
எல்லோருக்கும் வணக்கம்.
என் பெயர் ரமேஷ்.
நான் வந்து பெங்களூர்ல இருந்து பேசுறேன். நான் வந்து இந்த ALP அட்சய லக்ன பத்ததியில் என்டர் ஆனது வந்து 2024 ஜனவரி மாசம். அப்ப தான் ALP பேசிக் சேர்ந்து முடிச்சுட்டு, நாலாவது மாசமே ALP அட்வான்ஸ் வகுப்பில் சேர்ந்து, அட்வான்ஸ் நல்லபடியா முடிச்சு, நல்லா ஜாதகம் பார்த்துட்டு இருக்கேன். நிறைய ஜாதகம் பார்த்துட்டு இருக்கேன். கிட்டத்தட்ட 350 ஜாதகங்கள் பார்த்துள்ளேன். நல்லா வந்துகிட்டு இருக்கு. அட்சய லக்ன பத்ததி முறையில் நம்ம பார்த்து சொல்ற பலன் ஒவ்வொன்றும் அவ்வளவு துல்லியமாக இருக்குங்க.
இதற்கிடைல வந்து, இந்த எட்டாம் தேதி மார்ச், அன்று ALP அட்சய வாஸ்து ஜோதிடம் வகுப்பு ஆரம்பிச்சாங்க. திருவாதிரை நட்சத்திரம் அன்னைக்கு ஆரம்பிச்சாங்க. பஞ்சபூத தத்துவத்தோட வகுப்பு ஆரம்பிச்சது.
முதல் நாள் வாஸ்து வகுப்பில், ஒரு வீடு வந்து எப்படி இருக்கக் கூடாது அப்படிங்கறத ஃபர்ஸ்ட் சொன்னாங்க. வாஸ்து குறைபாடு உள்ள வீடுகள் எப்படி இருக்கும் அப்படிங்கறது துல்லியமாக ஒவ்வொரு பாயிண்ட்டா சொன்னாங்க. சத்யா சார் தான் கிளாஸ் எடுத்தாரு.
வாஸ்துன்னா என்ன என்று எனக்குத் தெரியாது. அப்படிப்பட்ட நம்மளை வந்து, எட்டு திக்குகளையும் சொல்லி புரிய வைத்து, ஜாதகத்தை வச்சே நம்ம வாஸ்து சொல்ல போறோம் எனும் போது எவ்வளவு பெருமையா சந்தோஷமா இருக்கும், தெரியுங்களா.
முதல் நாள் கிளாஸ் பாத்தீங்கன்னா, வாஸ்து குறைபாடு உள்ள வீடுகள் எப்படி இருக்கும்? அப்புறம், ஏதாவது வீட்டுக்கு வாஸ்து பார்க்க பல தடைகள் வந்துச்சுன்னா, நம்ம மனசு சரியில்லன்னா, வீட்டில் கண்டிப்பாக வாஸ்து குறைபாடு இருக்கும்கிற பேசிக் விஷயத்தை புரிய வச்சது.
அப்புறம் வீட்ல ரெகுலரா செய்யக் கூடிய காரியங்கள், என்னென்ன விஷயங்கள் செய்யணும்? சிம்பிளா ஒரு விளக்கு ஏத்துறதுல இருந்து, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதுல இருந்து, டாய்லெட்ட சுத்தமா வச்சுக்கிட்டாலே நம்ம பணக் கஷ்டம் வராது அப்படிங்கற அடிப்படை விஷயங்கள் புரிய வச்சது.
அப்புறம் முக்கியமாக லிஸ்ட் அவுட் பண்ண சொன்னது. வீட்டில் உள்ளதை லிஸ்ட் அவுட் பண்ண சொன்னது. எப்படி லிஸ்ட் அவுட் பண்றது, சிம்பிளா புரிய வச்சாருன்னா, ஒரு பொருளை ஆறு மாசம் நம்ம உபயோகப்படுத்தலன்னா, அது நமக்கு தேவையில்லாத பொருள். அது வந்து வீட்ல வேஸ்ட்டா வாங்கி வச்சிருக்கோம் அப்படின்னு புரிய வச்சாரு. அதை ஒரு லிஸ்ட் அவுட் எடுக்க சொன்னாரு. இரண்டாவது நாம நம்ம வீட்டை நம்மளை சுத்தம் பண்ணிக்கிறது, மனசுக்கு ரொம்ப சந்தோஷத்தைத் தரும். சுத்தம் செய்வதால் நமக்கு பெரிய மாற்றங்கள் ஏற்படும் அப்படிங்கிறத மனதார உணர முடிஞ்சது.
