
எல்லோருக்கும் வணக்கம்.
என்னுடைய பெயர் சாந்தி. கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பேசுறேன்.
நான் அக்டோபர் 2024-ல ALP ஜோதிட கிளாஸ் அட்டென்ட் பண்ணேன். இந்த கிளாஸ் அட்டென்ட் பண்ணதுக்கு அப்புறம், நிறைய மாற்றங்கள், புரிதல் எல்லாமே என் வாழ்க்கைல நடந்துச்சு. அதுக்கப்புறம் அடுத்தடுத்த கிளாஸ் எல்லாமே அட்டென்ட் பண்ணேன். எல்லாமே ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தது.
ALP அட்சய வாஸ்து ஜோதிட பற்றி கிளாஸ் கேள்விப்பட்டு, உடனே அதுல ஜாயின் பண்ணேன். ரொம்ப புரிதல். ரொம்ப நல்லா இருந்துச்சு. ஐயா பாத்தீங்க அப்படின்னா, சத்யநாராயணன் அய்யா அவ்வளவு அற்புதமா சொல்லிக் கொடுத்தார். அதாவது வாஸ்துன்னா எனக்கு பேசிக்கா எதுவுமே தெரியாது. இப்ப இந்த கிச்சன் வந்து தென் கிழக்கு மூலையில் இருக்கணும் அப்படிங்கிறது யாருமே இந்த மாதிரி புரிய வைத்திருக்க முடியாது. அந்த அளவுக்கு அவரு அவ்ளோ அழகா புரிய வச்சாரு. ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப நுணுக்கமா சொல்லிக் கொடுத்தார்.
இந்த புரிதல் எனக்கு எந்த மாதிரி ஒரு மாற்றத்தை உருவாக்குச்சின்னு அப்படின்னு பாத்தீங்கன்னா, எனக்கு நீண்ட காலமா ஒரு பிரச்சனை இருந்துச்சு. ஒரு லேண்ட் சம்பந்தமா ஒரு பிரச்சனை இருந்தது. அது பாத்தீங்க அப்படின்னா, வீட்ல வந்து மணி பிளான்ட் வச்சுட்டு இருந்தோம் ரொம்ப வருஷமா. அது எடுத்து வச்சிருங்க. அப்படின்னு வகுப்பில் சொல்லி இருந்தாங்க. அது எடுத்து வச்ச அடுத்த நாளே பாத்தீங்கன்னா, உங்களுக்கு அந்த பிரச்சனை சால்வாக போகுதுங்க அப்படின்னு அந்த பிரச்சனைக்குரியவர் கிட்ட இருந்து எனக்கு மெசேஜ் வருது. என்னால நம்பவே முடியல. ஏன்னா அவ்வளவு பெரிய பிரச்சனை அதனால ஏகப்பட்ட இஸ்யூஸ் எனக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு.
இதுக்கு அப்புறம் பார்த்தீங்க அப்படின்னா, ஆபீஸ்ல வந்து புதுசா ஒரு பில்டிங் ஷிப்ட் ஆகி வேற ஆஃபீஸ் இடம் மாறி போனோம். அந்த புது ஆபீஸ்க்கு போனதுக்கு அப்புறம், ஒரு திசையில் உட்கார்ந்து நான் ஆபீஸ் ஒர்க் எல்லாமே பார்த்துட்டு இருக்கும் போது, எனக்கு அந்த ஒரு பத்து பன்னிரெண்டு நாள் பாத்தீங்க அப்படின்னா, பயங்கரமான பிரச்சனைகள். டெய்லி கன்ஸ்யூமர் கம்ப்ளைன்ட். ஏதாவது ஒரு இஷ்யூ. சம்பந்தமே இல்லாம, மேல் இடத்துல அதிகாரிகள் கிட்ட நான் திட்டு வாங்குறது. ஏகப்பட்ட குழப்பங்கள், தொந்தரவுகள் நிறைய இருந்தது. எனக்கு புரியவே இல்லை. இந்த மாதிரி எல்லாம் நமக்கு நடக்காது, எப்படி இது நடக்குது, அப்படின்னு யோசித்தேன். எனக்கு இது மாதிரி ஏன் நடக்குது அப்படின்னு ALP அட்சய வாஸ்து ஜோதிட கிளாஸ் அட்டென்ட் பண்ணதுக்கு அப்பறம் புரிந்தது. அதுக்கப்புறம், ALP அட்சய வாஸ்து ஜோதிட கிளாஸில் சொன்னபடி, ஆஃபீஸில் நான் உட்காரும் திசையை மாத்தி உட்கார்ந்தேன். அடுத்த நாள் பார்த்தீங்கன்னா, அதுக்கு நேர் ஆப்போசிட் எல்லாமே. இந்த மாதிரி எனக்கு பிரச்சனை பண்ணவரே என்கிட்ட வந்து சாரி கேட்கிறார். என்னால நம்பவே முடியல, ஆச்சரியமாக இருந்துச்சு. நாங்க தெரியாம தப்பு பண்ணிட்டோம். உங்கள பத்தி தப்பான கருத்தை எல்லார் கிட்டயும் சொல்லிட்டோம். உங்க அதிகாரிகள் கிட்ட எல்லாம் சொல்லிட்டோம். நாங்க மன்னிப்பு கேட்டுக்குறோங்க, அப்படின்னு சொன்னாங்க. எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பில் படிச்சு புரிஞ்சுகிட்டு பண்ண ஒரு விஷயம், நமக்கு ஒரு சின்ன விஷயமா இருந்தா கூட, அது மிகப் பெரிய ஒரு பாதிப்பிலிருந்து வெளி வரக்கூடிய விஷயத்தை நமக்கு கத்து கொடுத்துச்சு. இது வந்து ஒரு உதாரணமா தான் நான் சொல்லி இருக்கேன்.
