
வணக்கம்.
நான் சின்னதுரை தர்மபுரியில் இருந்து.
கடந்த 10 ஆண்டுகளாக சிவில் இன்ஜினியராக ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுபோல எட்டு வருஷமாக வாஸ்து நிபுணராகவும் ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன். வாஸ்துபடி வந்து ட்ராயிங் பில்டிங்க்கு, ஸ்கூலுக்கு, ஆபீஸ்க்கு, இதெல்லாம் டிராயிங் பண்ணி, வாஸ்துபடி டிராயிங் பண்ணி கொடுத்துட்டு இருக்கேன்.
சவுத் இந்தியன் முறைப்படி வாஸ்து படிச்சிருக்கேன். அது படி தான் நான் டிராயிங் எல்லாம் பண்ணி கொடுத்துட்டு இருந்தேன். அவங்க என்ன சொல்லி இருப்பாங்கன்னா, கிழக்கு பக்கம், வடக்கு பக்கம் அதிகம் இடம் விடணும், இடைவெளி விட வேண்டுமென்று முறை (method) இருந்தது.
இதுவே அப்ளை பண்ணி பார்த்தோம்னா, சிட்டி சைடுல அந்த மாதிரி பண்ண முடியல. சிட்டி சைடுல கிழக்கு பக்கம், வடக்கு பக்கம் இடம் விடணும் சொல்லுவாங்க. ஆனா ஒட்டிக்கிட்டு தான் இருக்கு. அந்த மாதிரி பில்டிங்கில் எல்லாம் ஆண்கள் வந்து அதிகமா வசிக்க மாட்டாங்க, ஆண்களுக்கு பிரச்சனை வரும்னு சொல்லுவாங்க. ஆனா நான் போய் பார்க்கும்போது, ஆண்கள் நல்லவிதமாக தான் இருந்தார்கள். கவர்மெண்டு வேலையில், நல்லா வேலை பண்ணிக்கிட்டு இருந்தாங்க.
அங்க என்னுடைய வாஸ்து வந்து ஏதோ ஒரு தப்பா இருக்கு அப்படிங்கிறத உணர்வு வந்தது. எனக்கு இன்னும் அனுபவம் வேணுமா, இல்ல இன்னும் வாஸ்து மெத்தட் நிறைய கத்துக்கணுமா அப்படின்னு இருந்துச்சு. அதுபோல நான் நிறைய இடங்களில் இந்த பேசிக் அறிவை வைத்து வாஸ்து பார்க்க போகும் போது ராங்காகவே இருந்தது.
இதுக்கு மேல வேற என்ன கத்துக்கலாம்னு பார்க்கும் போது, நார்த் இந்தியன் மெத்தட்ல எல்லாம் சொல்லிக் கொடுக்குறாங்க அப்படின்னு சொன்னாங்க. அங்க போயும் அதுவும் கத்துக்கிட்டேன். அது பார்த்தீங்கன்னா கோயில், பெரிய பெரிய மால்ஸ், இதெல்லாம் இப்படித் தான் இருக்கணும்னு சொன்னாங்க. அதுவும் இதுவும் ஒரே டிசைன் போல தான் இருந்தது. ரெண்டுக்கும் பெரிய டிஃபரென்ஸ் இல்ல.
அப்போ இதை வைத்து பார்க்கும் போது, எனக்கு 50% தான் ரிசல்ட் இருந்தது. இதுக்கு மேலயும் ஏதோ இருக்கணும், எல்லா அனுபவமும் இருக்கணும், அப்படிங்கிற மாதிரி நிறைய தேடுதல்கள் இருந்தது.
இப்ப எப்படின்னா, ஈசானிய மூலைல வந்து செப்டிக் டேங்க்கோ டிரைனேஜ் இருந்தா அங்க ஆண்களுக்கு பிரச்சனைனு சொல்லுவாங்க. ஆனா சிட்டி சைடுல அந்த மாதிரி தான் இருக்கு.
நைருதி மூலைல சம்ப் இருக்க கூடாது. போர்வெல் இருக்க கூடாதுன்னு சொல்றாங்க. ஆனா இருக்கு. ஆனா அங்க ஆண்கள் அந்த வீட்டில் நல்லாத்தான் இருக்காங்க.
அக்னி மூலையில் கட் ஆனா பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனை, கேன்சர் பிரச்சனை வரும்னு சொல்லுவாங்க.
இதெல்லாம் நிறைய ஆய்வு பண்ண, ஒரு சில இடத்தில் இருக்கு. ஒரு சில இடத்துல இல்ல. அப்ப ஏதோ ஒண்ணு இருக்கு. இத பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும்னு தேடுதல் இருக்கும் போது தான், ஒரு சிலர் என்ன சொன்னாங்கன்னா, வாஸ்துகாரருக்கு வாஸ்து மட்டும்தான் தெரியும். ஜோசியக்காரருக்கு ஜோசியம் மட்டும்தான் தெரியும்னு.
