்களுக்கும், வகுப்பை சிறப்பான முறையில் நடத்தித் தந்த சத்யநாராயணன் சார் அவர்களுக்கும் ரொம்ப நன்றி. மேலும் இந்த ALP க்கு உள்ள என்னை கொண்டு வந்த,  இயற்கைக்கு ரொம்ப நன்றி.

நன்றி.

o-0-o

அடுத்த, 'ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பு', ஆன்லைன் மூலம், வரும் 10 ஆம் தேதி, மே 2025-ல், துவங்குகிறது. இவ் வகுப்பில் சேர, தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: 𝟗𝟕𝟖𝟔𝟓𝟓𝟔𝟏𝟓𝟔 / 9085855656 .
 


About author

RADHAKRISHNAN

ALP ASTROLOGER KUNTIKANA RADHAKRISHNA BHAT KERALA



Comments


Leave a Reply

Subscribe here

Scroll to Top