அப்புறம் வாஸ்து புருஷன் யார், நாலு திசைகள், எட்டு திக்குகள், ஒரு மனை எப்படி இருக்கணும், எப்படி இருக்க கூடாது, ஒரு மனை வந்து கிராசா இருந்துச்சுன்னா என்ன பண்ணனும், கட் ஆகி இருந்துச்சுன்னா என்ன பண்ணனும், எல்லா விஷயங்களையும், அவ்வளோ அற்புதமாக சொல்லிக் கொடுத்தாங்க. சொல்லிக் கொடுத்து புரிய வச்சாங்க. சொல்லிக் கொடுத்தார்கள் என்பதை விட நம்ம மனசுல ஆழமாக பதிய வச்சது.
அப்புறம் பார்த்தீங்கனா, ஜெனரலா வாஸ்து நிபுணர் வராங்கன்னா, இந்த திசை, இந்த திக்கு,அத மட்டும் தான் சொல்வாரு. இதை உடைக்கணும், இதை இடிக்கணும், இந்த பக்கம் வரக் கூடாது அப்படின்னு தான் சொல்லுவாங்க. அதற்கான காரண காரியங்களை அவரால் சொல்ல முடியாது. அப்படி இருக்கும் போது, நம்ம ALP அட்சய வாஸ்து ஜோதிடத்தில், காரண காரியங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், நட்சத்திரப் புள்ளிகள் உடன் இணைத்து சொல்லும் போது, அதனுடைய பலன் வந்து எப்படி இருக்கும் அப்படிங்கிறத, அவ்ளோ அற்புதமாக புரிய வச்சாரு.
அப்புறம் நம்ம ஒரு ஜாதகத்தை வைத்து, அந்த வீட்டோட தன்மைகள் எப்படி இருக்கும், அந்த ஜாதகர் எப்படி இருக்காரு, அவர் என்ன வேலை செய்வாரு என, 75% ஜாதகம் பேசும். மீதி 25% தான் வாஸ்து பேசும்கிறதை அருமையா புரிய வச்சாங்க.
ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் எவ்வளவு உயரமா இருக்கணும், கலர் என்ன கலர் அடிக்கணும், ஏன் அந்த கலர் அடிக்கணும், அந்த கலர் அடிப்பதால் என்னென்ன பயன்கள், அந்த கலர் அடிக்காததால் என்ன தீமைகள், அப்படிங்கறத அவ்ளோ அற்புதமாக, ரொம்ப தெளிவா, புரிய வச்சாரு.
அப்படியே நம்மளே ஒரு ALP அட்சய வாஸ்து ஜோதிட நிபுணர்ன்னு சொல்லும் போது எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுங்களா.
அதே மாதிரி பாத்தீங்கன்னா அதாவது அதிகமாக செலவு இல்லாம, நம்ம இருக்குற தன்மையில் இருந்து, நம்ம வாஸ்து குறைபாடுகளை சரி பண்ணிக்கலாம் அப்படிங்கிறத, அவ்ளோ அற்புதமாக புரிய வைத்தார்கள். அதே மாதிரி பார்த்தீங்கன்னா, வீட்ல என்ன பெயிண்ட் அடிக்கலாம்? என்ன கலர் அடிக்கலாம்? பத்து வருஷத்துக்கு ஒரு முறை வீட்டை பெயிண்ட் அடிக்கணும். வீட்டுக்கும், சுவர்க்கும் உயிர் இருக்குன்னு, சொல்ல வச்சு புரிய வைத்தார்கள்.
அவ்ளோ அற்புதம். உதாரணமா என்னைய எடுத்துக்கங்களேன், எனக்கு சமீபத்தில் ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஆச்சு. எதனால் ஆச்சு என்று புரியவே இல்லை. இந்த ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பு போகும் போது தான், இதற்கான காரணம் புரிஞ்சது. என்னோட ஹாலில் ஒரு காட் போட்டு இருப்பேன், திவான் மாதிரி. அதுல படுத்து தூங்குவேன். அதுல படுத்து தூங்குனா என்ன பிரச்சனை வரும்னு சொன்ன உடனே அதை லிங்க் பண்ணி பார்த்தோம்னா, அவ்வளவு துல்லியமாக பொருந்தி வருது. நம்ம ஹாலில் பெட் போட்டு படுக்கக் கூடாதுனு சொல்லிப் புரிய வச்சது.
