
எங்களது அட்சய லக்ன பத்ததி குழு ஒரு நாள் ஒரு கோயிலுக்கு சென்று கர்ப்ப கிரகத்திலிருந்து வரும் இறை சக்தி கதிர்வீச்சினை பெற்று, பிரகாரத்தை முடித்து திண்ணை போல் இருந்த கருங்கல் தூண்களில் சாய்ந்தபடி அமர்ந்தோம். நாங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து கர்ப்பகிரகம் ஆனது தோராயமாக 40 அடி இருக்கும்.
அங்கே ஒரு வயதான அம்மா பிரகாரத்தை சுற்றி சுற்றி வருவதும், தயக்கத்தோடு கடவுளிடம் விண்ணப்பம் வைப்பதுமாக இருந்தார்கள். இந்த வயதான அம்மாவை திடீரென வாக்குயோகி அவர்கள் அழைத்தார்கள். அந்த அம்மா அருகே வந்து “என்னப்பா” என்று கேட்க, வாக்குயோகி அவர்கள், தரையில் இருந்த ஒரு சிறு கல்லினை எடுத்து அந்த அம்மாவிடம் கொடுத்து "இந்தாங்கம்மா!! இந்த கல்ல வச்சு வீட்ல சாமி கும்பிடுங்க. உங்க பேரன் நல்லா பரீட்சை எழுதிருவான். பாஸ் பண்ணிடுவான். கவலைப்படாதீங்க" என்றார்.
பிள்ளையாரிடம் விண்ணப்பம் வைத்தால், பிள்ளையார் இங்கே வந்து உட்கார்ந்து விட்டாரா என்ற வியப்போடு அந்த வயதான அம்மா ஒன்றும் புரியாமல், தான் கோயிலுக்கு வந்த நோக்கத்தை எப்படி இவர் தெள்ளத் தெளிவாக கூறுகிறார் என்று யோசித்த வண்ணம் "ஆமாய்யா!! என் பேரனுக்கு படிப்பே வர மாட்டேங்குது....! அவன் எப்படி படிச்சு பாஸ் பண்ண போறான் என்ற கவலை... சரி கோவிலுக்கு வந்து பிள்ளையார்கிட்ட வேண்டினாலாவது அவன் பாஸ் பண்ணிட மாட்டானா என்கிற நம்பிக்கையில், நான் கோவிலுக்கு வந்தேன்.... ரொம்ப நல்லது ஐயா... உங்க வாக்குப்படி என் பேரன் பாஸ் பண்ணிட்டானா போதும்" என்றார்!"
அந்த வயதான அம்மா இந்த வரிகளை வாக்குயோகி ஐயா அவர்களிடம் சொல்லும் பொழுது இடை இடையே தலையை சுற்றிப் பார்த்தபடி தன் பிரச்சினையை யாராவது இவரிடம் சொல்லிவிட்டார்களா? என்ற சந்தேகத்துடன் கூறி மொழிந்தார். அன்றிலிருந்து என்னிடம் தொடர்பில் இருந்த அந்த வயதான அம்மா ஒருநாள், "சின்ன கல்லா இருந்தாலும் வாக்குயோகி சொன்னதால், பிள்ளையாரா நினைச்சு பூஜை செய்து வந்தோம். ஐயா சொன்னது போல என் பேரன் பாஸ் ஆயிட்டான்!!!” என்று சொல்லி மகிழ்ந்தார்.
முட்டாளாக ஜனனம் எடுத்த காளிதாசனுக்கு சரஸ்வதி தேவி அருள் பாலித்து, அவரை உலக மகாகவி காளிதாசன் என்று ஆக்கியது போல், எந்தத் தரவுகளும் இல்லாமல், எவருடனும் உரையாடல் நடக்காமலும், இதுதான் இந்த வயதான அம்மாவின் வேண்டுதல் என்று அறிந்து, கர்ப்பகிரகத்தில் வீற்றிருக்கும் பிள்ளையாரே வந்து வாக்கு யோகி அவர்கள் காதில் சொன்னது போல, ஒரு சிறிய கல்லை வைத்துக் கொண்டு, புதன் பகவானுடைய அருளை அந்த வயதான அம்மாவின் வேண்டுதலுக்காக அவர் வீட்டிற்கு அனுப்பி வைத்த வாக்கு யோகி அவர்களின் இறை சக்தியை எப்படி கணக்கிடுவது !
𝐑𝐄𝐆𝐈𝐒𝐓𝐄𝐑 𝐍𝐎𝐖 𝐅𝐎𝐑 𝐀𝐋𝐏 𝐀𝐒𝐓𝐑𝐎𝐋𝐎𝐆𝐘 𝐁𝐀𝐒𝐈𝐂 𝐂𝐋𝐀𝐒𝐒 𝟏𝟎 𝐌𝐀𝐘 𝟐𝟎𝟐𝟓
𝐂𝐀𝐋𝐋 / 𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏: 𝟗𝟕𝟖𝟔𝟓𝟓𝟔𝟏𝟓𝟔 /𝟗𝟑𝟔𝟑𝟎𝟑𝟓𝟔𝟓𝟔
#alpastrologer #alpastrology #alpbook #rasipalangal #Rasipalan #dailyrasipalan #onlinecoaching #onlineshopping #onlinelearning #vastutips #vastu #aanmeegam #aanmeegamtips #timetravel