அப்போ ஜாதகம் படிச்சா இதெல்லாம் இருக்குமா? அப்ப ஜாதகம் படிக்கலாம்னு சொல்லி எனக்குள்ள ஒரு யோசனை வந்துச்சு. அப்ப ஜாதக தேடுதல் இருந்தது. ஜாதகம் படிக்கனும் அப்படின்னா ஒரு மூணு வருஷம் அஞ்சு வருஷம் ஆகும் கத்துக்கிறதுக்கு அப்படின்னு சொன்னாங்க. இப்ப இதைவிட ஷார்ட்டா எங்க கத்துக்க முடியும் என்ற தேடுதல் இருந்தது. நான் தேடும் போது, ALP வகுப்பு பற்றி பேஸ்புக்ல வந்துச்சு. 15 நாள்ல நீங்க ஜோசியம் கத்துக்கலாம், அப்படின்னு சொல்லிட்டு, உடனே அந்த நம்பருக்கு கால் பண்ணேன். சாந்தகுமார் சார் போன் எடுத்தாரு. அவரிடம் சொன்னேன், சார் நான் வந்து வாஸ்து நிபுணரா இருக்கேன். ஜோசியம் கத்துக்கலாம்னு இருக்கேன், அப்படின்னு. அதற்கு அவர், வாப்பா கத்துக்கலாம்னு சொன்னாரு.
உடனே 15 நாளில் அடிப்படை ALP ஜோதிட வகுப்பில் படித்தேன். இது படிச்சாலே உங்களுக்கு தெளிவு, கிடைக்கும். உங்களுக்கு இன்னும் தெளிவு வேணும்னா அட்வான்ஸ் படிக்க வேண்டும், அப்படின்னு சொன்னாங்க. அதுக்கு மேல உயர்நிலை வகுப்பு, நான் போய் படிச்சேன்.
உயர்நிலை வகுப்பு முடித்த உடனே, அப்போ என்ன பண்ணேன்னா, ஜாதகமும் வீட்டினுடையவாஸ்துவும் எடுக்க ஆரம்பிச்சேன். அப்படி எடுக்கும் போது எனக்கு என்ன பண்ணுதுன்னா, எனக்கு ஒரு 80% பலன் வர ஆரம்பிச்சது.
இப்ப இதிலிருந்து என்ன தெரியுதுன்னா, ஜாதகருக்கு தான் வாஸ்து ஒர்க் அவுட் ஆகுது. அப்ப ஜாதகருக்கு தகுந்த மாதிரி தான் வீடு அமையும் என்று கத்துகிட்டேன்.
அதன் பின் ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பில் சேர்ந்தேன். இந்த 15 நாள் வகுப்பில் சில நாட்கள் சென்ற பின், 10% - 20% புரிதல் கம்மியாக இருந்தது.
அதன் பின், அந்த ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பில், சத்யா சார் அப்படியே இன்ச் பை இன்ச் ஆக கிளாஸ் ஒவ்வொன்னும் ஒவ்வொரு ஸ்டெப் பை ஸ்டெப்பா நடத்துனாரு. அப்ப அந்த பத்து பர்சன்டேஜ் புரிதல் இல்லாமையும் தீர்ந்து, விளக்கம் கிடைத்தது.
ஒரு ஜாதகருக்கு இந்த திசையில் வந்து இந்த டைம்ல வந்து பாத்தீங்கன்னா, பிரச்சனை கொடுக்குமான்னா கொடுக்கும். அப்ப நம்ம அதுக்கு தகுந்த மாதிரி, ஜாதகத்தை பார்த்து திசையை பார்த்து மாத்திக் கிட்டோம்னா, நல்லா இருக்கும் அப்படின்னு இந்த கிளாஸ்ல தெரிய ஆரம்பிச்சது.
நீங்களும் வாஸ்து படிக்க ஆர்வம் இருந்தால் நீங்க ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்புக்கு வாங்க. 15 நாள் படிங்க.
இல்ல எனக்கு பில்டிங் மட்டும்தான் வாஸ்து பாக்கணும் அப்படின்னா, உங்களுக்கு ஜாதகத்தை வச்சு உங்க வாஸ்து பலன் பார்க்கலாம். நீங்கள் ALP அட்சய வாஸ்து ஜோதிட நிபுணரை அணுகி பாத்தீங்கன்னா, வீட்டுக்கு வாஸ்து பாருங்க.
இல்ல இப்ப தான் வீடு கட்ட போறீங்க அப்படின்னா, ALP அட்சய வாஸ்து ஜோதிட நிபுணரை அணுகி, உங்க ஜாதகத்தை வைத்து உங்க ப்ளான் வாங்குங்க.
இது இந்த மெத்தட்ல நீங்க பண்ணும் போது உங்களுக்கு வந்து பாத்தீங்கன்னா மணி சேவ் ஆகப் போகுது. டைம் சேவ் ஆகப் போகுது.
பில்டிங் உடைக்காமல் உங்களால் கட்ட முடியுமான்னா, கட்ட முடியும். கட்டின வீட்டுக்கு உடைக்காமல் சொல்யூஷன் கொடுக்க முடியுமான்னா, இந்த ALP அட்சய வாஸ்து ஜோதிட முறையில் வந்து கொடுக்க முடியும்.
இந்த கலையைக் கற்றுக் கொடுத்த, வாக்குயோகி பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போல சத்யநாராயணன் சார் அவர்களுக்கும், சாந்தகுமார் சார் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
o-0-o
அடுத்த, 'ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பு', ஆன்லைன் மூலம், வரும் 10 ஆம் தேதி, மே 2025-ல், துவங்குகிறது. இவ் வகுப்பில் சேர, தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: 𝟗𝟕𝟖𝟔𝟓𝟓𝟔𝟏𝟓𝟔 / 9085855656 .
>