அப்புறம் டாய்லெட். ஏன் சுத்தமாக ட்ரையா இருக்கணும்? டாய்லெட் சுத்தமாக இல்லன்னா என்ன குறைபாடுகள் ஏற்படும்? அப்படின்னு சொல்லி புரிய வச்சாரு. ரொம்ப, ரொம்ப, அற்புதமாக இருந்துச்சு.
ஒவ்வொரு மாடி படிக்கட்டுல இருந்து, சின்ன டீடைல் மொதக் கொண்டு, அவ்வளவு டீடெயிலா, விளக்கமாக, ஆணி அடிக்கணுமா? அடிக்க கூடாது என்றால் ஏன்? அதுக்கு பதிலா என்ன பண்ணலாம்? ஒரு கடிகாரம் மாட்டலாமா? மாட்டக் கூடாதா? ஒரு காலண்டர் மாட்டலாமா? மாட்டக் கூடாதா? பீரோ எந்த பக்கம் இருக்கணும்? இந்த பக்கம் இருந்தா என்ன பிரச்சனை வரும்? நம்ம சரி பண்றதுக்கு, வாஸ்து குறைபாடுகள் சரி பண்றதுக்கு என்ன பண்றது? அப்படின்னு ஒவ்வொன்றும் அவ்வளவு டீடெயிலாக துல்லியமாக புரிகிற மாதிரி, பாமர மக்களுக்கு புரிகிற மாதிரி சொல்லி குடுத்தாங்க.
பாமர மக்களுக்கே புரியதுன்னா, நம்ம ALP அட்சய வாஸ்து ஜோதிடம் படிச்ச மக்களுக்கு எவ்வளவு புரியும்!
அந்த வீட்டோட தன்மைகள், அந்த வீட்டோட இளம் பெண் பாதிக்கப் பட்டிருந்தால் எதனால் பாதிக்கப்பட்டிருக்காங்க? வயதானவர்க்கு நோய் வருதுன்னா, எதனால அவங்களுக்கு பாதிப்பு வருது? அந்த ஆணோட தன்மை, அந்த வீட்டோட தலை மகன் பாதிக்கப்பட்டிருந்தால் சரியாக இயங்க முடியல, அந்த குழந்தைகள் இயங்க முடியலன்னா என்ன காரணம்? இத வந்து நம்ம ALP ஜாதகத்தை வச்சு, அந்த வீட்டோட தன்மைகளை நம்ம சொல்லும் போது, கண்டு பிடிக்கும் போது, நமக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கு.
இப்ப என்னிடம் வர்ற ஜாதகங்கள், ஜாதகர் கிட்ட சொல்லிடறேன். உங்க வீட்டில் இந்த மாதிரி உள்ளதா, உங்க வீட்டுல இந்த ரூம்ல இது மாதிரி போட்டு இருக்கீங்களா, அப்படின்னு சொல்லும்போது அவங்க ஆச்சரியப்படுறாங்க.
என்ன சார்! எங்க வீட்டுக்கு நீங்க வந்தது கிடையாது. நான் இருக்கிறது எவ்வளவு கிலோமீட்டர் தள்ளி. ஜாதகத்தை வைத்து நீங்க எப்படி தெளிவாக சொல்றீங்க, அப்படின்னு ஆச்சரியப்படுறாங்க. அப்படின்னு ஆச்சரியப்படும் போது நம்ம குருநாதர் கண் முன்னாடி வராரு.
எல்லோரும், இந்த ALP அட்சய வாஸ்து ஜோதிடம் கிளாஸ் படிக்கணும். அட்சய லக்ன பத்ததி அடிப்படையை, அட்வான்ஸ் வகுப்பை துல்லியமாக படித்து உள் வாங்கிய பிறகு, அப்புறம் ALP அட்சய வாஸ்து ஜோதிடம் படிக்கும் போது, நம்மளை நாமே வந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
ஏன்னா, இப்பல்லாம் வாஸ்து நிபுணர் என்கிற பெயரில் வந்து, நடைமுறையில் பாத்தீங்கன்னா வாஸ்து பார்ப்பவர்களுக்கு ஜாதகம் தெரியாது. ஜோதிடம் தெரியாது.
ஆனால் வாஸ்து நிபுணருக்கும் ஜோதிடம் தெரிய வேண்டும்கிற அடிப்படை விஷயமே, இந்த ALP அட்சய வாஸ்து ஜோதிடம் மூலமாக நம் குருநாதர் புரிய வச்சிருக்காரு.