இதுக்கு அப்புறம் பாத்தீங்கன்னா, என்னுடைய நண்பர் ஒருத்தர். அவருக்கு இதே மாதிரி ஆபீஸ்ல இஸ்யூ. சரி என்ன அப்படின்னு அவர் வீட்டுக்கு போய் பார்க்கும் போது. அவர் வீட்டில் அவர் ஜாதக ரீதியா பெருசா எந்த தொந்தரவும் இல்லை. ஆனா அவருடைய வீட்டுல பாத்தீங்கன்னா படிக்கட்டு உள்ள வந்திருந்தது. அது எங்களுக்கு ALP அட்சய வாஸ்து ஜோதிட கிளாஸ்ல சொல்லி கொடுத்த மாதிரியே அது இருந்தது. என் நண்பரிடம் நான் இதனை சொன்னேன். இந்த மாதிரி பண்ணி பாருங்க கண்டிப்பா உங்களுக்கு மாற்றம் இருக்கு அப்படின்னு சொன்னேன். அவரும் ஃபாலோ பண்றேன் அப்படின்னு சொல்லி இருந்தார்.
ஆக இந்த மாதிரி எல்லா விஷயங்களும், அதாவது நம்ம ஜாதகத்தையும் வாஸ்துவையும் சேர்த்து படிக்கும் போது, ALP அட்சய வாஸ்து ஜோதிட படிச்சதனால் என்ன ஆகுது அப்படின்னா, ஈஸியா பலன் எடுத்து சொல்ல முடிஞ்சது. என்னுடைய லைஃப்ல எனக்கு ஒரு அஸ்ட்ராலஜர் தப்பான வழிகாட்டுதல் காட்டி அதன் மூலமாக நிறைய கடன் உருவாச்சு எனக்கு. ஆனா, நான் அதிலிருந்து மீள முடியுமா, முடியாதான்னு நெனச்சிட்டு இருக்கும் போது, இந்த வகுப்பு அட்டென்ட் பண்ணேன். அப்போ இருந்த புரிதல் கொஞ்சம். இன்னும் இந்த ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பில் சேர்ந்து படிக்கும் போது, மிகப் பெரிய புரிதலை உருவாக்குச்சு. எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருந்துச்சு. நான் தூங்குறதிலிருந்து எல்லாமே எனக்கு பாசிட்டிவ்னெஸ் கொடுத்தது.
உண்மையாலுமே இந்த வகுப்பு கொடுத்த நம்ம பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு முதல்ல நன்றி சொல்லிக்கணும். அவர மாதிரி ஒரு குரு இல்லைன்னா ஜோதிடம் வந்து தப்பாவே எல்லாமே புரிஞ்சிக்கிற மாதிரி தான் இருந்திருக்கும். இது அந்த மாதிரி இல்ல. இது ஒரு நல்ல விஷயம். இது நாம நன்றாக பயன்படுத்தணும். நல்ல விதமா கொண்டு போகணும் அப்படிங்கிற அவருடைய உயர்ந்த நோக்கம் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது. ஏன்னா நம்மளும் அதே மாதிரி தான், ஆப்போசிட்ல, அதாவது தப்பான எந்த ஒரு விஷயத்தையும் நாம பண்ணக் கூடாது அப்படின்னு நினைக்கிற ஆளு. இது சரியான நேரத்தில், சரியான விதத்துல அமைஞ்சது, ரொம்ப பயன் கொடுத்தது.
அதுக்கப்புறம், சத்யநாராயணன் அய்யாவை சொல்லணும். அவரை மாதிரி எல்லாம் ஒரு வாஸ்து நிபுணரை எல்லாம் உலகத்துல யாரையுமே பார்க்க முடியாது. அந்த மாதிரி எப்படி சொல்றதுன்னே தெரியல, அவ்வளவு பெர்பெக்ட்டா இந்த வகுப்புக்கு அவர் கரெக்டா இருக்கிறார். அவரை மாதிரி யாருமே இதை கொண்டு போக முடியாது. நாங்க 186 பேர் படிச்சோம். 186 பேருமே நாங்க சரியான புரிதலோடு இருக்கிறோம்கிறது மிகப் பெரிய விஷயம். இந்த பிரபஞ்சத்திற்கும், பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கும், என்னுடைய பெற்றோர்களுக்கும், என்னுடைய குழந்தைகளுக்கும், இங்கு எல்லாருக்குமே நான் நன்றி சொல்லிக்கிறேன். இது மிகப்பெரிய விஷயம். இந்த ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பில் சேரச் சொன்ன என்னுடைய ALP கோச் சின்னத்துரை ஐயா அவர்களுக்கு ரொம்ப நன்றி தெரிவிச்சுக்கிறேன். அவர் தான் என்னை ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பில் படிக்க சொன்னாரு.
ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு. எல்லாருமே இதை பயன்படுத்திக்கணும்.
எல்லாருக்குமே நன்றி. வணக்கம்.
o-0-o
அடுத்த, 'ALP அட்சய வாஸ்து ஜோதிட வகுப்பு', ஆன்லைன் மூலம், வரும் 10 ஆம் தேதி, மே 2025-ல், துவங்குகிறது. இவ் வகுப்பில் சேர, தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: 𝟗𝟕𝟖𝟔𝟓𝟓𝟔𝟏𝟓𝟔 / 9085855656 .