
வணக்கம்.
என்னுடைய பெயர் செல்வமணி. நான் வசிக்கிறது மும்பையில.
சமீபத்துல ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பு அட்டென்ட் பண்ணினேன்.
இந்த வகுப்பு, ALP ஜோதிட கண்டுபிடிப்பாளர். டாக்டர். பொதுவுடைமூர்த்தி சார் அவர்களால், உருவாக்கப்பட்டது.
ஏற்கனவே நான், அட்சய லக்ன பத்ததி ALP ஜோதிடம் அடிப்படை வகுப்பு, அட்வான்ஸ் வகுப்பு, இரண்டும் முடித்திருக்கிறேன். அடிப்படை வகுப்பு ரொம்ப மிகப் பெரிய ஒரு புரிதல். அட்வான்ஸ் வகுப்பு ஒரு பிரம்மாண்டம். இத படிச்ச உடனே அடுத்தது என்ன கிளாஸ், அப்படின்னு எதிர்பார்த்திருந்தோம். ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பு வரும்னதுமே எப்ப வரும்ன்னு எதிர்பார்த்து இருந்தோம். கரெக்டா வந்த உடனே, உடனே ஜாயின் பண்ணிட்டோம்.
அப்போ இதனால என்ன என்று பார்த்தோம்னா, சமீபத்துல, இந்த ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பு அட்டென்ட் பண்றதுக்கு முன்னாடியே நான் ஒரு வீடு வாங்கி இருக்கேன். சொந்த வீடு வாங்கினோம்.லோன் போட்டு வாங்கினோம். அந்த வீட்டோட வடிவமைப்பு எப்படி இருக்கு அப்படின்னு பார்க்கும் போது, இந்த வகுப்பில் கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்கும் போதே, உங்களுடைய ஜாதகத்தில், உங்களுடைய ALP லக்னம் என்ன போகுதோ அதற்கு தகுந்தாற் போல தான் வீட்டினுடைய அமைப்பு அமையும் அப்படிங்கிறது அவ்வளவு துல்லியமா வந்துச்சு. எனக்கு சமீபத்தில் தான், ALP லக்னம் தனுசு லக்னத்தில் இருந்து மகர லக்னத்திற்கு மாறினது. என்னுடைய வீடு சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு கேது பகவானோடு தொடர்பு உள்ளது. அப்போ எனக்கு அமைந்த வீடும் பார்த்தீங்கன்னா, அதற்குத் தகுந்தாற் போல, சிறு வீடு, ஒரு அனுமன் கோயில், இப்படி எல்லாம் அந்த வீடு வாங்குற இடத்துல சம்பந்தப்பட்டது. இப்போ இதுல இருந்தே புரியுது, ALP அட்சய வாஸ்து ஜோதிடத்தில் சொல்லியுள்ளபடி எப்படி இவ்வளவு துல்லியமாக நமக்கு வீடு அமையுது, என்பது. இருக்கிற இடத்திலிருந்தே, இந்த விஷயங்கள் அவ்வளவு சொல்லும் போது ஒத்துப் போகுதே.
என்னுடன் வகுப்பு அட்டென்ட் பண்ணவங்க எல்லாருக்கும் பார்த்தீங்கன்னா, அவங்களுடைய லக்னம், அவர்களுடைய நட்சத்திரம், அவர்களுடைய கிரகம், எப்படி இருக்கோ, அதற்கு தகுந்தாற் போல தான் அவங்க வீடு அமைஞ்சிருக்கு. அதுலயும் பாத்தீங்கன்னா, எந்தெந்த இடங்கள் எல்லாம் நமக்கு வீட்ல பிரச்சனைக்குரிய இடங்களா இருக்கும் அப்படிங்கிற ஒரு விஷயத்தை, ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்புல அவ்வளவு துல்லியமா சொல்லிக் கொடுத்தார்கள். அதே போல் கரெக்டா அதே இடங்களில் அந்த பிரச்சனைகள் இருக்கு. அப்படித் தான் அவங்களுக்கு அந்த பிரச்சனைகள் வருது.
அதே போல, என்னுடைய கிராமத்துல கிராமத்து வீடு இருக்கு. அங்க என்னுடைய தாயார் இருக்காங்க. என்னுடைய தாயார், மனம் சார்ந்த பிரச்சினைகளுக்காக மருந்து எடுத்துக்கிட்டு இருக்காங்க. என்னுடைய தாயார் தங்கி இருக்கிற கிராமத்து வீட்டிலேயே, அதே போல வாஸ்த்துவில், அந்த இடத்துல, மனம் சார்ந்த பிரச்சனைகளுக்குரிய விஷயங்கள் தெள்ளத் தெளிவா காமிக்குது. வாஸ்து வந்து, நேரடியா நம்மளுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை, ஒரு விஷயத்தை உருவாக்குது, அப்படிங்கிறத அவ்வளவு துல்லியமாக, இது படம் போட்டு காமிக்குது.