ஒவ்வொரு சிவில் இன்ஜினியருக்கும் இது தெரியணும். யார், யார் கன்ஸ்ட்ரசன் லைன்ல இருக்காங்களோ, இந்த ALP அட்சய வாஸ்து ஜோதிடம் படிக்கணும். அவ்வளவு முக்கியமான விஷயம் இது.
இந்த அட்சய லக்ன பத்ததிக்குள்ள வந்தது பெரும் பாக்கியம். ஏன்னா, எனக்கு தெரிஞ்ச நண்பர் தான், எனக்கு அறிமுகம் பண்ணி வச்சாரு. அவர் மூலமாக தான் இந்த ALP க்குள்ள வந்தேன். வந்த பிறகு எவ்வளவு புரிதல், எனக்குள்ள பல மாற்றங்கள்.
அப்புறம் இந்த ALP அட்சய வாஸ்து ஜோதிடத்தின் உள்ளே வந்த பிறகு பல மாற்றங்கள். போன வாரம் எல்லாம் எனக்கு தேவையில்லாத பொருள்களை எடுத்து வைக்கிறேன். ஒரு வண்டி அளவிற்கு சேர்ந்து இருக்கு. அப்ப வீட்ல டென்ஷன், டென்ஷன், அவங்களால டென்ஷன், இவங்களால டென்ஷன்னு புலம்பிகிட்டு இருந்தேன். பார்த்தால் ஜாதகரான நானே டென்ஷனை உருவாக்கி வச்சிருக்கேன் என்பது தான் இந்த ALP அட்சய வாஸ்து ஜோதிடம் மூலமாக தெரியுது.
இப்படி ஒரு அற்புதமான புரிதலை ஏற்படுத்திக் கொடுத்த உயர் திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கும், ALP அட்சய வாஸ்து ஜோதிடம் கிளாஸ் அவ்வளவு அழகா தெளிவா, நார்மல் ஸ்பீட்ல ஒவ்வொருவருக்கும் புரியற மாதிரி கிளாஸ் எடுத்த சத்யநாராயணன் சார் அவர்களுக்கும் நன்றி நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோரும் வாங்க, ALP அட்சய வாஸ்து ஜோதிடம் படிக்க.
அதே மாதிரி சிம்பிள் விஷயம் விளக்கு ஏத்துறது, எந்த நேரத்தில் ஏத்தணும்? பீரோவை எந்த இடத்துல வைக்கணும்? அந்த இடத்தில் வைக்க முடியலையா, ஆல்டர்னேட்டா என்ன பண்ணலாம்? ஒரு சின்ன உண்டியலை வைத்து, அதுக்கு சாம்பிராணி காமிக்கிறதுன்னு, இப்படி, சின்ன சின்ன பரிகாரங்கள், விஷயங்கள், பரிகாரங்கள் சொல்லும் போது அவ்வளவு அற்புதமானதாக இருந்தது.
இந்த ALP அட்சய வாஸ்து ஜோதிடம் படித்து நானும் ஒரு வாஸ்து நிபுணர் என்று சொல்லிக் கொள்வதில் ரொம்ப பெருமைப் படுகிறேன். இந்த பெருமை எல்லாமே எனது அருமை குருநாதர் பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கும், சத்யநாராயணன் சார் அவர்களுக்கும் மற்றும் அனைத்து குருமார்களுக்கும், என் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோரும் வாழ்க வளமுடன்! எல்லோரும் வாங்க! அட்சய லக்கன பத்ததி படிங்க! ALP அட்சய வாஸ்து ஜோதிடம் படிங்க! நம்ம வாஸ்துவ நாமே சரி பண்ணிக்கலாம். நம்ம குறைகள் என்னென்னன்னு நமக்கு தான் தெரியும். இன்னொருத்தர் கிட்ட போய் கேட்டு தெரிஞ்சுக்கிறதை விட, நம்மளே சரி பண்ணிக்கிறது தான் நமக்கு அவ்வளவு சிறப்பாக இருக்கும்.
வாழ்க வளமுடன்.
நன்றி.
o-0-o
அடுத்த, 'ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பு', ஆன்லைன் மூலம், வரும் 10 ஆம் தேதி, மே 2025-ல், துவங்குகிறது. இவ் வகுப்பில் சேர, தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: 𝟗𝟕𝟖𝟔𝟓𝟓𝟔𝟏𝟓𝟔 / 9085855656 .