அதே போல பிரச்சினைகள் இருந்துச்சுன்னா, அந்த பிரச்சனையில் இருந்து வெளி வருவது எப்படி அப்படிங்கிறது முக்கியம் இல்லைங்களா? இந்த வகுப்பில அந்த பரிகாரம்ன்னு சொல்லக் கூடிய மாற்றங்கள் என்ன பண்ணனும், என்ன பண்ணுனா நமக்கு ஏற்படக் கூடிய விஷயங்களில் இருந்து, விளைவுகளில் இருந்து தப்பிக்கிறது அப்படிங்கிற விஷயங்களையும், இந்த வகுப்பில நமக்கு பெரிய செலவு இல்லாமல், சிறு சிறு சின்ன சின்ன செலவுகள் செய்து, சின்ன சின்ன மாற்றங்கள் செய்து, நாம எப்படி பண்ணிக்கலாம், என்பதை எளிமையாக, அனைவருக்கும் புரியும் வண்ணம் சொல்லிக் கொடுத்தார்கள்.
அதே போல, தெருக்குத்துன்னு சொல்லக் கூடிய விஷயங்கள் சிலருக்கு நிறைய இடங்களுக்கு அமையும். இந்த தெருக்குத்து விஷயங்கள், நம்ம வீடுகள்ல எப்படி சரி பண்ணிக்கிறது. அதே போல செடிகள் வளர்க்கிறது மூலமாக, மற்ற சின்ன சின்ன விஷயங்கள் மூலமாவே நம்மளுடைய வாழ்க்கையில எப்படி மாற்றத்தை கொண்டு வருவது என்பதும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இந்த கிளாஸ் எடுக்கிற ஆசிரியர் பார்த்தீங்கன்னா திரு. சத்திய நாராயணன் சார் அவர்கள், ஒரு குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கிறது மாதிரி ரொம்ப பொறுமையாக அவ்வளவு அழகாக சொல்லிக் கொடுக்கிறதுனால, நல்லா தெளிவா மனதில் பதியுது.
அதே போல, நான் இப்போ இருக்கிற வீட்டில், எனக்கு என்னென்ன விஷயங்கள் எல்லாம் பாதிப்பு இருக்கு என்பதை நான் பாக்கிறப்போ, கரெக்டா அந்தந்த இடங்கள்ல, துல்லியமான பிரச்சனைகள் அப்படியே படம் போட்டு காண்பித்த்து ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பு. அதன் பின், அதுல இருந்து எப்படி வெளி வருவது அப்படிங்கிற விஷயங்களை, ஒவ்வொரு மாணவருக்கும் சொல்லிக் கொடுத்தார்கள்.
என்னுடைய வாழ்க்கையில இந்த ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பு மிகப் பெரிய லெவல்ல ஒரு உதவியாய் இருக்க போகுது அப்படிங்கிறதை, நான் படிக்கும் போதே தெரிஞ்சுகிட்டேன்.
மக்கள் தங்களுடைய வாழ்க்கையில வர பிரச்சனைகளை முன்னாடியே தெரிஞ்சிக்கிட்டு, அதன் மூலமாக, இது அவங்க வாழ்க்கையில அப்ளை பண்றது மூலமா, ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் அப்படிங்கிறது என்னுடைய ஆணித்தரமான கருத்து.
மக்கள் யாரெல்லாம் எனக்கு வீடு சரியில்ல, நான் இந்த வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் தான் இந்த பிரச்சனை வந்தது அப்படின்னு நாம ஃபீல் பண்ணோம் அப்படின்னா உங்களோட ALP ஜாதகத்துல பார்த்தோம்னாலே, உங்க வீட்ல எந்தெந்த இடங்களில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கும் என்பதை ஒரு ALP அட்சய வாஸ்து ஜோதிட நிபுணர் ரொம்ப தெளிவா சொல்லிக் கொடுத்துடுவாங்க. அதற்கான எளிய, அதிக செலவு வைக்காத தீர்வுகளையும் சொல்லிக் கொடுப்பார்கள். அதனால நீங்க படிங்க. நம்மளுடைய வாழ்க்கையில மாற்றத்தை உண்டாக்க நாமே படிச்சு, நாமே, நம்முடைய மாற்றங்களை ஏற்படுத்திக்கிறது ரொம்ப வசதியா இருக்கும் அப்படிங்கிறது என்னுடைய வேண்டுகோள்.
திரு பொதுவுடைமூர்த்தி சார் அவர்களுக்கும், ஆசிரியர் திரு சத்ய நாராயணன் அவர்களுக்கும், ஏனைய ஆசிரியர்களுக்கும், கோச்களுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி. வணக்கம்.
o-0-o
அடுத்த, 'ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பு', ஆன்லைன் மூலம், வரும் 10 ஆம் தேதி, மே 2025-ல், துவங்குகிறது. இவ் வகுப்பில் சேர, தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: 𝟗𝟕𝟖𝟔𝟓𝟓𝟔𝟏𝟓𝟔 / 9085855656 .